TA/Prabhupada 0337 - சொற்ப மகிழ்ச்சி மற்றும் துன்பத்திற்காக கவலை படுவதில் நேரத்தை வீணாக்க தேவையில்லை
Lecture on CC Madhya-lila 20.103 -- Washington, D.C., July 8, 1976
பல விஷயங்களுக்காக நமக்கு போராட வேண்டியிருக்கிறது. இது தான் உயிர்வாழ்வதற்கான போராட்டம். தற்போதைய விஞ்ஞானிகளும்... இது ஒரு அமைதியான சூழ்நிலை அல்ல என்று எண்ணுகிறார்கள். அதே கேள்வியை தான் சனாதன கோஸ்வாமியும் கேட்டார், உயிர் வாழ்வதற்கான போராட்டம் எதற்காக இருக்கவேண்டும்? வாழ்க்கை ஏன் அமைதியாக இருக்கக்கூடாது? எதற்காக சில வெளிப்புற காரணங்கள் நம்மை எதிர்க்கின்றன? நான் சந்தோசமாக இருக்க விரும்புகிறேன், ஆனால் அதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அது தான் உயிர் போராட்டம். அந்த கேள்வி இருக்கவேண்டும்: எதற்காக? ஒரு ஈயுடனும் நாம் போராடவேண்டியிருக்கிறது. நான் பாட்டுக்கு, ஈயை எதுவும் செய்யாமல் இங்கு உட்கார்ந்து இருக்கிறேன், ஆனால் அது என்னை தாக்குகிறது, படுத்துகிறது. இப்படி பலர் உள்ளனர். நீ யாருக்கும் தீங்கு செய்யாமல் உட்கார்ந்திருந்தாலும்... இப்போது நீ சாலையில் சும்மா நடந்திருந்தால் யாருக்கும் எந்த தேடும் ஏற்படுவதில்லை. ஆனால் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து எல்லா நாய்களும் குலைக்கும்: "இங்கு எதற்காக வருகிறாய்? இங்கு எதற்காக வருகிறாய்?" குலைப்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் அது நாய் என்பதால், அதனுடைய வேலை, "ஏன் வந்தாய், ஏன் வந்தாய்?" அதுபோலவே தற்போது நமக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சுதந்திரம் கிடையாது. குடிவரவு துறையினர் இருக்கிறார்கள்: "ஏன் வந்தாய்? ஏன் வந்தாய்?" பல ஊர்களில் எங்களை வருவதிலிருந்து மறுத்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதிலிருந்து மறுத்திருக்கிறார்கள். "நீ நுழைய முடையாது, திரும்பிச் செல்." ஆக நான் திரும்பி செல்ல வேண்டியிருந்தது. எவ்வளவு குறைப்பாடுகள்.
பதம் பதம் யத் விபதம் ந தேஷாம் (ஸ்ரீமத் பாகவதம் 10.14.58)
இந்த ஜட உலகில் மிகவும் நிம்மதியாக வாழ முடியாது. மிகவும் அல்ல, நிம்மதியே கிடையாது. கணக்கற்ற தடைகள் உள்ளன. சாத்திரம் கூறுகிறது, பதம் பதம் யத் விபதம்: ஒவ்வொரு அடியிலும் ஆபத்து இருக்கிறது. கீழ்த்தர ஜந்துக்களிடமிருந்து மட்டும் அல்ல, மனித நேயத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்து. இவையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு இந்த ஜட உலகில் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று எண்ண முடியாது. எதற்காக இவ்வளவு தடைகள் உள்ளன, என்பதை அறிவதில் நாம் முன்னேற வேண்டும். அது தான் மனித வாழ்வின் நோக்கம். அது தான் மனித வாழ்வின் நோக்கம். எவ்வாறு அறிவது? எப்படி மகிழ்ச்சி அடைவது? வாழ்வின் குறிக்கோள் என்ன? சனாதன கோஸ்வாமி... சனாதன கோஸ்வாமி மட்டும் அல்ல, அவர் நம் எல்லோர் சார்பிலும் கேட்கிறார். நமக்கு தெரியாது, நமக்கு தெரியாது. ஆக சைதன்ய மகாபிரபுவின் கருணையால் அல்லது அவரது தொண்டர்களின் கருணையால், ஒருவர் இந்த அறிவொளியை பெறலாம்... அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, எதற்காக உயிர் போராட்டம் இருக்கிறது, எதற்காக மரணம் என்பது இருக்கிறது. எனக்கு மரணம் அடைவதில் விருப்பம் இல்லை; எதற்காக பிறப்பு இருக்கிறது? ஒரு தாயின் கருவில் நுழைந்து பல நாட்கள் அடைப்பட்டிருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு முதுமை அடைவதில் விருப்பம் இல்லை; ஆனால் இவையெல்லாம் என்மேல் வலுக்கட்டாயமாக சுமத்தப்படுகின்றன. ஆகையால் இதற்கெல்லாம் தீர்வு காண்பது தான் நம் அசல் கடமை, பொருளாதார வளர்ச்சி அல்ல. நமக்கு என்ன பொருளாதார வளர்ச்சி விதித்திருக்கிறதோ அது நமக்கு கிடைக்கும். மகிழ்ச்சியோ துன்பமோ, நமக்கு கிடைக்கும். துன்பத்தை நாம் தேடிப்போவதில்லை ஆனால் அது வருகிறது. அது நம்மேல் சுமத்தப்படுகிறது.
