TA/Prabhupada 0126 - என்னுடைய ஆன்மீக குருவின் திருப்திக்காக மட்டுமே

Revision as of 12:08, 27 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 4.18 -- Delhi, November 3, 1973

பக்தை: நீங்கள் கூறினீர்கள் அதாவது நாம் சில நடவடிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்த நடவடிக்கை பகவான் கிருஷ்ணருக்கு நிறைவை கொடுக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். ஆனால் அது என்ன சோதனை?

பிரபுபாதர்: ஆன்மீக குரு நிறைவடைந்தால், பிறகு கிருஷ்ணரும் நிறைவடைவார். அதை நீங்கள் தினமும் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ யஸ்யப்ரஸாதான் ந கதி குதோபி:. ஆன்மீக குரு திருப்தியடைந்தால், பிறகு கிருஷ்ணரும் திருப்தியடைவார். அதுதான் சோதனை. அவர் திருப்தியடையவில்லை என்றால், பிறகு அவருக்கு வேறு வழியில்லை.

அது புரிந்துக் கொள்ள மிகவும் எளிதாக இருக்கிறது. ஒருவேளை அலுவலகத்தில் வேலை செய்யும் யாரோ ஒருவர், நேரடியான முதலாளி தலைமையாக இருக்கிறார், தலையாய எழுத்தர் அல்லது அந்த இலாக்காவின் கண்காணிப்பாளர். ஆகையால் எல்லோரும் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த கண்காணிப்பாளரை திருப்திபடுத்தினால், அல்லது தலையாய எழுத்தர், பிறகு அவர் நிர்வாக இயக்குணரை திருப்திபடுத்திவிட்டார் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அது ஒன்றும் மிகவும் கடினம் அல்ல. உங்களுடைய நேரடியான முதலாளி, கிருஷ்ணரின் பிரதிநிதி, அவர் திருப்தியடைய வேண்டும். யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ யஸ்ய. ஆகையினால் ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் அவசியமானது. கிருஷ்ணர் ஆன்மீக குருவின் வடிவில் வழிகாட்ட வருகிறார். அது சைதன்ய சரிதாமிருத்தாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு-கிருஷ்ண-க்ருபாய. குரு-கிருஷ்ண-க்ருபாய. ஆகையால் குரு-க்ருபா, குருவின் கருணை, அதுவே கிருஷ்ணரின் கருணை. ஆகையால் அவர்கள் இருவரும் திருப்தியடைந்தால், பிறகு நம் பாதை தெளிவாக இருக்கும். குரு-கிருஷ்ண-க்ருபாய பாய பக்தி-லதா-பீஜ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151). பிறகு நம் பக்தி தொண்டு பூரணமாகும். ஆகையால் நீங்கள் குருவஷ்தகத்தில் இந்த விவர அறிக்கையை குறிக்கவில்லை. யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ யஸ்யப்ரஸாதான் ந கதி குதோபி:. எவ்வாறு என்றால் இந்த இயக்கம் போல்.

இந்த இயக்கம் என்னுடைய ஆன்மீக குருவின் திருப்திக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அவர் விரும்பினார். சைதன்ய மஹாபிரபு இந்த இயக்கத்தை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் என்னுடைய ஞான சகோதரர்களுக்கு கட்டளையிட்டு, மேலும் விருப்பத்தை, கட்டளைகூட இல்லை, அவர் விரும்பினார். என் ஞான சகோதரர்கள் பலரை வெளிநாட்டிற்கு பரப்புவதற்காக அனுப்பினார், ஆனால் எந்த வழியிலும், அவர் வெற்றி காணவில்லை. அவர் திரும்பும்படி அழைக்கப்பட்டார். ஆகையால் நான் சிந்தித்தேன், "இந்த முதுமையான வயதில் நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்." ஆகையால் ஒரே ஆசை என்னவென்றால் ஆன்மீக குருவின் ஆசையை நிறைவுபடுத்த வேண்டும். நீங்கள் இப்பொழுது உதவி செய்தீர்கள். அது வெற்றியை அடையப் போகிறது. மேலும் இதுதான் யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ. நாம் உண்மையான விசுவாசத்துடன் ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் வேலை செய்தால், அதுவே கிருஷ்ணரின் திருப்தியாகும், மேலும் கிருஷ்ணர் நாம் முன்னேற்றமடைய நமக்குத் துணை புரிவார்.