TA/Prabhupada 0240 - கோபிகைகள் உருவாக்கிய வழிபாட்டு முறையைவிட வேறு ஏதும் சிறந்ததாக இல்லை



Lecture on BG 2.3 -- London, August 4, 1973

அதர்ஷனம். எல்லோருக்கும் கிருஷ்ணரை பார்க்க விருப்பம் தான், ஆனால் ஒரு தூய்மையான பக்தன் நினைப்பது என்னவென்றால், "உனக்கு என்னை பார்க்க விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை." நீ என் இதயத்தை உடைக்கலாம். உன்னை எப்பொழுதும் பார்க்கவேண்டும் என்று தான் நான் வேண்டுவேன். நீ வராமல் என் இதயத்தை காயப்படுத்தினாலும் சரி, நான் உன்னையே தான் வழிபடுவேன்." இது தூய்மையான பக்தி. இதுவல்ல, "கிருஷ்ணரை என் முன்னே நடனமாடி வர சொல்லியிருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. எனவே இந்த முட்டாள்தனத்தை நான் விட்டுவிடுகிறேன். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அர்த்தமற்றது." அது பக்தி அல்ல. பக்தி என்றால் ராதா ராணியின் மனோபாவம். கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டுச் சென்றார். கோபியர்கள் அனைவரும் வெறும் கிருஷ்ணரை நினைத்து அழுதே தனது நாட்களை கழித்தார்களே ஒழிய கிருஷ்ணரை ஒருபோதும் குறை சொல்லவில்லை. கிருஷ்ணரும் கோபியர்கள் நினைப்பிலேயே இருந்தார், ஏனென்றால் அவர்கள் மிகச்சிறந்த பக்தர்கள். கோபியர்களின் பக்தி ஒப்பில்லாதது. எனவே கிருஷ்ணர் அவர்களுக்கு எப்பொழுதும் அன்பால் கடன்பட்டிருந்தார். கிருஷ்ணர் கோபியர்களிடம் சொல்கிறார் "நீங்கள் என்ன செய்வீர்களோ, அதிலேயே திருப்தியாக இருக்க வேண்டியது தான். உங்களது அன்புக்கு ஈடாக கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை." கிருஷ்ணர், முழுமுதற் கடவுள், அவராலேயே கோபியர்களின் அன்புக்கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எனவே கோபியர்கள்... சைதன்ய மகாபிரபு கூறுகிறார், ரம்யா காசித் உபாஸனா வ்ரஜ-வது-வர்கேண யா கல்பிதா. கோபியர்கள் வெளிபடுத்திய வழிபாட்டைவிட சிறந்தது எதுவும் கிடையாது. எனவே கோபியர்கள் மீஉயர்ந்த பக்தர்கள். கோபியர்களிலேயே சிறந்தவள், ஸ்ரீமதி ராதாராணி ஆவாள். எனவே ஸ்ரீமதி ராதாராணி , கிருஷ்ணரைவிட சிறந்தவள். ஆக இதுதான் கௌடிய-வைஷ்ணவ தத்துவம். அதை உணர நேரம் எடுக்கும். ஆக கிருஷ்ணரின் செயல்களை, இந்த முட்டாள்கள் பார்த்து, வெறும் "அர்ஜுனரை கிருஷ்ணர் சண்டையிட தூண்டுகிறார். அதனால் கிருஷ்ணர் மனிதாபிமானம் கெட்டவர்," என்று எண்ணினால், இது தவறான சிந்தனை. கிருஷ்ணரை நீங்கள் வேறு கண்களால் பார்க்க வேண்டும். எனவே, கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார், ஜன்ம கர்ம ச மே திவ்யம் (பகவத் கீதை 4.9). கிருஷ்ணரின் இந்த திவ்யமான செயல்களை ஒருவன் புரிந்துகொண்டால், ஒருவன் அதை புரிந்துகொண்டாலே போதும், அவன் உடனேயே மோட்சம் அடைவான். மோட்சம் அடைவான். சாதாரணமான மோட்சம் அல்ல, கடவுளிடம், அவரது திருவீட்டிற்கு திரும்பிச் செல்வான். த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (பகவத் கீதை 4.9). இதுவே சிறந்த மோட்சம். மோட்சத்திலும் பல வகைகள் உள்ளன. ஸாயுஜ்ய, ஸாரூப்ய, ஸார்ஷ்டி ஸாலோக்ய...(சைதன்ய சரிதாம்ருதம் 6.266) என ஐந்து வகையான மோட்சங்கள் உள்ளன. ஆக ஸாயுஜ்ய என்றால், இறைவனில் ஐக்கியம் ஆகிவிடுவது, அவரது ப்ரஹ்மன் நிலையில் இணைந்துவிடுவது, ப்ரஹ்ம-லய. அதுவும் மோட்சம் தான். மாயாவாதிகள் அதாவது ஞானிகளின் சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள், இறைவனின் ப்ரஹ்மன் நிலையில் ஐக்கியம் ஆக விரும்புவார்கள். அதுவும் முக்தி தான். அதற்கு ஸாயுஜ்ய-முக்தி எனப் பெயர். ஆனால் ஒரு பக்தனுக்கு இந்த ஸாயுஜ்ய-முக்தி நரகத்திற்கு சமமானது. கைவல்யம் நரகாயதே. ஆக ஒரு வைஷ்ணவனுக்கு, இந்த கைவல்யம் என்பது... ஒரு பொருண்மை வாதம், அதாவது இறைவனில் கலந்து ஐக்கியம் ஆகிவிடும் சிந்தனையே நரகத்திற்கு சமமானது. கைவல்யம் நரகாயதே த்ரி-தஷா-பூர் ஆகாஷ-புஷ்பாயதே (சைதன்ய சரிதாம்ருதம் 5). மற்றும் கர்மிகளுக்கு... ஞானிகள், இறைவனது ப்ரஹ்மன் எனும் ஒளியில் இணைந்து போவதில் மிகவும் ஆவலோடு இருப்பார்கள். மற்றும் கர்மிகள்... மேம்பட்ட லோகங்களை, அதாவது இந்திர தேவர் வாழும் சுவர்க்க-லோகம், பிரம்ம தேவர் வாழும் பிரம்ம லோகம் போன்ற லோகங்களை அடைவதே அவர்களுடைய உச்சக்கட்ட லட்சியம். அது தான் கர்மிகளுடைய லட்சியம், சொர்க்கத்திற்கு செல்வது. வைஷ்ணவ தத்துவத்தை தவிர மற்ற அனைத்து இலக்கியங்களிலும், புனித நூல்களிலும், அதாவது கிறித்துவர்களிலும் , முகமதியர்களிலும், சொர்க்கத்திற்குச் செல்வது மட்டுமே மீஉயர்ந்த லட்சியம் ஆகும்.