TA/Prabhupada 0173 - நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்

Revision as of 03:06, 28 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.6 -- Vrndavana, April 23, 1975

எனவே நாம் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து, கிருஷ்ணரைப் பற்றி கற்க வேண்டும். க்ருஷ்ண பரம - புருஷே பக்திர் உத்பத்யதே. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் கேட்டால்... உங்களுக்கு கிருஷ்ணரைப் பற்றிய அடிப்படை தத்துவம் என்ன, உன்னத நிலையின் அடிப்படை தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்தால்... அது ஸ்ரீமத் பாகவதத்தில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித - கைடவஹ அத்ர பரமோ நிர்மத்ஸரானாம் (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) . இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில், ஊகித்து உருவாக்கப்பட்ட சமய முறைகள் அனைத்தும் நீக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பரமஹம்சர்களானோருக்கு மட்டுமே உரியது. நிர்மத்ஸரானாம். நிர்மத்ஸர என்றால் பொறாமைப் படாத ஒருவன். நம் பொறாமை குணம் கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள், " ஏன் கிருஷ்ணர் மட்டுமே ஒரே கடவுளாக இருக்க வேண்டும் ? மற்ற பலர் இருக்கிறார்களே. " என்று கூறுவார்கள். இது தான் பொறாமை. நம் பொறாமை கிருஷ்ணரிடமிருந்து தொடங்குகிறது. அதன் விளைவாக நமது பல செயல்களில் அந்த பொறாமையின் விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நம் தினசரி வாழ்க்கையில் நாம் அந்த போறமையை வெளிபடுத்துகிறோம். நாம் நம் நண்பர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம், தந்தையின் மீது பொறாமை கொள்கிறோம், அவ்வளவு ஏன், சொந்த மகனைப் பார்த்தும் பொறாமைப் படுகிறோம்.... மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது - தொழிலதிபர்கள், நாடு, சமுதாயம், சமூகம், அனைத்திலும் பொறாமை. மத்ஸரதா. அது எப்படி அவன் முன்னேறலாம் ? என்று நான் பொறாமை படுகிறேன். இது இயல்பு. எனவே, ஒருவன் எப்பொழுது கிருஷ்ணரை புரிந்து கொள்கிறானோ, அவன் கிருஷ்ண உணர்வை அடைகிறான். அவன் பொறாமையற்றவன் ஆகிறான். அவன் நண்பன் ஆக ஆசைப் படுகிறான் . சுஹ்ருதஹ ஸர்வ-பூதானாம். ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்னவென்றால், நாம் அனைவருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறோம். கிருஷ்ண உணர்வு இல்லாததால் அவர்கள் தவிக்கிறார்கள். அதனால் நாம் வீட்டுக்கு வீடு சென்று, ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், இந்த கிருஷ்ண உணர்வைப் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறோம். மேலும் கிருஷ்ணரின் அருளால் அறிவாளிகளின் கவனத்தை ஈர்க்கிறோம். ஆக பொறாமை இல்லாத இந்த செயல்முறையை நாம் தொடர்ந்து பின்பற்றினால்... பொறாமை என்பது மிருக குணம், நாய் குணம், பன்றி குணம். மனித இயல்பு, பர-துக்க-துக்கியாக இருக்கவேண்டும். மற்றவர்களை பரிதாபமான நிலையில் பார்க்கும்போது ஒருவன் பெரும் சோகத்தை உணரவேண்டும். அனைவரும் கிருஷ்ண உணர்வில்லாததால் துன்பப்படுகிறார்கள். ஒருவனுள் இருக்கும் கிருஷ்ண உணர்வை தட்டி எழுப்புவது மட்டுமே நம் கடமை. அப்படி செய்தால் இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அனர்த்த உபசமம் சாக்ஷாத் பக்தி-யோகம் அதோக்ஷஜே, லோகஸ்ய அஜானதஹ. மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப்பற்றி எந்த அறிவும் இல்லை. எனவேதான் நாம் இந்த இயக்கத்தை தொடர்ந்து பரப்ப வேண்டும். லோகஸ்ய அஜான..., வித்வம்ஸ் சக்ரே சத்வத - சம்ஹிதாம் (ஸ்ரீமத் பாகவதம் 1.7.6) ஸ்ரீமத் பாகவதம். பாகவத - தர்மம் என்பது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மற்றொரு பெயர். பாகவத - தர்மம். நாம் இதை ஏற்றுக்கொண்டால் மொத்த மனித சமுதாயமும் சந்தோஷமாக இருக்கும். மிக்க நன்றி.