TA/Prabhupada 0180 - ஹரே கிருஷ்ண மந்திரம் ஒரு கிருமிநாசினி
Lecture on SB 1.5.11 -- New Vrindaban, June 10, 1969
பிரபுபாதர்: வினாபி பத-சாதுர்யம் பகவத்-யஷஹ-ப்ரதானம் வசஹ பவித்ரம் இதி அஹ தத் வாக் பவித்ர இதி. இது அவ்வளவு தூய்மையானது. அதை என்ன சொல்வார்கள்? கிருமிநாசினி. உலகம் முழுவதும் மாயையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், இந்த ஹரே கிருஷ்ண மந்திரம் தான் அதை குணப்படுத்தும் கிருமிநாசினி. இது உறுதி. கிருமிநாசினி. தத்-வாக்-விசர்கோ ஜனதாக-விப்ளவஹ. பகவத்-யஷஹ-ப்ரதானம் வசஹ பவித்ரம் இதி அஹ தத் வாக் இதி, ஸ சாஸௌ வாக்-விசர்கோ வசஹ ப்ரயோகஹ. ஜனானாம் சமுஹோ ஜனதா, தஸ்ய அகம் விப்ளவதி நாஷயதி. விப்ளவ என்றால் அது கொல்கிறது. அதுதான் கிருமிநாசினி. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது எப்படி ஒரு கிருமிநாஷினியைப் போல் வேலை செய்கிறது என்பதை எடுத்துக்காட்ட, இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவர்கள், உடனடியாக நோயைப் போன்ற பாவச் செயல்களை நிறுத்திவிடுகிறார்கள், அதாவது நான்கு வகையான பாவங்கள் : தகாத உடலுறவு, கூடி, பீடி போன்ற போதைப்பழக்கம், சூதாட்டம் மற்றும் இறைச்சி உட்கொள்வது. இது எப்படி கிருமிநாசினி ஆகிறது. இந்த நான்கு விஷயங்களும் பாவச் செயல்களை அதிகரிப்பதில் உதவுகின்றன. மற்ற கேட்ட பழக்கங்களும், பாவச் செயல்களும் ஒவ்வொன்றாக வரும். திருடுவது, பிறகு ஏமாற்றுவது, பிறகு… இந்த நான்கு பாவங்களிலும் ஈடுபட்டால், இன்னும் பல விஷயங்கள் பின்தொடர்ந்து வரும். இந்த நான்கு பாவச் செயல்களை நிறுத்திவிட்டால், மேலும் பாவச் செயல்களில் ஈடுபடும் தொழிற்சாலை செயலிழந்துவிடும். நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து நிறுத்தி வைத்திருப்பது எப்படி? தொற்றை குணப்படுத்தும் முறையான இந்த ஹரே கிருஷ்ண ஜபத்தின் மூலம். இல்லையென்றால், அது முடியாது, தத்துவ அறிவு மட்டும் இருந்தால் போதாது. ஆக அது உண்மையிலேயே கிருமிநாசினி தான். ஜனதஹ-விப்ளவஹ. அந்த நபர் மேலும் செய்யக்கூடிய பாவச் செயல்களை அது தடுக்கிறது. அதற்காக, "சரி, என்னிடம் தான் ஒரு கிருமிநாசினி இருக்கிறதே, இந்த ஹரே கிருஷ்ண ஜபம். ஆக நான் இந்த நான்கு பாவங்களையும் தொடர்ந்து செய்யலாம் பரவாயில்லை. நான் குணமாகிவிடுவேன்." என்று எண்ணக்கூடாது. கிறித்துவ தேவாலயங்களுக்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருவது போல் தான். அது சரி தான். பாவ மன்னிப்பும் கிருமிநாசினி தான். ஆனால் அது எப்படி மறுபடியும் அதையே செய்கிறீர்கள்? அதற்கு என்ன அர்த்தம்? தேவாலயத்திற்குச் சென்று, பாவ மன்னிப்பு கோருகிறீர்கள். இது நல்லது தான். இப்போது உங்கள் பாவ வினைகளை போக்கிவிட்டீர்கள். அது பரவாயில்லை. ஆனால் ஏன் அதே செயலைப் மறுபடியும் புரிகிறீர்கள்? இதற்கு என்ன பதில்? ஹம்? நான் ஒரு கிறித்துவரிடம் இதைக் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்: "நீங்கள் பாவச் செயல்களைச் செய்கிறீர்கள், சரி, தேவாலயத்தில், கடவுள் அதாவது கர்த்தரின் முன்னிலையில், அல்லது அவரது பிரதிநிதியான பாதிரியாரின் முன்னிலையில், பாவ மன்னிப்பு கோருகிறீர்கள். உங்கள் பாவச் செயல்கள் அனைத்தும் போக்கவைக்கப் படுகின்றன, மன்னிக்கப்படுகிறீர்கள். அது பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஏன் மறுபடியும் அதையே செய்கிறீர்கள்?" இதற்கு பதில் என்ன? நர-நாராயணன்: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கோருவார்கள். பிரபுபாதர்: அவர்கள் மறுபடியும் பாவ மன்னிப்பு கேட்பார்கள். அப்படியென்றால் இது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. "நான் செய்வேன்.." இது அதன் உள்நோக்கம் அல்ல. கடவுளை அவமதிக்கும் செயல்களின் நமது எண்ணிக்கையில் இது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம்னோ பலாத் யஸ்ய ஹி பாப-புத்திஹி. யாராவது, "என் வசம் இந்த தொற்றை குணப்படுத்தும் முறை உள்ளது, அதனால் நான் பாவச் செயல்களைப் புரிவேன். பிறகு ஹரே கிருஷ்ண ஜபம் செய்தால் அது சரிக்கட்டப்படும்." என்று எண்ணினால், அது தான் மிகப் பெரிய பாவம்.