அதுபோலவே, நமக்கு விதித்த அந்த சொற்பமான சுகமும் கிடைத்தே தீரும். அது தான் சாத்திரம் அளிக்கும் புத்திமதி. செயற்கையாக சொற்ப சுகத்தை அடைய நேரத்தை வீணாக்க தேவையில்லை. உனக்கு என்ன சந்தோஷங்கள் விதித்திருக்கிறதோ அது தானாகவே வந்து சேரும். எப்படி வரும்? யதா து:கம் அயத்நத:. அதுபோலவே தான். துன்பத்திற்காக எந்த முயற்சியும் செய்யாமலேயே அது நம்மிடம் வருகிறது. அதுபோலவே நாம் மகிழ்ச்சியை நாடி எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தாலும், எது விதித்திருக்கிறதோ அது நம்மை வந்து சேரும். ஆக சொற்ப மகிழ்ச்சி மற்றும் துன்பத்திற்காக கவலை படுவதில் நேரத்தை வீணாக்க தேவையில்லை. அதைவிட சிறந்தது, நம் மதிப்புமிக்க நேரத்தை, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, எதற்காக இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன, எதற்காக உயிர் வாழ்வதற்காக போராட வேண்டியிருக்கிறது, என்பதை புரிந்துகொள்வதில் ஈடுபடுத்த வேண்டும். இது தான் உன் கடமை... உண்மையில் பிரச்சனை என்னவென்று புரிந்துகொள்ள ஊக்கப்படுத்துவது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். இது குறிப்பிட்ட சாதியோ மதத்தையோ சார்ந்த இயக்கம் அல்ல. இது ஒரு கல்வி மற்றும் கலாச்சாரத்தை சார்ந்த இயக்கம். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் குறிக்கோளை புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக இந்த உயிர்ப் போராட்டம் இருக்கிறது, அதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா, எந்த தொந்தரவும் இல்லாத, வெகு நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது செயல்முறை இருக்கிறதா, என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய விஷயங்களை தான் மனித வாழ்வில் அறிய வேண்டும் மற்றும் அதை நாடி ஒருவர்... சனாதன கோஸ்வாமி உயர்ந்த கல்வியும் மதிப்பும் பெற்ற மந்திரியாக இருந்தாலும் அவர் சைதன்ய மகாபிரபுவை நாடிச் சென்றார். ஆக நாம் பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அல்லது அவருடைய பிரதிநிதியை நாடிச்சென்று சரணடைய வேண்டும்.
தத் வித்தி: ப்ரணிபாதேன (பகவத்-கீதை 4.34)
சவால் விடுவது முறை அல்ல, "உன்னால் எனக்கு கடவுளை காண்பிக்க முடியுமா?" இவை எல்லாம் சவால்கள். இப்படி அல்ல. எங்கும் இருப்பவர் கடவுள், ஆனால் முதலில் உன் கண்களை கடவுளை காண்பதற்கு பொருத்தமானதாக ஆக்கவேண்டும். அதன்பிறகு நீ சவால் விடலாம், "உன்னால் எனக்கு கடவுளை காண்பிக்க முடியுமா?" இந்த மனப்பான்மை நமக்கு உதவாது. தாழ்மையுடன். தத் வித்தி: ப்ரணிபாதேன. இதுதான் சாத்திரத்தின் உத்தரவு. நீ இந்த விஞ்ஞானத்தை, ஆன்மீக விஞ்ஞானத்தை, புரிந்து கொள்ள விரும்பினாள், தத் வித்தி - புரிந்துகொள்ள முயற்சி செய் - ