TA/Prabhupada 0483 - கிருஷ்ணரின்மீது அன்பை வளர்த்துக்கொள்ளாமல் எப்படி நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி நினைக்க

Revision as of 07:34, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 18, 1968

எனவே நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி நினைத்தால், அதுதான் கிருஷ்ண உணர்வு. பிறகு மய்யாஸக்த-மனா: பார்த2 யோக3ம்' யுஞ்ஜன் மத்3-ஆஷ்2ரய:, இந்த யோக முறையை, கிருஷ்ண உணர்வை நீங்கள் பயிற்சி செய்தால், எவ்வாறு செய்ய வேண்டும்? மத்3-ஆஷ்2ரய. மத்3-ஆஷ்2ரய என்றால் "என்னுடன் தொடர்பில் இருக்கும் ஒருவரரிடத்தில் அடைக்கலம் கொள்வது" என்பதாகும். மத்3-ஆஷ்2ரய. மத்3-ஆஷ்2ரய என்றால் அவருடன் நேரடியாக தொடர்பில் இருப்பது. அவரைப் பற்றி நீங்கள் நினைத்தவுடன், அவருடைய வடிவத்தை நினைத்தவுடன் - நேரடியாக நீங்கள் அவருடன் தொடர்பு கொள்கிறீர்கள். ஆனால் அவரைப் பற்றி அறிந்த ஒரு ஆன்மீக குருவிடம் நீங்கள் தஞ்சமடையாவிட்டால், நீங்கள் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது. அது தற்காலிகமாக இருக்கக்கூடும். எனவே நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி அறிந்த ஒருவரிடமிருந்து கேட்க வேண்டும். கிருஷ்ணர் மீது உங்கள் மன ஒருமைப்பாடு தொடரும். நீங்கள் அவருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். உங்கள் ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ், உங்கள் வாழ்க்கை வடிவமைக்கப்பட வேண்டும். அதன்பின், இந்த யோகமுறையை நீங்கள் பக்குவமாகத் தொடரலாம். அந்த யோக முறை என்ன? அந்த யோக முறை பகவத் கீதையில், ஆறாம் அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்- கதா அந்தராத்மனா: (பகவத் கீதை 6.47) "எப்போதும் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பவர்," மத்-கதா, "அவர் முதல் தர யோகி " பல இடங்களில் இது கூறப்பட்டுள்ளது. பிரேமாஞ்சன- சுரித. கிருஷ்ணர் மீது அன்பை வளர்த்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் எப்படி கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க முடியும்? ராதாராணியைப் போல. ராதாராணி, அவள் வந்துவிட்டாள். அவர் திருமணமானவர், மற்றும் இல்லற வாழ்க்கை. ஆனால் அவர் கிருஷ்ணரை வணங்க வந்திருக்கிறாள். இதேபோல், கிருஷ்ணரை எப்போதும் நம் மனதில் வைத்து கொள்ள வேண்டும், அவரை நினைவில் கொள்ளுங்கள. இந்த செயல்முறை, மய்யாஸக்த-மனா: பார்த2 யோக3ம்' யுஞ்ஜன் மத்3-ஆஷ்2ரய:, "என் பாதுகாப்பின் கீழ், என் பிரதிநிதியின் பாதுகாப்பின் கீழ், நீங்கள் ஸமக்ரம், பக்குவமாகப் புரிந்து கொள்ளும்போது, ​​உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்." அஸம்ஷயம்: "எந்த சந்தேகமும் இல்லாமல்." "கிருஷ்ணர்- புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்" என்று உங்கள் ஆன்மீக குரு கூறுவதால் அல்ல. இல்லை. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கேள்வி கேளுங்கள், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் பரம புருஷ பகவான் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. ஆனால் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அஸம்ஷயம். இந்த வழியில், நீங்கள் இந்த யோக முறையை பயிற்சி செய்தால், எல்லா யோக முறைகளிலும் முதன்மையானது கிருஷ்ண உணர்வு, அஸம்'ஷ2யம் ஸமக்3ரம்' மாம்' யதா2 ஜ்ஞாஸ்யஸி (பகவத் கீதை 7.1), நீங்கள் கிருஷ்ணரை அல்லது முழுமுதற் கடவுளை புரிந்து கொள்வீர்கள். நன்றாக, எந்த சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொண்டால், பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். நன்றி. (பக்தர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள்)