TA/Prabhupada 0425 - அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம்

Revision as of 12:41, 29 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Room Conversation with Carol Cameron -- May 9, 1975, Perth

கணேசன்: ஸ்ரீல பிரபுபாதரே, இந்த ஞானம் தெய்வத்தன்மை பொருந்திய மன்னர்களால் தலைமுறைகள் வழியாக ஒப்படைக்கப்பட்டது என்றால்,


ஏவம்-பரம்பரா-ப்ராப்தம் (பகவத் கீதை 4.2)


எப்படி அந்த ஞானம் துலைந்தது?


பிரபுபாதர்: அது (பாரம்பரிய முறை படி) ஒப்படைக்காமல் போனதால். வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால்.வெறும் ஊகத்தின் மூலம் புரிந்து கொள்வதால். அல்லது அது உண்மையுருவில் ஒப்படைக்கப் படாததால். அவர்கள் சில மாற்றல்களை செய்திருக்கலாம். அல்லது அவர்கள் அதை ஒப்படைத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை நான் உனக்கு அதை ஒப்படைத்திருந்து, ஆனால் நீ தவறி விட்டால், பின்னர் அது காணாமல் போகும். தற்பொழுது இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என் முன்னிலையில் நிகழ்ந்தது வருகிறது. என் காலத்திற்கு பின், நீங்கள் இதை செய்ய தவறினால், இது குலைந்துவிடும். இதுப்போலவே தொடர்ந்து செய்தால், அது நீடிக்கும். ஆனால் நிறுத்தினால்...