TA/Prabhupada 0437 - சங்கு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது

Revision as of 07:23, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

ஒருவரால் உபநிஷதங்களிலிருந்து குறிப்பரைகளை வழங்க முடிந்தால் அவன் வாதம் வலுவானதாக கருதப்படும். ஷப்த-ப்ரமாண. ப்ரமாண என்றால் ஆதாரம். ஆதாரம்... நீ உன் வழக்கில் வெற்றி பெற விரும்பினால்... நீதிமன்றத்தில் நல்ல ஆதாரம் வழங்க வேண்டியிருக்கிறது. அதைப்போலவே, வேத கலாச்சாரத்தில், 'ப்ரமாணம்' தான் ஆதாரம். 'ப்ரமாணம்' என்றால் ஆதாரம். ஷப்த-ப்ரமாண. வேத கலாச்சாரத்தில் மூன்று வகையான ஆதாரங்கள் அறிஞர்களால் அங்கீகரிக்கப் பட்டவை.. ப்ரத்யக்ஷ என்பது ஒரு வகையான ஆதாரம். ப்ரத்யக்ஷ என்றால் நேரடி புலனுணர்வு. நான் உங்களையும், நீங்கள் என்னையும் பார்த்து கொண்டிருப்பதைப் போல் தான். நான் இங்கே இருக்கிறேன், நீங்களும் இங்கு இருக்கிறீர்கள். இது தான் நேரடி புலனுணர்வு. அடுத்த ஆதாரம் என்பது அனுமானம். அந்த அறையை நோக்கி நான் வந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அங்கு யாராவது இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அங்கிருந்து எதாவது சத்தம் கேட்டால் நான் ஊகிக்கலாம், "ஓ, அங்கே யாரோ இருக்கிறார்." இதற்கு அனுமானம் எனப் பெயர். தர்க்க சாஸ்திரத்தில் இதற்கு கருதுகோள் எனப் பெயர். அதையும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். நேர்மையான கருதுகோள்களின் மூலம் என்னால் நிரூபிக்க முடிந்தால் அதுவும் ஏற்கப்பட வேண்டும். ஆக நேரடியான (புலனுணர்வு) ஆதாரம் மற்றும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைப்பு அல்லது ஆதாரம். ஆனால் உறுதியான ஆதாரம் என்பது ஷப்த-ப்ரமாண. ஷப்த, ஷப்த-ப்ரம்மன். அப்படி என்றால் வேதங்கள். வேதங்களின் சொற்களை ஒருவர் ஆதாரமாக வழங்கினால், அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். வேத ஆதாரத்தை யாராலும் மறுக்க முடியாது. அது தான் முறை. அது எப்படி? சைதன்ய மகாபிரபு ஒரு நல்ல உதாரணம் வழங்கியிருக்கிறார். அது வேதங்களில் இருக்கிறது. நாம் கோவில் சந்நிதானத்தில் சங்கை வைத்திருக்கிறோம். சங்கு, மிக தூய்மையானதாக, தெய்வீகமானதாக கருதப்படுகிறது, இல்லாவிட்டால் எப்படி அதை மூலவர் முன்னே வைத்து அதை ஊத முடியும்? சங்கை வைத்துத் தான் நீர் அர்ப்பணிக்கிறோம். அது எப்படி அர்ப்பணிக்க முடியும்? சங்கு என்றால் என்ன? சங்கு என்பது ஒரு ஜந்துவின் எலும்பானது. அது வெறும் ஒரு ஜந்துவின் எலும்பு. வேதத்தின் கட்டளை என்னவென்றால், ஒரு மிருகத்தின் எலும்பை தொட்டால், உடனேயே குளிக்கவேண்டும். அசுத்தம் ஆகிவிடுகிறோம். ஒருவர் கூறலாம், "ஓ, இதில் முரண்பாடு இருக்கிறதே. ஓரிடத்தில் மிருகங்களின் எலும்பை தொட்டால், உடனேயே குளித்து தன்னை தூய்மைப் படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது, இங்கோ, ஒரு மிருகத்தின் எலும்பு மூலவர் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. இது முரண்பாடு தானே? மிருகத்தின் எலும்பு அசுத்தம் என்றால் எப்படி அதை மூலவர் சந்நிதியில் வைக்கலாம்? மேலும் மிருகத்தின் எலும்பு தூய்மையானது என்றால், குளித்து, அசுத்தத்தை நீக்குவதற்கு என்ன அர்த்தம்?" இவ்வாறு, வேத கட்டளைகளில் வேறு முரண்பாடுகளை காணலாம். ஆனால் மிருகத்தின் எலும்பு அசுத்தமானது என்று வேதத்தில் கூறப்பட்டிருப்பதால், அதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அதே சமயம் இந்த மிருகத்தின் எலும்பு, அதாவது சங்கு, தூய்மையானது. உதாரணமாக, வெங்காயம் உண்ணக்கூடாது என்று நாங்கள் கூறினால், நம் மாணவர்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால் வெங்காயம் ஒரு காய் தானே. ஆக ஷப்த-ப்ரமாண என்றால், வேத ஆதாரம். அதை மறுப்பின்றி ஏற்கவேண்டும். அதில் அர்த்தம் உள்ளது; எந்த முரண்பாடும் கிடையாது. அதில் அர்த்தம் உள்ளது. உதாரணமாக, பசுஞ் சாணத்தைப் பற்றி பல முறை நான் கூறியிருக்கிறேன். வேத ஞானத்தின்படி பசுஞ் சாணம் என்பது தூய்மையானது. இந்தியாவில் இது ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில், பெரும் அளவில் பசுஞ் சாணம் இருக்கிறது, வீட்டிலிருந்து கிருமிகளை விரட்ட, வீடு முழுவதும் அது பூசப் படுகிறது. உண்மையாகவே பசுஞ் சாணத்தை வீட்டில் பூசி, அது காய்ந்ததும் எல்லாம் புத்துணர்ச்சிகரமாக, கிருமிகள் இன்றி இருப்பதை நீங்கள் காணலாம். இது வாஸ்தவமான அனுபவம். டாக்டர் கோஷ் என ஒரு பெரிய வேதியியலாளர், இந்த பசுஞ் சாணத்தைப் பரிசோதித்தார். எதற்காக வேத இலக்கியத்தில் இந்த பசுஞ் சாணம் என்பது இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது? பசுஞ் சாணத்தில் ஒரு கிருமிநாசினியின் எல்லா குணாதிசயங்களும் இருப்பதாக அவர் கண்டுபிடித்தார்.