TA/Prabhupada 0508 - மிருகங்களைக் கொல்பவர்களின் மூளை கருங்கல்லைபோல் இறுகியிருக்கும்.

Revision as of 05:08, 30 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0508 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.18 -- London, August 24, 1973

இப்போது, நாம் இந்த ஆத்மாவை முந்தைய ஸ்லோகத்தில் கூறியுள்ளது போல புரிந்து கொண்டிருக்கின்றோம். அவினாஷி து தத் வித்தி யேன ஸர்வம் இதம் ததம். ஆத்மாவை அளக்க முடியாது, ஆனால் அதன் ஆற்றலை அளக்க முடியும். ஆத்மாவை அல்ல அது சாத்தியமல்ல. ஆத்மா மிகவும் சிறியது எனவே அளப்பது சாத்தியமல்ல. உங்களிடம் அளவிடும் வழிமுறைகள் இல்லை, ஏனென்றால் இப்போது நம் பௌதிக உணர்ச்சி உணர்கிறது, அது சாத்தியமில்லை. உணர்வு பூர்வமாக தான் புரிந்து கொள்ள முடியும். சைதன்ய மகாபிரபு ஜெகநாதர் கோவிலில் மயக்கம் அடைந்து விழுந்த பொழுது, ஸர்வபௌம பட்டாச்சாரியார் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார், அப்போது அவரிடம் உணர்வு நிலை இல்லை. அடிவயிற்றில் கூட எந்த அசைவும் இல்லை. உணர்வு இருக்கும்பொழுது, நாம் மூச்சு விடும் பொழுது, நம் அடிவயிறு அசையும். ஆனால் ஸர்வபௌம பட்டாச்சாரியர், சைதன்ய மகாபிரபுவின் அடிவயிற்றை பரிசோதித்தார். அதில் எந்த அசைவும் இல்லை. எனவே அவர் "இந்த சன்யாசி இறந்திருக்கக்கூடும்" என்று நினைத்தார். ஆனால், மறுபடியும் முயற்சி செய்தார். இம்முறை, சிறு பஞ்சு துகளை எடுத்து அவர் மூக்கின் முன்னே வைத்தார், அந்தப் பஞ்சு துகளின் நார்கள் அசைவதைக் கண்டு நம்பிக்கை பெற்றார், ஆம். எனவே ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான அளக்கும் முறைகள் இருக்கின்றது. ஆனால் ஆன்மாவை பொருத்தவரை இங்கு அப்ரமேயஸ்ய என்று சொல்லப்பட்டுள்ளது, அளப்பதற்கான மூலக்கூறு இல்லை. மூலக்கூறு இல்லை. எனவே பௌதிக முதல்வாத அறிவியல், ஆன்மா இல்லை என்று சொல்கிறது. ஆன்மா இருக்கிறது. ஆன்மா இருக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம். இதுதான் ஆதாரம். எது ஆதாரம்? உணர்வு இருக்கின்றது என்பதே ஆதாரம். ஆனால் அதனை அளக்க முடியாது. அதன் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மா இதயத்தில் இருக்கிறது. ஈஷ்வர ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (ப. கீ. 18.61). எனவே ஆன்மா இதயத்தில் இருக்கிறது கிருஷ்ணரும் இதயத்தில் இருக்கிறார். ஏனெனில் அவர்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பவர்கள். இவ்வாறாக அதன் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மா இருப்பதை நாம் உணர்வினால் அறிய முடியும், ஆனால் சோதனைகளின் மூலம் அதனை அளந்து விட முடியும் என்று நினைப்பது சாத்தியமல்ல. எனவே அது அப்ரமேய என்று சொல்லப்படுகிறது. ப்ரமேய என்பது நேரடியாக காண்பது. என்னால் காண முடியும், தொடமுடியும், கையாள முடியும். அதுவே ப்ரமேய... கிருஷ்ணர் சாத்தியமில்லை என்று கூறுகிறார். அப்ரமேய. பின்னர், நான் எவ்வாறு அதனை ஒத்துக் கொள்வது? அதனையே கிருஷ்ணர் சொல்கிறார். அதனை நான் எப்படி நம்புவது கிருஷ்ணா? கிருஷ்ணர் உக்த என்று சொல்கிறார், அதாவது அதிகாரிகளால் இது முன்பே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. யுக்த. அதுவே பரம்பரை வழக்கம். கிருஷ்ணரும் அதையே சொல்கிறார். கிருஷ்ணர் "நான் சொல்கிறேன்," என்று சொல்லவில்லை. இல்லை யுக்த அதற்கு வேத பிரமாணம் இருக்கின்றது. எங்கே இருக்கிறது? உபநிஷதங்களில் இருக்கிறது, பாலாக்ர-ஷத-பாகஸ்ய ஷததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவ: ஸ விஜ்ஞேய: ஸ சானந்த்யாய கல்பதே அது உபநிஷதத்தில் இருக்கின்றது, ஸ்வேதாஷ்வதர உபநிஷத். இதற்குப் பெயர்தான் வேத பிரமாணம். ஸ்ரீமத் பாகவதத்திலும் ஒரு பிரமாணம் உள்ளது. அது என்ன? கேஷாக்ர-ஷத-பாகஸ்ய ஷததா, ஸத்ருஷம் ஜீவ: ஸூக்ஷ்ம (சை சரி மத்திய 19.140). ஸூக்ஷ்ம, மிக நுண்ணிய. ஜீவ ஸூக்ஷ்ம-ஸ்வரூபோ 'யம் ஸங்க்யாதீத: கல்பதே. இது ஜீவன், இதனை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என கணக்கிட முடியாது. அசான்க்ஹ்ய. இவை வேத நூல்கள் தரும் சாட்சிகள். இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணர் இதனை உறுதி செய்கிறார், உண்மையில் இதனை அளக்க முடியாது. அனால் நமக்கு ப்ரமாணம் கிடைக்கிறது, ஆன்மா இருக்கிறது, ஆன்மா இருக்கிறது. இருந்தாலும், ஆன்மா இல்லை என்று எப்படி சொல்ல்வது? முடியாது. அது முட்டாள்தனம். உலகமே இந்த முட்டாள்தனத்தில் தான் இயங்குகிறது. இப்போது மட்டுமல்ல. முன்பும் தான். சார்வாக முனி என்று ஒருவர் இருந்தார், அவர் ஒரு நாத்திகர், அவர் நம்பவில்லை. பகவான் புத்தரும் அப்படியே கூறினார், ஆனால் அவர் ஏமாற்றினார். அவருக்கு அனைத்தும் தெரியும், ஏனெனில் அவர் கடவுளின் அவதாரம். ஆனால் அவர் மக்களை அவ்வாறு ஏமாற்ற வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்களுக்கு போதிய அறிவு இல்லை. ஏன் அறிவு குறைவு? ஏனெனில் அவர்கள் மிருகவதை செய்ததால், அறிவிழந்து இருந்தார்கள். கேஷவ த்ருத-புத்த-ஷரீர ஜய ஜகதீஷ ஹரே. மிருகவதை செய்பவர்களின் மூளை கல்லைப் போன்று மந்தமாகத் தான் இருக்கும். அவர்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே புலால் உண்ணுதல் நிறுத்தப்பட வேண்டும். மூளையின் நுண்ணிய திசுக்களை உயிர்ப்பிக்க, சூக்ஸும விஷயங்களைப் புரிந்துகொள்ள, புலால் உண்ணுதலைக் கைவிடவேண்டும்.