TA/Prabhupada 0187 - எப்பொழுதும் பிரகாசமான வெளிச்சத்தில் தொடர்ந்து இருங்கள்

Revision as of 18:30, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 2.8.7 -- Los Angeles, February 10, 1975

ஆகையால் இந்த அறியாமை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் எதிர்கால வழிகாட்டுதலுக்கு, பரீட்சித்து மகாராஜா இந்த கேள்வியை வினவினார், அதாவது "எவ்வாறு இந்த ஜீவாத்மாக்கள் இந்த உடலை, ஜட உடலை பெற்றனர்? இது தன்னியக்கமானதா, எந்த காரணமும் இல்லாமலா, அல்லது காரணத்தோடா?" ஆனால் காரணத்தோடு.... அது விவரிக்கப்படும். அது இல்லை.... காரணம் அங்கு இருக்கும் போது.... எவ்வாறு என்றால் உங்களுக்கு சில நோய் தொற்றிக் கொண்டால், தன்னியக்கமாக நீங்கள் அந்த நோயினால் வேதனைப்படுவீர்கள். அது தன்னியக்கமாக வந்துவிடும். அதுதான் தன்னியக்கம். ஆனால் நீங்களாக நோயை தொற்றிக் கொண்டால், அது காரணமாகும். ஆகையால் நீங்கள் நோயை தொற்றிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்தால், பிறகு தாழ்ந்த பிறப்பு அல்லது வேதனைகளை நீங்கள் தவிர்க்கலாம். ஆகையினால் நாங்கள் இந்த இயக்கத்தை தொடங்கினோம், இயக்கம். இயக்கம் என்றால் அதாவது இங்கு நீங்கள் மேன்மைபடுத்தப்படுவதன் காரணத்தை தெரிந்துக் கொள்வீர்கள். எவ்வாறு என்றால் அங்கே பல இயக்கங்கள் உள்ளன, சம வகுப்பு மனிதர்கள். "ஒரே இனப் பறவைக் கூட்டம் ஒன்று சேருகிறது." ஆகையால் இங்கு ஒரு இயக்கம் இருக்கிறது. யார் இங்கு கூட்டம் கூடுவார்கள்? யார் இங்கு வருவார்கள்? ஏனென்றால் இந்த இயக்கம் விடுதலை பெறுவதற்கானது..... ஜட வாழ்க்கையின் நிலைமையின் காரணமாக மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஒருவரும் சந்தோஷமாக இல்லை. அதுதான் உண்மை. ஆனால் அவர்கள் அறியாமையில் இருப்பதால், மகிழ்ச்சியற்ற நிலையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது. இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது. யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி தூச்சம் (ஸ்ரீ.பா. 7.9.45). இந்த மாயா பாலின்ப வாழ்க்கையில் தெளிவாய் புலப்படுகிறது. பாலின்ப வாழ்க்கை இன்பகரமானது என்று ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அதற்கு பிறகு, அதில் பல பேரிடர் உள்ளது. சட்டப்படியோ அல்லது சட்டவிரோதமாகவோ, அது விஷயமல்ல. சட்டப்படி துன்பமோ அல்லது சட்டவிரோதமான துன்பமோ, ஆனால் அது துன்பமே. நாம் ஒவ்வொருவரும், நமக்கு தெரியும். ஆகையினால், அனைத்தும்.... தவறான பேரம் பேசுதலை மிகவும் சரியான முறையில் பயன்படுத்த. நாம் இந்த பௌதிக உடலை பெற்றிருக்கிறோம். அதன் காரணம் அங்குள்ளது. அதன் காரணம் அங்குள்ளது. ஏனென்றால் நாம் மகிழ்ச்சியுற விரும்புகிறோன் மேலும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பவில்லை. இதுதான் காரணம். க்ருஷண-பஹிர்முஹ ஹணா போக வாண்சா கரே. நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் எங்களுடைய, நான் சொல்ல நினைப்பது, இடம், இயல்பான நிலை, கிருஷ்ணருக்கு சேவை செய்வது, ஆனால் சில நேரங்களில் நாம் பேராசை கொள்கிறோம்: "நான் ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்? நான் ஏன் ஆன்மீக குருவிற்க்கு சேவை செய்ய வேண்டும்? நான் அனுபவிக்க வேண்டும். நான் அனுபவிக்க வேண்டும்." ஆனால் அந்த பெரு மகிழ்ச்சி கிருஷ்ணருக்கு சேவை செய்வதன் மூலம் அங்கிருந்தது, ஆனால் அவர் அனுபவிப்பாளராக விரும்புகிறார் கிருஷ்ணர் இல்லாமல் சுதந்திரமாக. அதுதான் இழிந்து விழுவதற்கு காரணம். கிருஷ்ணருடன், நீங்கள் மிகவும் சந்தோஷமாக அனுபவிக்கலாம். நீங்கள் சித்திரங்களை பார்த்திருப்பீர்கள், எவ்வாறு கோபியர்கள் கிருஷ்ணருடன் சந்தோஷமாக நாட்டியமாடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள்; மாட்டிடையர்கள் விளையாடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள். கிருஷ்ணருடன், அதுதான் உங்களுடைய உண்மையான சந்தோஷம். ஆனால் கிருஷ்ணர் இல்லாமல், நீங்கள் அனுபவிக்க விரும்பினால், அதுதான் மாயா. அதுதான் மாயா. ஆகையால் மாயா எப்போதும் அங்கிருகிறாள், மேலும் நாம்..... ஏனென்றால் இருள் இல்லையெனில், உங்களால் பிரகாசத்தின் தன்மையை பாராட்ட முடியாது; ஆகையினால் கிருஷ்ணர் இருளை உருவாக்கினார், மாயாவும் கூட, ஆகையால் உங்களால் பிரகாசம் என்பது என்ன என்று பாராட்ட முடியும். இரண்டு விஷயங்கள் தேவைப்படுகிறது. பிரகாசம் இல்லாமல், இருள் பாராட்டப்படாது, மேலும் இருளி ..... இருள் இல்லாமல், பிரகாசம் பாராட்டப்படாது. இந்த இரண்டு விஷயங்களும் அங்கே சேர்ந்திருக்கிறது. எவ்வாறு என்றால் அங்கே சூரிய ஒளி இருக்கிறது, மேலும் இங்கே நிழல் இருக்கிறது, பக்கத்தில் சேர்ந்து. நீங்கள் நிழல்குள்ளே தொடர்ந்து இருக்கலாம்; நீங்கள் சூரிய ஒளியினுள்ளே தொடர்ந்து இருக்கலாம். அது உங்களுடைய விருப்பம். நாம் தொடர்ந்து இருளில் இருந்தால், பிறகு வாழ்க்கை வெறுப்பாகிவிடும், மேலும் நாம் தொடர்ந்து வெளிச்சத்தில், பிரகாசத்தில் இருந்தால்..... ஆகையினால் வேத இலக்கியங்கள் நமக்கு அறிவுரை வழங்குகிறது, தமஸி மா: "இருளில் தொடர்ந்து இருக்காதீர்கள்." ஜொதிர் கமா: "வெளிச்சத்திற்கு செல்லுங்கள்." ஆகையால் இந்த முயற்சி, கிருஷ்ண பக்தி இயக்கம், மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு செல்ல செய்யும் ஒரு முயற்சி. ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். ஏதோ ஒரு வழியாக, நீங்கள் இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டுவிட்டீர்கள். சரியாக அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். இருளுக்குச் செல்லாத்தீர்கள். எப்பொழுதும் பிரகாசமான வெளிச்சத்தில் தொடர்ந்து இருங்கள். மிக்க நன்றி.