TA/Prabhupada 0088 - எங்கள் இயக்கத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு, செவி வழி கேட்டு, அவர்கள் பொருள் அறிந்து கொள்
Lecture on BG 7.1 -- San Diego, July 1, 1972
பிரம்ம தேவர் அவருடைய அனுபவத்தை சொல்கிறார் ... அவர் தான் பௌதிக உலகின் மிக உயர்ந்த உயிர்வாழி. அவர் கூறுகிறார், " ஒருவன் தனது, ஊகித்து அறியும், முட்டாள்தனமான பழக்கத்தை கைவிட்டால் ..." ஞானே பரயாஸம் உதபாஸ்ய. அவன் மிகவும் தாழ்மையுடன் இருக்க வேண்டும். தாம் ஒரு அறிவாளி, தன்னால் ஊகித்து அறிய முடியும், கற்பனையில் புதிதாக ஒரு கருத்தை உருவாக்க முடியும், என பிரகடனம் செய்யும் வகையில் நடக்கக்கூடாது. உதாரணத்திற்கு, தம்மை விஞ்ஞானிகள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள், வெறும் ஊகித்தலில் தனது உழைப்பை வீணாக்குகிறார்கள். உங்களால் எதுவுமே செய்ய முடியாது. அனைத்தும் முன்பே சீரமைக்கப்பட்டது. உங்களால் அதை மாற்ற முடியாது. நம்மால் வெறும் அந்த விதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கத்தான் முடியும்; நம்மால் முடிந்தது அவ்வளவுதான். ஆனால் இயற்கையின் விதிகளை நம்மால் மாற்றவும் முடியாது, அதன் தாக்கலை சாதகமாக திசைத்திருப்பவும் முடியாது. இல்லை. அதை உங்களால் செய்ய முடியாது. தைவீ ஹ்யேஷா குண—மயீ மம மாயா துரத்யயா (பகவத் கீதை 7.14). துரத்யயா என்றால் முடியாத காரியம். ஆக, சைதன்ய மஹாபிரபுவிடம் பிரம்மாவினுடைய இந்த வாக்கியத்தை தெரிவித்தபோது, அதாவது ஒருவன் கற்பனையால் ஊகித்து தனது சொந்த கருத்தகளை உருவாக்கும் எண்ணத்தை கைவிடவேண்டும் ... இந்த முட்டாள்தனமான பழக்கங்களை விட்டுவிட வேண்டும். அவன் ஒரு புல்லை விட தாழ்மையுள்ளவனாக இருக்கவேண்டும். நாம் புல்லின் மேல் காலால் மிதித்துச் செல்கிறோம்; ஆனால் அது எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. "பரவாயில்லை. நீங்கள் போகலாம்." அது மாதிரியான பணிவு. த்ருணாத் அபி ஷுநீசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா. தரு என்றால் மரம். மரம் எவ்வளவு பொறுமையாக அனைத்தையும் தாங்கிக் கொள்கிறது. எனவே சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், ஞானே பரயாஸம் உதபாஸ்ய நமந்த ஏவ... அதாவது, "தங்களது ஆசைப் படியே, நான் ஊகித்தறியும் முறையை கைவிட்டு, பணிவுள்ளவனாக ஆவேன். பிறகு என்னுடைய அடுத்த கடமை என்ன?" அடுத்த கடமை: நமந்த ஏவ, பணிவுடன் இருப்பது, ஸன்-முகாரிதாம் பவதீய-வார்தாம், பக்தராகிய ஒருவரை நீ அணுக வேண்டும், பிறகு அவரிடமிருந்து கேட்டறிய வேண்டும். ஸ்தானே ஸ்திதஹ . நீங்கள் உங்கள் நிலையிலேயே இருங்கள். நீங்கள் அமெரிக்கர்களாகவே இருங்கள். இந்தியர்களாகவே இருங்கள். கிறித்துவர்களாகவே இருங்கள். இந்துவாகவே இருங்கள். கருப்பினத்தவராகவே இருங்கள். வெள்ளையர்களாகவே இருங்கள். ஆணாக, பெண்ணாக, யாராக இருந்தாலும் அப்படியே இருங்கள். மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவர்கள் வழங்கும் உபந்நியாசங்களை காது கொடுத்து கேட்டாலே போதும். இதுதான் பரிந்துறைக்கப்படுகிறது. மேலும் நீங்கள் அதை கேட்கும்பொழுது, அதை சிந்தித்தும் பார்க்கவேண்டும். எப்படியென்றால், இப்போது நீங்கள் என்னுடைய பேச்சை கேட்கிறீர்கள். அதேநேரம் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், அதாவது "சுவாமிகள் என்ன சொல்ல வரார் ...?" ஸ்தானே ஸ்திதஹ ஷ்ருதி-கதாம் தனு-வான்-மனோபிஹி. ஷ்ருதி-கதாம். ஷ்ருதி என்றால் காது வழியாக கேட்டறிவது. உங்கள் உடல், மனம் அனைத்தையும் கொடுத்து சிந்திக்க முயன்றால், பிறகு நேரம் வரும்போது நீங்கள் ... ஏனென்றால், உங்கள் இலக்கு, தன்னுணர்வை அடைவது. தாம் என்றால் பரமாத்மாவும் தான். அந்த பரமபுருஷரான முழுமுதற் கடவுள், பரமாத்மாவும் அவர்தான். நாம் அவருடைய அம்சங்கள். ஆக இந்த செயல்முறையை பின்பற்றுவதால், சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், கடவுள், அஜித, யாராலும் வெல்ல முடியாதவர் ... அவரை சவால் விடும் மனப்பான்மையுடன் அறிய விரும்பினால், உங்களால் அவரை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. கடவுள் சவால்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் கடவுள் மிக உயர்ந்தவர், உங்களது சவால்களை அவர் என் ஏற்று கொள்ள வேண்டும்? "என் அன்பு கடவுளே, தயவுசெய்து இங்கே வாருங்கள். நான் உங்களை பார்த்தாக வேண்டும்," இப்படி நீங்கள் கேட்டால், கடவுள் உங்களது ஆணையை நிறைவேற்ற மாட்டார், அவர் அப்படி கிடையாது. நீங்கள்தான் அவரது ஆணைக்கு கீழ்படிய வேண்டும். அதுதான் கடவுள் உணர்வை அடையும் முறை. பகவான் கூறுகிறார்: "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்," சர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). அந்த முறையில் நீங்கள் கடவுளை அறியலாம். "கடவுளை நானே அறிந்து கொள்வேன். என்னிடம் நல்ல புத்தி இருக்கிறது, ஊகித்தறிவேன்." அப்படி கிடையாது. ஆக இந்த காதால் கேட்பது ... நாம் கேட்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். காதால் கேட்பது என்பது மிக முக்கியமான வழி முறை. நமது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைத்தும், பரவியது எப்படியென்றால், நம்மிடம் சேர்ந்த மாணவர்கள் அனைவரும், செவி கொடுத்து கேட்டிருக்கிறார்கள். "காதால் கேட்பது", அவர்கள் உள்ளம் முற்றிலும் மாறியிருக்கிறது மற்றும் அவர்கள் முழுமையாக மனமார்ந்து இங்கே இணைந்துள்ளார்கள், மேலும் அப்படி ... நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே காது கொடுத்து கேட்பது என்பது மிக முக்கியமானது. மக்களுக்கு இந்த தைவீக உபதேசத்தை கேட்டறியும் வாய்ப்பை வழங்குவதற்காகவே நாங்கள் இவ்வளவு மையங்களை தொடக்கி வைத்திருக்கிறோம். ஆக நீங்கள் இந்த வாய்ப்பை, அதாவது காதால் கேட்டறியும் முறையை, சாதகமாக பயன் படுத்தி கொள்ளுங்கள்.