TA/Prabhupada 0517 - நீங்கள் செல்வந்தர் வீட்டில் பிறவியெடுத்ததால் நோயெதிர்ப்பு திறன்பெற்றவராய் ஆகமாட்டீ

Revision as of 07:40, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

அந்த யோக முறைக்கு மறுமொழியாக, கிருஷ்ணர் இங்கு நேரடியாக பேசுகிறார்: மய்யாஸக்த-மனா:. மனதை மிகவும் அழகான கிருஷ்ணரின் ரூபத்தில் ஒருநிலைப்படுத்த முயன்றால்... ராதாராணியுடனும் தன் சகாக்களுடனும் அவர் அனுபவிக்கிறார். மய்யாஸக்த-மனா: பார்த யோகம், இந்த யோகத்தை பயின்றால், யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:... இந்த யோகத்தை பயில வேண்டும், அதே சமயத்தில், கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். மத்-ஆஷ்ரய: என்றால் "என் பாதுகாப்பின் கீழ்." இது சரணடைதல் எனப்படும். கடினமான நிலையில் நண்பரிடம் சென்று சரணடைந்தால், "என் அன்புத் தோழா, நீ மிகப் பெரியவன், மிகவும் சக்தி வாய்ந்தவன், மிகவும் செல்வாக்கானவன். நான் பேராபத்தில் இருக்கிறேன். எனவே நான் உன்னிடம் சரணடைகிறேன். தயவு செய்து எனக்கு பாதுகாப்பு கொடு...." அதை கிருஷ்ணரிடம் செய்யலாம். இந்த ஜட உலகில் ஒருவரிடம் சரணடைந்தால், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், மறுக்கலாம். அவர் கூறலாம், "ஆனால், என்னால் உனக்கு பாதுகாப்பளிக்க முடியாது" என்று. அதுதான் பொதுவான பதில். ஆபத்திலிருக்கையில் "தயவு செய்து எனக்கு பாதுகாப்பு கொடு," என்று நெருங்கிய நண்பரிடம் சென்றால் கூட, அவர் தயங்குவார், ஏனெனில் அவரது சக்தி மிகவும் வரையறைக்குட்பட்டது எல்லாவற்றிற்கும் முதல் அவர் யோசிப்பார் "நான் இவருக்கு பாதுகாப்பு கொடுத்தால், என்னுடைய நலனை இழக்க நேரிடுமோ?" அவர் அவ்வாறே நினைப்பார், ஏனெனில் அவரது சக்தி வரையறைகுட்பட்டது. ஆனால் கிருஷ்ணர் மிகவும் சிறந்தவர் ஏனெனில் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர், ஐஸ்வர்யம் மிக்கவர்... அவர் பகவத் கீதையில் பிரகடனம் செய்கிறார், அனைவரும், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66) "அனைத்தையும் தள்ளி வைத்துவிடுங்கள். வெறுமனே என்னிடம் சரணடைந்துவிடுங்கள்." அதன் பலன் என்ன? அதன் பலன் யாதெனில் அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி "உன்னை பாவகரமான வாழ்வின் எல்லாவித விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கிறேன்." இந்த ஜடவுலகில், நம் செயல்கள் எல்லாம் பாவச்செயல்களே. செயலும் விளைவும் இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும், செயலும் விளைவும் இருக்கும். நல்ல விளைவு இருந்தாலும், அதுவும் பாவகரமானதே. வேத இலக்கியத்தின்படி, நற்செயலின் விளைவு... ஜன்மஈஷ்வர்ய-ஷ்ருத-ஸ்ரீபி: (SB 1.8.26). ஒருவேளை இந்த பிறவியில் எந்த பாவச்செயலிலும் ஈடுபடாமல், எல்லா விதத்திலும் மிகவும் புண்ணியகரமாக இருந்தால். கொடையாளியாக, இரக்கமுள்ளவராக, எல்லா வகையிலும் சரியாக இருந்தால். இருப்பினும் பகவத் கீதை கூறுகிறது அது கர்ம-பந்தன. நீங்கள் யாருக்காவது கொஞ்சம் பணத்தை தானமாக கொடுக்கிறீர்கள், என்று