TA/Prabhupada 0093 - பகவத் கீதையும் கிருஷ்ணர் தான்

Revision as of 08:53, 27 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on Brahma-samhita, Lecture -- Bombay, January 3, 1973

இந்த ஸ்ரீமத் பாகவதம் என்பது வேதாந்த ஸூத்திரத்தின் உண்மையான பொருள்விளக்கம். வேதாந்த ஸூத்திரத்தில், அதாவது வேதாந்த ஸூத்திரத்தின் விளக்கணமான ஸ்ரீமத் பாகவதத்தில், கூறியிருப்பது என்னவென்றால், ஐன்மாதி அஸ்ய யதஹ அன்யவத் இதரதஸ் ச அற்த்தேஷு அபிக்ஞஹ தேநே ப்ரம்ம ஹ்ருதா ஆதி-கவயே முஹ்யந்தி யத்ர சூரயஹ. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1) இந்த விளக்கணங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆதி-கவி என்றால் ப்ரம்மா. ப்ரம்மா, ஆதி-கவி. ஆக தேனே ப்ரம்மா, ப்ரம்மா என்றால் சப்த ப்ரம்மன், அப்படி என்றால் வேத இலக்கியம். இந்த அறிவை அவர் பரம்ம தேவரின் இதயத்தில் புகட்டினார். படைப்பின் ஆரம்பததில், ப்ரம்ம தேவர் மட்டுமே தனீ உயிர் வாழியாக இருந்தார். "அப்பொழுது ப்ரம்ம தேவர் எப்படி வேதங்களை கற்றார் ?" என்ற கேள்வி ஏற்படலாம். இதுவும் விளக்கப்பட்டிருக்கிறது: தேனே ப்ரம்ம... ப்ரம்மா. ப்ரம்மா என்றால் வேத இலக்கியம். சப்த-ப்ரம்மன். கடவுளை விவரிக்கும் அந்த இலக்கியமும் ப்ரம்மன் தான். ப்ரம்மன் என்பது பூரணமானது. ப்ரம்மனுக்கும் , ப்ரம்மனை விவரிக்கும் இலக்கியத்திற்க்கும் வித்தியாசம் கிடையாது. அதே தான் : எப்படி பகவத் கீதைக்கும் க்ருஷ்ணருக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாதோ, அப்படி தான். பகவத் கீதையும் கிருஷ்ணர் தான். இல்லாவிட்டால் ஏன் இந்த புத்திகம் காலம் காலமாக, ஐ ஆயிரம் வரிடங்களாக வணங்கப்படுகிறது? பகவத்-கதை கிருஷ்ணராக இல்லாதபட்சத்தில் இது எப்படி சாத்தியம் ? இப்போதெல்லாம் பல இலக்கியங்கள், புத்தகங்கள் வெளியிட படுகின்றன. ஒரு வருடம், இரண்டு வருடங்கள், அல்லது மூன்று வருடங்குக்குப்பிறகு அவ்வளவு தான். யாரும் அவைகளுக்காக கவலை படுவதில்லை. யாரும் அவைகளுக்காக கவலை படுவதில்லை. யாரும் அவைகளை இவ்வளவு ... உலக வரலாற்றில் எந்த இலக்கியத்தை வேணுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஐ ஆயிரம் வரிடங்களுக்கு மேலாக எதுவும் நிலைத்து இருக்க முடியாது. பல அறிஞ்யர்களால், மத ஆராயுனர்களால், தத்துவவாதிகளால் மருபடியும் மருபடியும் படிக்கப்படுகிறது. ஏன் ? ஏனென்றால் இது கிருஷ்ணரே தான். கிருஷ்ணர்... பவத் கீதைக்கு்ம் பகவானுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. சப்த-ப்ரம்மன். ஆகவே, பகவத்-கீதையை சாதாரண இலக்கியமாக எண்ணி வெரும் அ ஆ இ ஈ படிப்பறிவை வைத்து ஆலோசிக்க கூடாது. இல்லை. அது சாத்தியம் இல்லை. அறிவில்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும், தனது