TA/Prabhupada 0526 - ஆனால் கிருஷ்ணரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், மாயையால் ஒன்றும் செய்ய முடியாது

Revision as of 07:42, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

தமால கிருஷ்ணன்: மாயை ஒருவரை தன் வசம் செய்தால், கிருஷ்ணரிடம் விரைந்து செல்லும் வழி என்ன?


பிரபுபாதர்: ஓ, அது வெறும் கிருஷ்ணர்... எப்பொழுது மாயையின் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, கிருஷ்ணரை வேண்டிக்கொள், "தயவுசெய்து என்னை காப்பாத்து. தயவுசெய்து என்னை காப்பாத்து." இது தான் ஒரே வழி. பிறகு அவர் உன்னை காப்பாத்துவார். நாம் மாயையின் சாம்ராஜ்யத்தில் இருக்கிறோம், ஆக இங்கே மாயையின் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது, ஆனால் நாம் கிருஷ்ணரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், மாயையால் ஒன்றும் செய்ய முடியாது. கிருஷ்ணரை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். பிறகு வீழ்ச்சியே ஏற்படாது. ஆம்.


மதுத்விசன்: பிரபுபாதரே, நாங்கள் சங்கீர்த்தனம் செய்ய வெளியே செல்லும்போது, மக்களை ஈடுபடுத்தி, சங்கீர்த்தனத்தில் பங்கேற்று எங்களுடன் நாம ஜபம் செய்ய வைப்பதற்கு எது சிறந்த வழி ? எது சிறந்த வழி...


பிரபுபாதர்: சிறந்த வழி என்றால் நாம ஜபம் செய்துகொண்டே இருப்பது தான். மக்களை திருப்தி படுத்துவது உன் வேலை‌ அல்ல. உன் வேலை கிருஷ்ணரை திருப்தி படுத்துவது, பிறகு மக்கள் தானாகவே திருப்தி அடைவார்கள். நாம் மக்களைத் திருப்தி படுத்துவதற்கு செல்வதில்லை. நாம் அவர்களுக்கு ஒரு விஷயத்தை அளிக்க செல்கிறோம், அது கிருஷ்ணர். ஆக கிருஷ்ணரை சரியான வகையில் வழங்குவதில் நீங்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் திருப்தி அடைவார்கள். உங்கள் ஒரே வேலை கிருஷ்ணரை திருப்தி படுத்துவதாக இருக்கவேண்டும். அப்பொழுது எல்லாம் திருப்தி அடையும். தஸ்மின் துஷ்டே ஜகத் துஷ்ட. கிருஷ்ணர் திருப்தி அடைந்தால் பிறகு முழு உலகமும் திருப்தி அடையும். வேரில் நீரூட்டினால், அந்த நீர் தானாகவே மரத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஆக கிருஷ்ணர் தான் அந்த பெரிய மரம், மரத்தின் வேர் மற்றும் நீ கிருஷ்ணருக்கு நீரூட்டவேண்டும். ஹரே கிருஷ்ண ஜபித்து, விதிமுறைகளையும் கட்டளைகளையும் பின்பற்றினால் எல்லாம் சரியாக இருக்கும்.