TA/Prabhupada 0064 - சித்தி என்றால் பூரணத்துவம் நிறைந்த வாழ்க்கை



Lecture on SB 6.1.15 -- Denver, June 28, 1975

கிச்சித் என்றால் 'ஒருவர்' "மிக அரிதாக." "ஒருவர்" என்றால் "மிக அரிதாக" வாசுதேவ பராயணா என்ற நிலையை அடைவது சுலபமான ஒரு விஷயம் அல்ல நேற்று நான் விளக்கியது போல, பகவான் கிருஷ்ணன் சொல்கிறார்: யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி மாம் தத்த்வத, மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே (பகீ 7.3) சித்தி என்றால் வாழ்க்கையின் பரிபூரணத்துவம் பொதுவாக யோக கலையின் அஷ்ட-சித்திகளாக எடுத்துகொள்வார்கள் அணிமா, லகிமா, மஹிமா, ப்ராப்தி, சித்தி, ஈசித்வ, வஸித்வ, ப்ராகாம்ய ஆக இவைகள் சித்திகள் எனப்படுகின்றன. யோக சித்தி. யோக சித்தி என்றால் நீங்கள் ஆக சிறியதைவிட சிறியதாகலாம் நம்முடைய பரும அளவு உண்மையில் மிகவும் சிறியதாகவே உள்ளது. ஆகையினால், யோக சித்தியினால், இந்த சரீரத்தை வைத்திருந்தும், ஒரு யோகி மிக சிறிய அளவினை அடையலாம், அவரை நீங்கள் எங்கே இறுக்கி வைத்தாலும், அவர் அங்கிருந்து வெளியே வந்திடுவார் இதற்க்கு அணிமா சித்தி என்று பெயர். இதைப்போலவே, மகிமா சித்தி, லகிமா சித்தி, என்றெல்லாம் உள்ளது பஞ்சை விட அவர் இலேசாகிடலாம். அந்த யோகிகள், மிகவும் இலேசாக ஆயிடுவர்கள். இன்றும் இந்தியாவில் யோகிகள் இருக்கிறார்கள். நமது சிறுவர் பருவத்தில் நாங்கள் ஒரு யோகியை பார்த்தோம், அவர் என் தகப்பனை அணுகி வந்தார். அவர் சில விநாடிகளிலே பல இடங்களுக்கு சென்று அடைய முடிந்ததாக சொல்லிருந்தார். சில சமையங்களில், காலையில், ஜகன்னாத் புரி, ஹரித்வார், ராமேஸ்வரம் போன்ற க்ஷேத்திரங்களுக்கு சென்று கங்கை போன்ற தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வார்கள் இதற்க்கு பெயர் லகிமா சித்தி. நீங்கள் மிகவம் இலேசாக ஆயிடுவீர்கள் முன்பு அவர் சொல்லுவார்: "நாங்கள் நம் குருவோடு உட்கார்ந்திருப்போம். வெறும் தொட்டுக்கொண்டு" "நாங்கள் இங்கு உட்கார்ந்திருக்கிறோம் , சில விநாடிகளிலே நாங்கள் வேறு இடத்தை அடைந்து உட்கார்ந்திருப்போம் " இதற்க்கு லகிமா சித்தி என்று பெயர் . ஆக, பல யோக சித்திகள் இருக்கின்றன. இந்த யோக-சித்தியை கண்டு மக்கள் வியப்படைகிறார்கள். ஆனால் கிருஷ்ணன் சொல்கிறார், யததாம் அபி ஸித்தாநாம்: (ப கீ 7.3) "யோக சித்தியை பெற்ற அத்தகைய சித்தர் பலரில்," யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி மாம் தத்த்வத (ப கீ 7.3), "ஒருவர் என்னை புரிந்துகொள்ள முடிகிறது." ஆகையினால் ஒருவர் பல யோக சித்திகளை அடைந்திருக்கலாம; அவ்வாறு இருப்பினும் கிருஷ்ணனை புரிந்துகொள்ள முடியாது அது சாத்தியமில்லை கிருஷ்ணனுக்கே அனைத்தையும் அர்பணித்தவர்களால் மட்டுமே கிருஷ்ணன் புரிந்துக்கொள்ளப்படுகிறார். ஆகையினால் கிருஷ்ணன் கேட்கிறார், கோரிக்கையிடுகிறார், சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் (ப கீ 18.66) கிருஷ்ணன் தனது தூய பக்தருக்கு மட்டும் புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கிறார், வேறு எவருக்கும் இல்லை.