அ ஆ இ ஈ அறிவை மட்டுமே வைத்து பகவத்-கீதைக்கு பொருள்விளக்கம் வழங்க முயற்ச்சிக்கிறார்கள். அது சாத்தியம் இல்லை. இது சப்த-ப்ரம்மன். இதன் அர்த்தம், கிருஷ்ணரின் பக்தனுக்கு மட்டுமே வெளிபடுத்தப்படும். யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே... இது தான் வேதங்களின் கற்றல். யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ தஸ்யைதே கதிதா ஹி அர்தாஹா ப்ரகாஷந்தே மஹாத்மனஹ. (ஷ்வேதஸ்வதர உபநிஷத் 6.23) அவை வெளிபடுத்தப்படுகின்றன. எனவே தான் வேதங்களை, வேத தரிசனம் என்பார்கள். உன் அ ஆ இ ஈ அறிவை மட்டும் வைத்து இதை புறிந்துகொள்ள முடியாது. ஒரு பகவத்-கீதை புத்தகத்தை வாங்கி, இலக்கண அறிவு இருப்பதால் மட்டுமே என்னால் புறிந்துகொள்ள முடியும் என்று எண்ணுவது தவறு. வேதேஷு துர்லப. ப்ரம்ம-ஸம்ஹிதையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், வேதேஷு துர்லப. உங்கள் இலக்கண பாண்டித்தியத்தை வைத்து நீங்கள் எவ்வளவு வேணுமானாலும் வேதங்களை படிக்கலாம்; ஆனால் துர்லப. அது சாத்தியம் இல்லை. வேதேஷு துர்லப. எனவே, பல நபர்கள் பகவத் கிதையின் பொருளை, பெயரளவிலான தனது பாண்டித்தியத்தை வைத்து புரிந்துகொள்ள முயற்ச்சி செய்தாலும், அவர்களுக்காக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களால் ஒருவனைக்கூட கிருஷ்ண பக்தனாக ஆக்க முடியாது. இது ஒரு சவால். உங்கள் பம்பாயில் பல நபர்கள் பல வருடங்களாக , பகவத் கீதையின்மேல் உபந்நியாசம் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் ஒருவனைக்கூட கிருஷ்ணரின் தூய்மையான பக்தனாக மாற்ற முடியவில்லை. இதுதான் எங்கள் சவால். ஆனால் இப்பொழுது இந்த பகவத்-கீதை, உண்மையுருவில் விளக்கப்பட்டிருக்கிறது. மற்றும் ஆயிரக் கணக்கான ஜரோப்பியர்களும் அமெரிகர்களும், அவர்களுடைய பரம்பரையே கிருஷ்ணரின் பெயரை கேட்டதில்லை, இவர்கள் பக்தர்கள் ஆகிறார்கள். இது தான் வெற்றியின் ரகசியம். ஆனால் இந்த மூடர்களுக்கு தெரியாது. அவர்கள், தன் அகம்பாவம் நிறைந்த அறிவை மட்டும் வைத்து, பகவத் கீதையை விளக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். அது சாத்தியம் இல்லை. நாஹம் ப்ரகாஷஹ யோகமாயா ஸமாவ்ருதஹ. கிருஷ்ணர், இவர்களைப்போன்ற அறிவற்றவர்களுக்கும் ஏமாற்றுகாரர்களுக்கும் ஒருபோதும் தன்னை வெளிகாட்டுவதில்லை. கிருஷ்ணர் தன்னை இவர்களுக்கு ஒருபோதும் வெளிகாட்டுவதில்லை. நாஹம் ப்ரகாஷஹ ஸர்வஸ்ய (பகவத் கீதை 7.25). அறிவற்றவர்களும் ஏமாற்றுகாரர்களும் புறிந்துகொள்வதற்கு அவர் ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அது சாத்தியம் இல்லை. கிருஷ்ணர் கூருகிறார், நாஹம் ப்ரகாஷஹ ஸர்வஸ்ய யோகமாயா-ஸமா... (பகவத் கீதை 7.25) மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத: (பகவத் கீதை 7.3)