TA/Prabhupada 0119 - ஆன்மீக ஆன்மா என்றும் நித்தியமானது

Revision as of 08:10, 27 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.1-10 and Talk -- Los Angeles, November 25, 1968

பிரபுபாதர்: ஆம். ஸ்ரீமதீ: வயது என்றால் அதுதானா, ஆத்மா உடலை விட்டு படிப்படியாக பிரிவதனால், நாமும் படிப்படியாக முதுமை அடைகிறோமா? பிரபுபாதர்: இல்லை, ஆன்மா முதுமை அடைவதில்லை. இந்த உடல் மாறுகிறது. அதுதான் இயற்கையின் செயல்முறை. அது விளக்கப்படும், தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (பகவத் கீதை 2.13). ஆன்மா நித்தியமானது. உடல் தான் மாறிக்கொண்டிருக்கிறது. இதை புரிந்துகொள்ள வேண்டும். உடல் மாறிக்கொண்டிருக்கிறது. அது அனைவருக்கும் புரியும். எப்படி என்றால், உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் உடல் ... இந்த குழந்தையைப் போல் தான், அது வேறு உடல். பிறகு இந்த குழந்தை ஒரு இளம் பெண்ணாக வளர்ந்த பிறகு, அது வேறு உடலாக இருக்கும். ஆனால் இந்த உடலிலும் சரி, அந்த உடலிலும் சரி, அதே ஆன்மா இருக்கிறது. ஆன்மா மாறுவதில்லை, இந்த உடல் மாறுகிறது என்பதற்கு இதுதான் ஆதாரம். இதுதான் ஆதாரம். நான் என் குழந்தை பருவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் குழந்தை பருவத்தில் இருந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, மேலும் நான் குழந்தையாக இருந்தபோது செய்தது எல்லாம் இன்னுமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் குழந்தை பருவத்தில் இருந்த அந்த உடல் இன்றைக்கு இல்லை. அது போய்விட்டது. ஆக என் உடல் மாறிவிட்டது, ஆனால் அந்த "நான்" என்பவன் இன்னும் மாறவில்லை, என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. அப்படி தானே? இது சுலபமான உண்மை. ஆக இந்த உடல் மாறினாலும், நான் அப்படியே இருப்பேன். நான் மற்றொரு உடலுக்குள் நுழையலாம், அதனால் பரவாயில்லை, ஆனால் நான் அப்படியே இருப்பேன். ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (பகவத் கீதை 2.13). தற்போதைய சூழ்நிலையிலும் என் உடல், மாற்றம் அடைவது போல், அந்த இறுதிகட்ட உடல் மாற்றம் ஏற்படுவதனால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. நான் மற்றொரு உடலுக்குள்... அதுவும் விளக்கப்பட்டிருக்கிறது, வாஸாம்ஸி ஜீர்ணானி யதா (பகவத் கீதை 2.22), நான் இருக்கும் இடத்தை மாற்றுகிறேன். உதாரணத்திற்கு, நான் சன்யாசியாக இல்லாத போது, பொதுவாக ஒரு கண்ணியமானவரைப்போல் ஆடைகளை அணிந்திருப்பேன். இப்பொழுது நான் என் ஆடையை மாற்றிவிட்டேன். அதற்காக நான் இறந்துவிட்டதாக அர்த்தம் ஆகாது. இல்லை. நான் என் உடலை மாற்றிவிட்டேன், அவ்வளவுதான். நான் என் ஆடையை மாற்றிவிட்டேன்.