வைத்துக் கொள்வோம், உங்களுக்கு அந்த பணம் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு, பத்து மடங்கு என திரும்ப கிடைக்கும், உங்கள் அடுத்த பிறவியில். அது உண்மையே. எனவே வைஷ்ணவ தத்துவம் கூறுகிறது, இதுவும் பாவகரமானது என்று. ஏன் பாவகரமானது? ஏனெனில் அந்த கூட்டு வட்டியை பெற நீங்கள் பிறவி எடுத்தாக வேண்டும். அது பாவகரமானது. ஒருவேளை ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தால். தாயின் கர்பத்தில் இருப்பதால் ஏற்படும் துன்பம், அது ஒன்றே. புண்ணியவானோ பாவியோ தாயின் கர்பத்தில் இருக்கும் போது... தாயின் கர்ப்பத்தில் அனுபவிக்கும் துன்பமும் வலியும் ஒன்றே, கருப்பனோ வெள்ளையனோ இந்தியனோ அமெரிக்கனோ நாயோ பூனையோ எல்லோரும். ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷாநுதர்ஷனம் (BG 13.9). பிறப்பின் துன்பங்கள், இறப்பின் துன்பங்கள், நோயின் துன்பங்கள், முதுமையின் துன்பங்கள் எங்கும் ஒன்றே. செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால், நோயிலிருந்து விடுபட்டவர் என்றும் பொருள்படாது. முதுமை அடையமாட்டார்கள் என்றும் பொருள்படாது. பிறப்பின் துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பொருள்படாது, இறப்பின் துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பொருள்படாது. எனவே இவ்விடயங்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் மக்கள் மிகவும் அறிவற்றவர்களாகிவிட்டனர், அவர்கள் அக்கறைப்படுவதில்லை... " ஓ, சாவா, பரவாயில்லை. வந்தால் வரட்டும்." பிறப்பு... அதிலும் இக்காலத்தில், ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கிறது, பல கொலை செயல்முறைகள் உள்ளன. மிக அதிகமாக. ஏன்? ஏனெனில் மக்கள் மிகவும் சிக்குண்டு வருகின்றனர், அப்படிபட்ட நபர் பிறப்பது கூட இல்லை என்ற அளவுக்கு. தாயின் கர்ப்பத்தில் இருத்தப்பட்டு பின், அவர் கொல்லப்படுகிறார், மறுபடியும் மற்றோரு தாயின் கர்ப்பத்தில் இருத்தப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுகிறார். பாருங்கள், இவ்வாறாக, அவர் வெளிச்சத்தை கூட பார்ப்பதில்லை. எனவே தாயின் கர்ப்பத்தினுள் வந்துவிட்டு மறுபடியும் இறப்பது, முதுமையடைவது, நோய்வாய்ப்படுவது, நல்லதொரு காரியமல்ல. ஒரு செல்வந்தராக இருந்தால், பௌதிக வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் ஏற்றாக வேண்டும், அல்லது ஏழையாக இருந்தால்... அதுவும் ஒரு பொருட்டல்ல. இந்த பௌதிக உலகிற்குள் ஜடவுடலினுள் வருபவர்கள் எவரும், இவ்வனைத்து துன்பங்களையும் ஏற்றாக வேண்டும். அமெரிக்கர்கள் என்பதால், உலகின் செல்வந்த நாடு. நோய் இல்லை, முதுமை இல்லை என்று அர்த்தமாகிவிடாது. பிறப்பு இல்லை, இறப்பு இல்லை என்று எனவே புத்திசாலி யாரெனில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவன். அவனே புத்திசாலி. ஒட்டுவேலை செய்துகொண்டிருக்கும் மற்றவர்கள், பௌதிக வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வோர், அவர்களால் முடியவில்லை என்றாலும் - அது சாத்தியமல்ல.