TA/Prabhupada 0594 - பௌதிகக் கருவிகளால் ஆத்மாவை அளக்கமுடியாது
Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972
எனவே மறுப்பு மூலம் வரையறை. இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மீகத் துகள் என்ன என்பதை நேரடியாக நம்மால் பாராட்ட முடியாது. ஏனென்றால், அந்த ஆன்மீக ஆத்மாவின் நீளத்தையும் அகலத்தையும் நம் பௌதிக கருவிகளால் அளவிட இயலாது, விஞ்ஞானிகள் அதை அளவிட முடியும் என்று கூறினாலும் எப்படியிருந்தாலும், அது சாத்தியம் என்றாலும்கூட, முதலில், ஆன்மா எங்குள்ளது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பிறகு நீங்கள் அதை அளவிட முயற்சி செய்யலாம். முதலில், நீங்கள் பார்க்கக்கூட முடியாது. ஏனெனில் இது தலைமுடியின் நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பகுதி, மிகச் சிறியது. இப்போது, நம்மால் பார்க்க முடியாததால், நம் சோதனை அறிவால் நாம் பாராட்ட முடியாது; எனவே கிருஷ்ணர் ஆத்மாவின் இருப்பை எதிர்மறையான முறையில் விவரிக்கிறார்: "அது இதுவல்ல." சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ள முடியாதபோது, விளக்கம் கொடுக்கப்படுகிறது: "அது இதுவல்ல." அது என்னவென்று என்னால் வெளிப்படுத்த முடியாவிட்டால், "அது இதுவல்ல" என்று எதிர்மறையாக வெளிப்படுத்தலாம். "அது இதுவல்ல." அப்படியென்றால் அது "இது அல்ல"? "இது அல்ல" என்பது "இது பௌதிகப் பொருள் அல்ல." ஆன்மீக ஆத்மா பௌதிகமானது அல்ல ஆனால் பௌதிகப் விஷயங்களைப் பற்றிய அனுபவம் நமக்கு கிடைத்துள்ளது. அது எதிர்மறை என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? அது அடுத்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது, அந்த நைனம் சிந்தந்தி ஷாஸ்திரானி (BG 2.23) நீங்கள் எந்த ஆயுதத்தை - கத்தி, வாள் கொண்டும் ஆன்மீக ஆத்மாவை வெட்ட முடியாது. அது சாத்தியமில்லை. நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி மாயவாத தத்துவம் "நான் பிரம்மம்" என்று கூறுகிறது எனது மாயை காரணமாக, நான் பிரிந்துவிட்டதாக உணர்கிறேன். இல்லையெனில் நான் ஒருவன்" ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், மமைவாம்ஷோ ஜீவ-பூத: (பகவத் கீதை 15.7) எனவே, முழுமையான ஆத்மாவிலிருந்து, துண்டு துண்டுகளாக வெட்டி பிரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமா? இல்லை. நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி (BG 2.23) அதை துண்டுகளாக வெட்ட முடியாது. பிறகு? அதற்கான பதில் ஆன்மீக ஆத்மா நித்தியமானது. மாயயையால் அது பிரிக்கப்பட்டதல்ல. இல்லை. அது எப்படி இருக்க முடியும்? ஏனெனில் அதை துண்டுகளாக வெட்ட முடியாது.
அவர்கள் வாதங்களை வைப்பது போல கடாகாஷ-போடாகாஷ அது "பானைக்குள் உள்ள வானம் பானைக்கு வெளியே உள்ள வானம், பானையின் சுவற்றின் காரணமாக, பானைக்குள் வானம் பிரிக்கப்படுகிறது. ஆனால் அதை எவ்வாறு பிரிக்க முடியும்? அதை துண்டுகளாக வெட்ட முடியாது. வாதத்தின் பொருட்டு .. உண்மையில், நாம் மிக, மிகச் சிறிய துகள், ஆன்மீக மூலக்கூறு பாகங்கள். அதனால்... அவை நித்திய பகுதியாக உள்ளன. அது சூழ்நிலை ரீதியாக ஒரு பகுதியாகி, மீண்டும் சேருவது என்பதல்ல இது சேரலாம், ஆனால் ஒரே மாதிரியான முறையிலான, கலப்பு வழியில் அல்ல. இல்லை. அது இணைந்தாலும் கூட, அது, ஆன்மா தனது இருப்பை தக்க வைத்திருக்கிறது. ஒரு பச்சை பறவை ,மரத்திற்குள் இருப்பது போல பறவை இப்போது மரத்தில் கலந்துவிட்டது என்று தோன்றுகிறது, ஆனால் அது அவ்வாறு இல்லை. பறவை அதன் அடையாளத்தை மரத்திற்குள் வைத்திருக்கிறது. அதுதான் முடிவு. மரம் மற்றும் பறவை இரண்டும் பச்சை நிறமாக இருந்தாலும், பறவை இப்போது மரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது, இந்த இணைப்பு என்பது பறவையும் மரமும் ஒன்றாகிவிட்டது என்று அர்த்தமல்ல. இல்லை. அது அப்படித் தோன்றுகிறது. இவை இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், பறவை இல்லை என்பது போல தோன்றுகிறது ...,. ஆனால் அது ஒரு உண்மை அல்ல. பறவை ... இதேபோல், நாம் தனிப்பட்ட ஆன்மீக ஆத்மா. தரம் ஒன்று, உதாரணத்திற்கு, பசுமை, ஒருவர் பிரம்மத்தின் ஒளிர்வில் ஒன்றிணையும்போது, உயிரினங்கள் தனது அடையாளத்தை இழக்காது. மேலும் அவர் அடையாளத்தை இழக்கவில்லை என்பதாலும், இயற்கையாகவே உயிரினங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாலும், அவர் பல நாட்கள் மாயாவாத பிரம்மத்தின் ஒளிர்வில் இருக்க முடியாது. ஏனென்றால் அவர் மகிழ்ச்சியைத் தேட வேண்டும். அந்த மகிழ்ச்சி என்றால் பன்முகத்தன்மை.