TA/Prabhupada 0683 – விஷ்ணுவுருமேல் சமாதிநிலை தியானத்திலிருக்கும் யோகி & கிருஷ்ண பிரக்ஞை நபரிடையே வித்தி

Revision as of 07:56, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.30-34 -- Los Angeles, February 19, 1969

விஷ்ணுஜன: " கிருஷ்ணர் பரமாத்மாவின் ரூபத்தில் எல்லோரது இதயத்திலும் உள்ளார். எண்ணற்ற உயிர்வாழிகளின் இதயங்களில் வசிக்கும் எண்ணற்ற பரமாத்மாவிற்கு இடையில் எவ்வித வேற்றுமையும் இல்லை. மேலும், எப்போதும்..... "

பிரபுபாதா : உதாரணத்திற்கு, வானத்தில் ஒரு சூரியன் உள்ள்து. ஆனால், பூமியில் நீங்கள் லட்சக் கணக்கான தண்ணீர் பானைகளை வைத்தால், ஒவ்வொரு தண்ணீர்ப் பானையிலும் சூரியனின் பிரதிபலிப்பை நீங்கள் காணலாம். இன்னொரு உதாரணம் : நண்பகலில் , பல்லாயிரம் மைல் தொலைவில் இருக்கும் உங்கள் நண்பரிடம் "சூரியன் எங்கே ?"என்று நீங்கள் கேட்டால் , அவர் "என் தலை மீது "என்று சொல்வார். பல்லாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் சூரியனை தங்கள் தலைக்குமேல் காணலாம் . ஆனால் ஒரு சூரியன் தான் உள்ளது. இன்னொரு உதாரணம், தண்ணீர்ப் பானை. ஒரு சூரியன் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான தண்ணீர்ப் பானைகள் இருக்கும்போது, ஒவ்வொரு பானையிலும் சூரியன் பிரதிபலிப்பதை நீங்கள் பார்க்கலாம். அதைப்போலவே எண்ணிலடங்கா உயிர்வாழிகள் இருக்கலாம். அதற்கு கணக்கே இல்லை.ஜீவஸ்ய அஸங்க்2ய. வேதத்தில், உயிர்வாழிகளின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எண்ணிலடங்காதது. அதைப் போலவே, விஷ்ணு... ஜட இயற்கைப் பொருளான சூரியனே ஒவ்வொரு தண்ணீர்ப் பானையிலும் பிரதிபலிக்க முடியும் என்றால், முழுமுதற்க் கடவுளான விஷ்ணு, ஏன் ஒவ்வொரு இதயத்திலும் வாழ முடியாது? இது புரிந்து கொள்வதற்கு கடினமானது அல்ல. அவர் வாழ்கிறார். அது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு யோகி , தன் மனதை அந்த விஷ்ணுவின் உருவத்தின் மீது செலுத்த வேண்டும். இந்த விஷ்ணுவின் வடிவம் , கிருஷ்ணரின் விரிவங்கமாகும்.

எனவே கிருஷ்ண உணர்வில் இருப்பவன், ஏற்கனவே பக்குவமான யோகி ஆகிவிடுகிறான். இது விளக்கப்படும். அவன் பக்குவமான யோகி. இதன் விளக்கத்தை, இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகத்தில் பார்க்கலாம் . மேலே சொல்லுங்கள்,

விஷ்ணுஜன: " கிருஷ்ணருடைய திவ்யமான அன்பு தொண்டில் ஈடுபட்டு இருக்கும் பக்தனுக்கும், பரமாத்மாவை தியானிப்பதில் ஈடுபட்டிருக்கும் பக்குவமான யோகிக்கும் வேற்றுமை இல்லை.

பிரபுபாதா: எந்த வேற்றுமையும் இல்லை. விஷ்ணுவின் உருவத்தின்பால் , சமாதி நிலையில் இருக்கும் ஒரு யோகிக்கும், கிருஷ்ண உணர்வுள்ள பக்தனுக்கும் , எந்த வித்தியாசமும் இல்லை.

விஷ்ணுஜன: " கிருஷ்ண உணர்வில் உள்ள யோகி, தனது பௌதீக இருப்பிற்காக வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், எப்போதும் கிருஷ்ணரில் நிலைத்தவனாக உள்ளான். கிருஷ்ண உணர்வில் எப்போதும் செயல்படும் பக்தன் இயற்கையாகவே முக்தி பெற்ற நிலையில் உள்ளான்.

பிரபுபாதா: இதை நாம் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் காணலாம் . அதாவது,

மாம்' ச யோ 'வ்யபி4சாரேண
ப4க்தி-யோகே3ன ஸேவதே
ஸ கு3ணான் ஸமதீத்யைதான்
ப்3ரஹ்ம-பூ4யாய கல்பதே
(ப.கீ 14.26)

அதாவது, எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபடும் ஒருவன், பௌதீக இயற்கையின் குணங்களை ஏற்கனவே கடந்தவனாகி விடுகிறான். ப்3ரஹ்ம-பூ4யாய கல்பதே. அவன் பிரம்ம நிலையில் , அதாவது, முக்தி பெற்ற நிலையில் உள்ளான். முக்தி பெறுவது என்றால், பிரம்ம நிலையில் இருப்பது என்று பொருள். மூன்று நிலைகள் உள்ளன. உடல் அல்லது புலன் சார்ந்த தளம், அடுத்து, மனதின் தளம், அடுத்து ஆன்மிக தளம். ஆன்மிக தளமே பிரம்ம நிலை எனப்படுவது. எனவே, முக்தியடைவது என்றால், பிரம்ம நிலையில் இருப்பது என்று பொருள். பந்தப்பட்ட ஆத்மாவாகிய நாம் , தற்போது இந்த உடல் மற்றும் புலன் சார்ந்த தளத்தில் இருக்கிறோம் . இதை விட சிறிது முன்னேறியவர்கள், மனதின் தளத்தில் உள்ளார்கள் . கற்பனை யாளர்கள், தத்துவவாதிகள். இதற்கும் மேலே பிரம்ம நிலை உள்ளது. எனவே நீங்கள் பகவத் கீதையின் பன்னிரண்டாவது, இல்லை, பதினான்காவது அத்தியாயத்தில் நீங்கள் காணலாம், அதாவது, கிருஷ்ண உணர்வில் இருப்பவன் ஏற்கனவே பிரம்ம நிலையில் உள்ளான். அதாவது முக்தியடைந்த நிலை. அடுத்து,..

விஷ்ணுஜன : " நாரத பஞ்சராத்ரத்தில், இது பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது: காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட கிருஷ்ணர் எங்கும் பரவி உள்ளார் . அவரது திவ்ய ரூபத்தில் கவனம் செலுத்துபவர் அவரது நினைவில் மூழ்கி, பின்னர் அவருடனான திவ்யமான உறவை பெறும் ஆனந்த நிலையை அடைகிறான். யோகப் பயிற்சியின் உன்னதமான பக்குவ நிலை, கிருஷ்ண உணர்வே. கிருஷ்ணர் எல்லோரின் இதயத்திலும் பரமாத்மாவாக உள்ளார் எனும் அறிவு , யோகியை குற்றமற்றவன் ஆக்கிவிடுகிறது. பகவானது இந்த அசிந்திய சக்தியை வேதங்கள் பின்வருமாறு உறுதி செய்கின்றன: விஷ்ணு ஒருவரே என்ற போதிலும் அவர் எங்கும் நிறைந்துள்ளார். தனது அசிந்திய சக்தியால் , தனக்கென்று ஒரு ரூபம் உள்ளபோதிலும், பகவான் விஷ்ணு எல்லா இடங்களிலும் வீற்றுள்ளார். சூரியன் எவ்வாறு ஒரே சமயத்தில் பல இடங்களில் தோற்றமளிக்கிறதோ, அதுபோல .

பிரபுபாதா : இந்த உதாரணத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். எப்படி சூரியனால் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடிகிறதோ அது போல, விஷ்ணு அல்லது கிருஷ்ணரால் எல்லா இட்ஙகளிலும் இருக்க முடியும். அவர் உண்மையில் இருக்கிறார். " ஈஷ்2வர: ஸர்வ-பூ4தானாம்' ஹ்ரு'த்3-தே3ஷே2 'ர்ஜுன (ப.கீ 18.61) அவர் அமர்ந்திருக்கிறார். எந்த இடம் என்று கூட சொல்லப் பட்டிருக்கிறது. ஹ்ருத் தேஷே . ஹ்ருத் தேஷே என்றால் இதயம் . எனவே, யோகத்தில் தியானம் என்றால், விஷ்ணு நம் இதயத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார் என்று அறிவது தான்.