TA/Prabhupada 0241 - புலன்கள் பாம்பை போன்றது
Lecture on BG 2.3 -- London, August 4, 1973
வேதங்களில் சொர்க்கம் என்பது த்ரி-தஷ-பூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. த்ரி-தஷ-பூர் என்றால், முப்பத்தி மூன்று கோடி தேவர்கள் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கிரகம் இருக்கிறது. இதற்கு பெயர் தான் த்ரி-தஷ-பூர். த்ரி என்றால் மூன்று , தஷ என்றால் பத்து. ஆக முப்பத்தி மூன்று அல்லது முப்பது. த்ரி-தஷ-பூர் ஆகாஷ-புஷ்பாயதே. ஆகாஷ புஷ்பம் என்றால், வெறும் கற்பனை. ஆகாயத்தில் பூத்த மலர். ஆகாச புஷ்பம் என்றால், கற்பனை செய்து பார்க்கும் ஒன்று.. ஆகாயத்தில் இருக்கும் மலர் மலர் என்பது சோலையில் பூக்கும். ஒருவன் அதை ஆகாயத்தில் மலர்ந்திருப்பதாக கற்பனை செய்தால், அது வெறும் கற்பனை தான். ஆக, ஒரு பக்தன், சொர்கக லோகத்திற்கு உயர்த்தப்படுவதை, ஆகாயத்தில் மலரும் அந்த கற்பனை பூவைப் போல் தான் உணருவான். த்ரி-தஷா-பூர் ஆகாஷ-புஷ்பாயதே. கைவல்யம் நரகாயதே. பிறகு ஞானியும் கர்மியும். மேலும் துரதாந்தேந்திரிய-கால-ஸர்ப-பதாலீ ப்ரோத்காத-தம்ஷ்ட்ராயதே. பிறகு யோகி. யோகி என்றால் 'யோகம் இந்திரிய-ஸம்யம்ய', புலன்களை கட்டுப்படுத்துவது. அது தான் யோக பயிற்சி . நம் புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நாம் வைஷ்ணவர்களை போல் தான். முதலில் நாம் நம் நாக்கை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். ஆக யோகிகளும், மர்ம யோக முறையினால், தனது நாக்கை மட்டுமல்ல, அனைத்து பத்து வகையான புலனுணர்வுகளையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். ஏன் அவர்கள் கட்டுப்படுத்த முயல்கிறார்கள்? ஏனென்றால், புலன்கள் பாம்புகளுக்கு சமமானவை. பாம்பு எந்த இடத்தில் தீண்டினாலும், உடனே வலி ஏற்பட்டு படிப்படியாக மரணத்தில் முடியும். ஒரு சிறிய காயமாக ஆரம்பித்து மரணத்தில் கொண்டு விடும். இதற்கு உதாரணம்: நம் காம உத்வேகம். தகாத பாலின்பம் கொண்டவுடன் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதுவெல்லாம் மிகவும் சுலபமாகிவாட்டது. முன்னர், இது துர்லபமான விஷயமாக இருந்தது, குறிப்பாக இந்தியாவில். எனவே, ஒரு இளம் பெண்ணை எப்பொழுதுமே மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள், ஏனென்றால் அவள் ஆண்களுடன் சேர்ந்து பழகி, எப்படியோ உடலுறவு ஏற்பட்டால், அவள் கர்ப்பிணி ஆகிவிடுவாள். அதற்கு பிறகு அவளை வேறு யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒரு பாம்பு தொட்டது போல் தான் நிலைமை. இந்த... வேத கலாச்சாரம் மிகவும் கண்டிப்பானது. ஏனென்றால், இதன் முக்கிய நோக்கமே மீண்டும் முழுமுதற் கடவுளிடம் அவரது திருவீட்டிற்கு திரும்பிச் செல்வது தான். புலனின்பத்தில் மூழ்கி, நன்கு உண்டு, குடித்து, மகிழ்வது அல்ல. மனித வாழ்வின் நோக்கம் இதுவல்ல. அதை மனதில் வைத்து தான் எல்லாமே அமைக்கப்பட்டது. விஷ்ணுர் ஆராத்யதே. வர்ணாஷ்ரமாசாரவதா புருஷேண பரஹ புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யத் தத்-தோஷ-காரணம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 8.58). வர்ணாஷ்ரமம்; இந்த பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைஷ்யர்கள், அனைவரும் அந்த குறிப்பிட்ட வர்கத்திற்குரிய விதி முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு பிராம்மணன் , பிராம்மணனைப் போல நடக்கவேண்டும். ஒரு க்ஷத்திரியன் அதற்கு தகுந்த... இதுதான்... கிருஷ்ணர் கூறுகிறார், "நீ க்ஷத்திரியன்; நீ ஏன் இப்படி அயோக்கியத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறாய் ? நீ கடமையை செய்தே ஆகவேண்டும்!" நைதத் த்வயி உபபத்யதே (பகவத் கீதை 2.3). "இரண்டு காரணங்களுக்காக நீ இப்படி செய்யக் கூடாது. நீ ஒரு க்ஷத்திரியனாக இதை செய்யக்கூடாது. மற்றும் என்னுடைய நண்பனாக நீ இதை செய்ய கூடாது. இது உன்னுடைய பலவீனம்." இது தான் வேத நாகரிகம். ஒரு க்ஷத்திரியனாக சண்டையிடு. ஒரு பிராம்மணன் சண்டையிடப்போவதில்லை. பிராம்மணன் என்றால் 'சத்யஹ சமோ தமஹ', சத்தியத்தை கடைப்பிடிப்பது எப்படி, சுத்தமாக இருப்பது எப்படி, மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்துவது எப்படி, எளிமையாக வாழ்வது எப்படி, வேதங்களை முழுமையாக கற்று உணர்வது எப்படி, நடைமுறையில் அதை உபயோகிப்பது எப்படி, திட நம்பிக்கையோடு இருப்பது எப்படி என்பதையெல்லாம் பயில்வது தான் அவனுடைய கடமை. இதுதான் பிராம்மணன். அதுபோலவே, க்ஷத்திரியர்களுக்கு - போர் புரிவது. அதுவும் தேவை தான். வைஷ்ய-க்ருஷி-கோ-ரக்ஷ்யா-வாணிஜ்யம் (பகவத் கீதை 18.44). ஆக இவையெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகள்.