TA/Prabhupada 0595 - வகை வகையாய் நுகர்வதற்கு ஓர் கிரகத்தில் தங்குதல் வேண்டும்



Lecture on BG 2.23 -- Hyderabad, November 27, 1972

ஆகவே, பிரம்ம ஜோதியில் அது சின்-மாத்ரையாக இருக்கிறது, ஆத்மா மட்டும், ஆத்மாவில் வகைகள் இல்லை. இது வெறுமனே ஆத்மா. வானத்தைப் போல. வானமும் ஒரு ஜடப் பொருள். ஆனால் வானத்தில், எந்த வகையும் இல்லை நீங்கள் வகைகளை விரும்பினால், இந்த பௌதிக உலகில்கூட, நீங்கள் ஒரு கிரகத்தில் தஞ்சமடைய வேண்டும், நீங்கள் பூமிக்கு வரவேண்டும் அல்லது சந்திர கிரகம் அல்லது சூரிய கிரகத்திற்கு செல்லவேண்டும். இதேபோல், பிரம்மஜோதி என்பது கிருஷ்ணரின் உடலில் இருந்து ஒளிரும் கதிர்கள் யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (பிரம்ம சம்ஹிதை 5.40). சூரிய ஒளி சூரிய கோளத்திலிருந்து ஒளிர்கிறது, சூரிய கோளத்திற்குள், சூரியக் கடவுள் இருக்கிறார், இதேபோல், ஆன்மீக உலகில், பிரம்மன், ஜோதி, அருவ பிரம்மன், மற்றும் பிரம்மஜோதியில், ஆன்மீக கிரகங்கள் உள்ளன அவை வைகுண்டலோகங்கள் என்று அறியப்படுகின்றன . மேலும் வைகுண்டலோகங்களில் முதன்மையானது கிருஷ்ணலோகம். எனவே கிருஷ்ணரின் உடலில் இருந்து, பிரம்மஜோதி வெளிவருகிறது. யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (பிரம்ம சம்ஹிதை 5.40) அந்த பிரம்ம ஜோதியில் அனைத்தும் இருக்கிறது. ஸர்வம் கலவ் இதம் ப்ரஹ்ம. பகவத்-கீதையில், மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி நாஹம் தேஷு அவஸ்தித: (பகவத் கீதை 9.4) என்றும் கூறப்படுகிறது. அனைத்தும் அவரது ஒளிர்வில் , பிரம்ம ஜோதியில்

இருக்கும் உலகத்தைப் போலவே, எண்ணற்ற கிரகங்களும் சூரிய ஒளியில் உள்ளன சூரிய ஒளி என்பது சூரிய கோளத்தின் ஒளிர்வு ஆகும், மேலும் பல லட்சக்கணக்கான கிரகங்கள் சூரிய ஒளியில் உள்ளன சூரிய ஒளி காரணமாக எல்லாம் நடக்கிறது. இதேபோல் பிரம்ம ஜோதி , கிருஷ்ணரின் உடலில் இருந்து வெளியேறும் கதிர்கள் எல்லாமே அந்த பிரம்ம ஜோதியில் தங்கியிருக்கின்றன உண்மையில், பல்வேறு வகையான ஆற்றல்கள் சூரிய ஒளியில் பல்வேறு வகையான வண்ணங்கள், ஆற்றல்கள் உள்ளது போல அதுதான் இந்த பௌதிக உலகத்தை உருவாக்குகிறது. நாம் நடைமுறையில் அனுபவிக்க முடிவது போல. மேற்கத்திய நாடுகளில் சூரிய ஒளி இல்லாதபோது, ​​பனி இருக்கும் போது மரத்தின் இலைகள் அனைத்தும் உடனடியாக கீழே விழுகின்றன. இது இலையுதிர் காலம் என்று அழைக்கப்படுகிறது மரம் மட்டுமே எஞ்சி இருக்கும் மீண்டும், வசந்த காலம் வரும் போது, ​​சூரிய ஒளி கிடைக்கும், அனைத்தும் ஒரு நேரத்தில், அவை பச்சை நிறமாகின்றன இந்த பௌதிக உலகில் சூரிய ஒளி செயல்படுவது போல இதேபோல் பரம புருஷரின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களே எல்லா படைப்பின் ஆதியாகும். யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (பிரம்ம சம்ஹிதை 5.40) பிரம்ம ஜோதியின் காரணமாக, பல லட்சக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன