TA/Prabhupada 0151 - நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
Lecture on SB 7.6.1 -- Madras, January 2, 1976
ஆக நாம் பலவிதமான திட்டங்களை தீட்டுகிறோம் ஆனால் அந்த முயற்சி வெற்றி அடையாது. நேற்று இரவு நான் அதை விளக்கியிருந்தேன், அதாவது நாம் சுதந்திரமாக யோசித்து சந்தோஷமாக இருப்பதற்காக பல திட்டங்களை தீட்டுகிறோம். அது சாத்தியமில்லை. அது மாயாவின் மாய விளையாட்டு. தைவி ஹி எஷா குணமயீ மம மாயா துரத்யயா. உங்களால் அதை வெல்ல முடியாது. பிறகு அனைத்திற்கும் உன்னதமான தீர்வு தான் என்ன? மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (பகவத் கீதை 7.14). நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு நம்முடைய ஸ்வரூப நிலையை நம்மால் மீண்டும் உணரமுடியும். அதாவது... கிருஷ்ண உணர்வு என்றால் பல விஷயங்களை உணர்வில் வைத்திருப்பதற்கு பதிலாக... அவை அனைத்தும் அசுத்தமான உணர்வுகள். உண்மையான... நமக்கு உணர்வு இருக்கிறது, அது உண்மை, ஆனால் நம் உணர்வு அசுத்தமானது. ஆக நாம் நம் உணர்வை புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். உணர்வை தூய்மைப்படுத்துவது தான் பக்தி. பக்தி என்ற வார்த்தைக்கு நாரத பண்சராத்திரத்தில் வழங்கப்பட்ட அர்த்தம்... ரூப கோஸ்வாமீ கூறுகிறார், அன்யாபிலாஷிதா-ஷூன்யம் ஞான-கர்மாதி-அனாவ்ருதம் ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-ஷீலனம் பக்திர் உத்தமா (பக்தி ரசாம்ருத ஸிந்து 1.1.11). இதுதான் சிறந்த பக்தி அதாவது அதற்கு வேறு எந்த நோக்கம் கிடையாது. அன்யாபிலா... இங்கு இந்த பௌதிக உலகில், நாம் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ப்ரக்ருதேஹே க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷஹ அஹங்கார-வீமூடாத்மா கர்தா... (பகவத் கீதை 3.27). நாம் ப்ரக்ருதியின், ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் நமது முட்டாள்தனத்தால், நாம் நம் நிலையை மறந்து இருக்கின்றோம், ஆக அஹங்கார, பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம்: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்திரியன்." இது பொய்யான அஹங்காரம். எனவே, நாரத பஞ்சராத்திரம் கூறுகிறது, சர்வோபாதி-வினிர்முக்தம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170). ஆக இத்தகைய அடையாளங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும், பற்றற்று இருக்கவேண்டும், "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இது," "நான் அது." "நான் இன்னார்..." சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம். அவர் தூய்மையான அந்த நிலையை அடைந்ததும், நிர்மலம், எந்த பௌதிக அடையாளமும் இல்லாமல், அதாவது "நான் கிருஷ்ணரின் அம்சம் மட்டுமே." ஆஹம் ப்ரம்மாஸ்மி. இதுதான் அஹம் ப்ரம்மாஸ்மி. கிருஷ்ணர் பர-ப்ரம்மன். அவர் ஸ்ரீமத் பகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளார். அர்ஜுனர்... பரம் ப்ரஹ்மா பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் ஷாஸ்வதம் ஆத்யம் (பகவத் கீதை10.12). அர்ஜுனர் அதை உணர்ந்து கூறினார், "தாங்கள் அனைத்து அதிகாரிகளாலும் (முழுமுதற் கடவுளாக) அங்கீகரிக்கப்பட்டவர்." அந்த அதிகாரிகளில் ப்ரகலாத மஹாராஜரும் ஒருவர். நான் அதிகாரிகளைப் பற்றி விவரித்திருக்கிறேன். ப்ரஹ்மா ஒரு அதிகாரி, சிவ பெருமான் ஒரு அதிகாரி, பிறகு கபில தேவர் ஒரு அதிகாரி, குமார, நான்கு குமாரர்கள், அவர்களும் அதிகாரிகள், மேலும் மனு ஒரு அதிகாரி. அதுபோலவே பிரகலாத மஹாராஜரும் ஒரு அதிகாரி. ஜனக மஹாராஜா ஒரு அதிகாரி. பன்னிரெண்டு அதிகாரிகள். ஆக அர்ஜுனர் உறுதிப்படுத்தினார், "இப்பொழுது தாங்களே, தாங்கள் முழுமுதற் கடவுள் என்பதை எனக்கு அறிவித்திருக்கிறீர்கள்," மத்த: பரதரம் நான்யத் (பகவத் கீதை 7.7), "மேலும் பகவத்-கீதையில் நடந்த நம் பேச்சுவார்த்தையிலிருந்து, நானும் தங்களை பர-ப்ரம்மனாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும் அது மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரிகளும் தங்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." சமீபத்தில், நமது காலத்தில், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்கிறார்கள். சங்கராச்சாரியரும் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் கிருஷ்ண:. ஆக கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அனைத்து ஆச்சாரியர்களும் ஏற்றிருக்கிறார்கள். ஆக நாம் ஆச்சாரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சாதாரணமானவனிடமிருந்தோ அல்லது தானே அறையும் குறையுமாக கற்று தன்னை ஆச்சார்யார் என பிரகடனம் செய்யும் நபர்களிடமிருந்தோ கற்கக் கூடாது. இல்லை. அது உதவாது. உதாரணத்திற்கு, சிலசமயம் நீதிமன்றத்தில், மற்றொரு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை ஆதாரமாக மதித்து தீர்ப்பு வழங்குகிறோம் ஏனென்றால் அது அதிகாரம் வாய்ந்தது. நமக்கு தோன்றியது போல் தீர்ப்பை அளிக்க முடியாது. அதுபோலவே, ஆச்சார்யோபாஸனம், பகவத்-கீதையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஆச்சாரியர்களிடம் செல்ல வேண்டும். ஆச்சார்யவான் புருஷோ வேத: "சீடப் பரம்பரையில் ஆச்சாரியரை ஏற்ற ஒருவனே, அனைத்தையும் தெளிவாக அறிவான்." ஆக எல்லா ஆச்சாரியர்களும், கிருஷ்ணரை பரமபுருஷரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். நாரதர், ஒப்புக்கொள்கிறார். வியாசதேவர் ஏற்றுக் கொள்கிறார், மேலும் பகவத்-கீதையை நேரடியாக கிருஷ்ணரிடமிருந்தே கேட்ட அர்ஜுனரும் ஏற்றுக்கொள்கிறார். பிரம்ம தேவர். நேற்று யாரோ கேட்டிருந்தார், "துவாபர-யுகத்திற்கு முன்பு கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டது உண்டா?" அது இருந்தது. சாஸ்திரத்தில், கிருஷ்ணர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். வேதங்களில், அதர்வ வேதம் மற்றும் மற்ற இடங்களிலும், கிருஷ்ணரின் பெயர் இருக்கிறது. மேலும் ப்ரம-சம்ஹிதையில் - பிரம்ம தேவர், ப்ரஹ்ம-சம்ஹிதையை எழுதினார் - அதில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, ஈஷ்வர: பரம: கிருஷ்ண: சச்-சித்-ஆனந்த-விக்கிரக: (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1), அனாதிர் ஆதி:. அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1). மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய (பகவத் கீதை 7.7). அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ (பகவத் கீதை 10.8). ஸர்வஸ்ய என்றால் தேவர்கள் உட்பட, அனைவரும், அனைத்து உயிர் வாழிகளும், எல்லாம் உட்பட. மேலும் வேதாந்தம் கூறுகிறது, ஜன்மாதி அஸ்ய யத: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). ஆக பூரணமான அந்த மீயுயர்ந்த நபர் கிருஷ்ணரே, ஈஷ்வர: பரமம், என பிரம்ம தேவர் கூறுகிறார். வேத ஞானத்தை பரப்புபவர் அவரே, மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யம் (பகவத் கீதை 15.15). இதுதான் மீயுயர்ந்த இலக்கு.