TA/Prabhupada 0527 - கிருஷ்ணருக்கு கொடுப்பதனால் நமக்கு நஷ்டமாவதில்லை- நாம் இலாபத்தை மட்டுமே அடைகிறோம்



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

பிரபுபாதா: இப்பொழுது, ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

ஜெய-கோபாலன் : அன்பிற்குரிய ஒருவரிடமிருந்து உணவை ஏற்பது போல், பிரசாதம் ஏற்றுக் கொள்வது அன்புப் பரிமாற்றங்களுள் ஒன்றா ?

பிரபுபாதர் : ஆம்..நீங்கள் அளிக்கிறீர்கள், பெறுகிறீர்கள். த3தா3தி ப்ரதி க்3ரிஹ்னாதி பு4ங்தே போ4ஜயதே கு3ஹ்யம் ஆக்யாதி ப்ரிச்சதி ச நீங்கள் கிருஷ்ணரிடம் மனம் திறந்தால், கிருஷ்ணரும் நமக்கு வழி காட்டுவார். நீங்கள், "கிருஷ்ணரே, தாங்கள் எனக்கு எல்லாவற்றையும் அளித்துள்ளீர். "எனவே தாங்கள் முதலில் சுவைப்பீராக". என்று படைப்பதன் மூலம், கிருஷ்ணரை திருப்தி செய்யலாம். கிருஷ்ணர் அதனை உண்டுவிட்டு, பிறகு படைத்ததை, படைத்தவாறே திருப்பி கொடுத்து விடுவார். பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வசிஷ்யதே (வேதம் வழங்கும் அறிவு ) நாம் கிருஷ்ணருக்கு படைக்கின்றோம். அதற்காக... அதை கிருஷ்ணர் உண்கிறார். ஆனால் கிருஷ்ணர் பரிபூரணமானவர் என்பதால் , அனைத்தையும் திருப்பி கொடுத்து விடுகிறார். எனவே நாம் கிருஷ்ணருக்கு கொடுப்பதால் எதையும் இழப்பதில்லை , என்பதை மக்கள் புரிந்து கொள்வதே இல்லை. நாம் நன்மையே பெறுகிறோம். நன்மைதான். ... நீங்கள் கிருஷ்ணரை நன்றாக அலங்காரம் செய்தால் .. நமக்குள் இருக்கும், "அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசை", பூர்த்தியாகும். இந்த உலகில் உள்ள மற்ற எந்த பெயரளவு அழகும் உங்களை கவராது நாம் கிருஷ்ணரை நன்னிலையில் வைத்துக்கொண்டால், நம் நிலைமை நன்றாக மாறும். கிருஷ்ணருக்கு நன்றாகப் படைத்து , அதை சுவைக்கலாம் . நன்றாக அலங்கரித்த முகத்தின் அழகை , கண்ணாடி இல்லாமல் ரசிக்க முடியாது. அது போல அது போலவே, நாம் கிருஷ்ணருடைய பிம்பம் எனவே நாம் கிருஷ்ணரை திருப்தி செய்தால் நாம் திருப்தி அடையலாம். கிருஷ்ணருக்கு நம்முடைய சேவை தேவையில்லை , அவர் தம்முள் பரிபூரணமானவர். ஆனால் அவரை நாம் திருப்தி செய்தால் நாம் திருப்தி அடைவோம் இது தான் கிருஷ்ண பக்தி இயக்கம். எனவே கிருஷ்ணரை நன்றாக அலங்கரித்து , அவருக்கு எல்லா உணவு பண்டங்களையும் படைத்து , சௌகரியமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணருடன் உறவாடுவதுதான் பக்தி. பௌதிக ஆசை என்பது ஒரு நாயின் வாலை போன்றது. ஆம்....ஒரு நாயின் வாலை போன்றது. எவ்வளவு தான் நிமிர்த்தினாலும் படியாது.(சிரிப்பு) பார்த்திருக்கிறீர்களா. ஆக மக்களுக்கு பௌதிக இன்பம் வேண்டும். "சுவாமிஜி மந்திர, தந்திரங்கள் மூலம் பௌதிக இன்பங்கள் அளித்தால்" அனைவரும் நாடி வருவார்கள். ஸ்வாமிஜி, "இவையெல்லாம் முட்டாள்த்தனம், கிருஷ்ணரிடம் வாருங்கள். "என்றால் வர மாட்டார்கள். "இது நல்லதல்ல, நல்லதல்ல" ஏனெனில் நாய் வாலை நிமிர்த்த முடியாது. நீங்கள் என்ன மருந்து தடவினாலும், அது வளைந்தே நிற்கும் . (சிரிப்பு) இதுதான் வியாதி. அவர்களுக்கு பௌதிக விஷயங்கள் வேண்டும் . அவ்வளவுதான். இன்பத்தை குறுக்கு வழியில் பெறுவதுதான் , இவர்களுடைய நோக்கம் மதுவை அருந்திவிட்டு தெய்வீக லோகத்தை அடைந்ததாக நினைக்கிறார்கள்...இது பைத்தியக்காரத்தனம். இவர்கள் இது போன்றதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் முட்டாள்களின் ஸ்வர்க்கத்தில் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால், நாம் உண்மையான ஸ்வர்க்கத்தை அளித்தலோ, ஏற்க மறுக்கிறார்கள். சரி, கீர்த்தனம் செய்யுங்கள்.