TA/Prabhupada 0186 - கடவுள் கடவுள்தான். எவ்வாறு என்றால் தங்கம் தங்கம்தான் என்பதுபோல்
Lecture on BG 7.1 -- Fiji, May 24, 1975
ஆகையால் யாதேணுமோனறில் நாம் இருக்க வேண்டும் வ்ஜியிலோ அல்லது இங்கிளாந்திலோ அல்லது எங்கேயாவது, ஏனென்றால் அனைத்துக்கும் உரிமையாளர் கிருஷ்ணர், எங்கும்..., ஸர்வ லோக மஹேஸ்வரம் (ப. கீ. 5.29). ஆகையால் வ்ஜி ஸர்வ லோகதின் ஒரு சிறிய பிரதேசம். ஆகையால் அவர் அனைத்து லோகத்திற்கும் உரிமையாளர் என்றால், பிறகு அவர் தான் வ்ஜிக்கும் உரிமையாளர். அதில் சந்தேகமே இல்லை. ஆகையால் வ்ஜியின் குடியிருப்பாளர், நீங்கள் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், அதுதான் வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் வாழ்க்கையின் பூரணத்துவம். கிருஷ்ணரின் அறிவுரையிலிருந்து வேறுபட்டு செல்லாதீர்கள். மிக நேரடியாக, பகவான உவாச, பகவான் நேரடியாக உரையாடுகிறார். அதை நீங்கள் சாதகமாகிக் கொள்ளுங்கள். பகவத் கீதையில் தகவல் பெற்றால் உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. நீங்கள்எத்தகைய பிரச்சனையை படைத்தாலும், அங்கே தீர்வு உள்ளது, நிபந்தனைப்படி நீங்கள் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் அவர்கள் உணவுப் பற்றாக்குறை எதிர்கொள்கிறார்கள். இதற்கான தீர்வு பகவத் கீதையில் உள்ளது. கிருஷ்ணர் கூறுகிறார், அன்னாத் பவந்தி பூதானி: (ப. கீ. 3.14) பூதானி, அனைத்து ஜீவாத்மாக்களும், மிருகங்களும் மனிதர்களும் இருவருமே, மிகவும் நன்றாக வாழலாம், எந்த கவலையும் இல்லாமல், போதுமான உணவுத் தானியங்களுடன்." இப்பொழுது இதற்கு உங்களுடைய மறுப்பு என்ன? இதுதான் அதன் தீர்வு. கிருஷ்ணர் கூறுகிறார், அன்னாத் பவந்தி பூதானி. ஆகையால் இது நடைமுறைக்கு அப்பாற்பட்டதல்ல; இது நடைமுறைக்குரியது. மனித இனத்திற்கும் மிருகங்களுக்கும் அளிக்க உங்களிடம் போதுமான உணவு தானியங்கள் இருக்க வேண்டும், பிறகு அனைத்தும் உடனடியாக அமைதியடையும். ஏனென்றால் மக்கள், ஒருவருக்கு பசி எடுத்தால், அவர் குழப்பம் அடைகிறார். ஆகையால் முதலில் அவருக்கு உணவு கொடுங்கள். அதுதான் கிருஷ்ணரின் தடையுத்தரவு. அது மிகவும் சிரமமா, சாத்தியமற்றதா? இல்லை. நீங்கள் அதிகமாக உணவு பயிர் செய்து விநியோகியுங்கள். அவ்வளவு நிலம் அங்கிருக்கிரது, ஆனால் நாம் உணவு பயிர் செய்வதில்லை. நாம் வளர்க்கின்றோம், அல்லது சுறுசுறுப்பாக இருக்கிறோம், உபகரணங்களும் வாகனங்களின் சக்கரங்களை உற்பத்தி செய்வதிலும். அப்படியென்றால் இப்போது வாகனங்களின் சக்கரங்களை சாப்பிடுங்கள். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், அதாவது "நீங்கள் அன்னத்தை பயிர் செய்யுங்கள்." பிறகு அங்கே பற்றாகுறை என்னும் கேள்விக்கே இடமில்லை. அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன் யாதன்ன-ஸம்பவ:. ஆனால் அன்னம் போதுமான மழை இருக்கும் போது உற்பத்தி செய்யப்படுகிறது. பர்ஜன் யாதன்ன-ஸம்பவ: மேலும் யக்ஞாத்பவதி பர்ஜன்ய: (ப. கீ. 3.14) மேலும் நீங்கள்யக்ஞா செய்தால், பிறகு அங்கே அடிக்கடி மழை வரும். இதுதான் முறை, ஆனால் ஒருவருக்கும் யக்ஞாவில் ஆர்வமில்லை, ஒருவருக்கும் உணவு தானியங்களில் ஆர்வமில்லை, மேலும் நீங்களே உங்கள் பஞ்சத்தை உண்டாக்கிக் கொண்டால், பிறகு அது பகவானின் குற்றமல்ல; உங்களுடைய குற்றம். ஆகையால் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள், எதாவது கேள்வி - சமூகம், அரசியல், மெய்யியல், சமயம், எதையாவது நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் - மேலும் அதற்கான தீர்வு அங்குள்ளது. எவ்வாறு என்றால் இந்தியாவை போல், சாதி முறையை எதிர்நோக்குகிறது. பலர் இந்த சாதி முறைக்கு சாதகமாக இருக்கிறார்கள், இன்னும் பலர் சாதகமாக இல்லை. ஆனால் கிருஷ்ணர் தீர்மானிக்கிறார். ஆகையால் சாதகம் அல்லது சாதகம் இல்லை என்ற கேள்விக்கு இடமேயில்லை. இந்த சாதி முறை தரத்தை பொறுத்து நியமிக்கப்பட வேண்டும். சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம (ப. கீ. 4.13). "பிறப்பால்" என்று சொல்லவில்லை. மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் இது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. யஸ்ய யல் லக்ஷணம் ப்ரோக்தம் பும்ஸோ வர்ணாபிவ்யஞ்ஜகம் யத் அன்யத்ராபி த்ருஸ்யேத தத் தேனைவ வினிர்திசேத் (ஸ்ரீ. பா. 7.11.35) நாரத முனியின் தெளிவான அறிவுரை. ஆகையால் நமக்கு அனைத்தும் மிகச் சிறப்பாய் வேத இலக்கியத்தில் உள்ளது, மேலும் நாம் இதை பின்பற்றினால்... கிருஷ்ண பக்தி இயக்கம், இந்த நெறிமுறையில் மக்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சிக்கிறது. நாங்கள் எதையும் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கவில்லை. அது எங்கள் தொழில் அல்ல. ஏனென்றால் எங்களுக்கு தெரியும் நாங்கள் குறைபாடுள்ளவார்கள் என்று. நாங்கள் எதையாவது உற்பத்தி செய்தால் கூட, அதில் குறைபாடு இருக்கும். நம்முடைய வரையறுக்கப் பெற்ற வாழ்க்கையில் நம்மிடம் நான்கு கோளாறுகள் உள்ளன: நாம் தவறு செய்கிறோம், நாம் மாயை தோற்றத்தில் நம்பிக்கை கொள்கிறோம், மற்றவர்களை ஏமாற்றுகிறோம், நம் புலன்கள் குறைபாடுடையது. ஆகையால் இவ்வாறு உள்ள ஒருவரிடமிருந்து, நான் சொல்ல கருதுவது, இந்த அனைத்து கோளாறுகள் உள்ளவரிடமிருந்து எவ்வாறு நம்மால் பூரண அறிவை பெற முடியும். ஆகையினால் நாம் அறிவை உன்னதமான ஒருவரிடம், இந்த குறைகளால் பாதிப்படையாத ஒருவரிடமிருந்து பெற வேண்டும், முக்த-புருஷா. அதுதான் பூரண அறிவு. ஆகையால் எங்கள் வேண்டுகோள் யாதெனில் நீங்கள் அறிவை பகவத் கீதையிலிருந்து பெற்றுக் கொண்டு அதன்படி நடந்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. பகவான் அனைவருக்கும் உரியவர். கடவுள் கடவுள்தான். எவ்வாறு என்றால் தங்கம் தங்கம்தான் என்பதுபோல். தங்கம் ஒரு இந்துவால் கையாளப்பட்டால், அது இந்து தங்மாகாது. அல்லது தங்கம் ஒரு கிருஸ்துவரால் கையாளப்பட்டால், அது கிருஸ்துவ தங்மாகாது. தங்கம் தங்கம்தான். அதேபோல், தர்ம என்பது ஒன்று. மதம் என்பது ஒன்று. அங்கே இந்து மதம், முஸ்லிம் மதம், கிருஸ்துவ மதம், என்பது கிடையாது. அது செயற்கையானது. எவ்வாறு என்றால் "இந்து தங்கம்", "முஸ்லிம் தங்கம்." அது சாத்தியமல்ல. தங்கம் தங்கம்தான். அதேபோல் மதமும். மதம் என்றால் பகவானால் கொடுக்கப்பட்ட விதிமுறை. அதுதான் மதம். தர்மம் து ஸாக்ஷாத் பகவத் - ப்ரணீதம் ந வை விதுர் தேவாத மனுஷ்யா: (ஸ்ரீ. பா. 6.3.19), அதைப் போல் - நான் சும்மா மறந்துவிட்டேன் - அதாவது "தர்ம, தர்மத்தின் இந்த நெறிமுறை, மதம் சார்ந்த அமைப்பு, அதிகாரம் அல்லது அனுமதி பகவானால் வழங்கப்பட்டது." ஆகையால் பகவான் ஒருவரே; ஆகையினால் தர்ம, அல்லது மதம் சார்ந்த அமைப்பு, ஒன்றாகவே இருக்க வேண்டும். அங்கே இரண்டு இருக்க முடியாது.