TA/Prabhupada 0438 - மாட்டு சாணியை உலர்ந்த பின் சாம்பளாக்கி அதை பற்போடியாக பயன்படுத்துவார்கள்



Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

ஆயுர்வேதியில் மாட்டு சாணியை உலர்ந்த பின் சாம்பளாக்கி அதை பற்போடியாக பயன்படுத்துவார்கள். அது மிகவும் சிறந்த கிருமினாசினி பற்பொடி. அதேபோல், அங்கே பல பொருள்கள் உள்ளன, வேதத்தில் பல தடைகள், வெளிப்படையாக முரண்பாடாக தோன்றலாம், ஆனால் அவை முரண்பாடானதல்ல. அவை அனுபவபூர்வமானது, உன்னதமான அனுபவபூர்வமானது. எவ்வாறு என்றால் ஒரு தந்தை தன் பிள்ளையிடம் கூறுவது போல், அதாவது "என் அன்பு மகனே, நீ இந்த உணவை எடுத்துக்கொள். அது மிகவும் சுவையாக இருக்கிறது." மேலும் அந்த பிள்ளை அதை எடுத்துக் கொள்கிறது, தந்தையையின் ஆணையை நம்புகிறது. தந்தை கூறுகிறார்... பிள்ளைக்குத் தெரியும் அதாவது "என் தந்தை..." அவன் தன் நம்பிக்கையுடன் இருக்கிறான் "என் தந்தை விஷமாக இருக்கும் எதையும் எனக்கு கொடுக்க மாட்டார்." ஆகையினால், அதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கிறான், எந்த காரணமும் இன்றி, உணவைப் பற்றி அது தூய்மையானதா அல்லது தூய்மையற்றதா என்று எந்த ஆராய்ச்சியும் செய்யாமல். நீங்களும் அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறீர்கள் ஏனென்றால் அது அரசாங்க உரிமம் பெற்றது. நீங்கள் உணவுப் பொருள் எடுக்கும் போதுஅங்கு உணவு நன்றாக, சுத்தமாக, இருக்கும் என்று நீங்கள் நம்ப வேண்டும், அல்லது அது கிருமி எதிர்ப்பு, அல்லது அது... ஆனால் உங்களுக்கு எப்படி அது தெரியும்? அந்த அதிகாரிகள். ஏனென்றால் இந்த ஹோட்டல் அரசாங்கத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டது, அதற்கு உரிமம் உள்ளது, ஆகையினால் நீங்கள் நம்புகிறிர்கள். அதேபோல், சப்த-ப்ரமாண என்றால் அங்கு ஆதாரம் இருந்த உடனடியாக, வேத இலக்கியத்தில், "இது தான் இது," என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். அப்போது உங்கள் அறிவு பூரணமானது, ஏனென்றால் நீங்கள் விஷயங்களை பூரண மூலத்தில் இருந்து ஏற்றுக் கொள்கிறீர்கள். அதேபோல் கிருஷ்ணர், கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவர் எதைச் சொன்னாலும், அது சரியானதே. ஏற்றுக் கொள்ளுங்கள். இறுதியாக அர்ஜுன் கூறுகிறார், ஸர்வம் ஏதத் ருதம் மன்யே (ப. கீ. 10.14). "என் அன்புள்ள கிருஷ்ண, தாங்கள் எதைச் சொன்னாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்." அது தான் நம் கொள்கையாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமான ஆதாரம் இருக்கும் போது, நாம் ஏன் ஆராய்சி செய்வதைப் பற்றி சங்கடபட வேண்டும். ஆகையால் நேரத்தை குறைக்கவும், தொல்லையை தவிர்க்கவும் ஒருவர் அதிகாரிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், உண்மையான அதிகாரி. இதுதான் வேத செய்முறை. ஆகையினால், வேதம் கூறுகிறது, தத் விஞ்ஞாணார்தம் ச குரும் யெவாபிகச்சேத் (முஉ. 1.2.12).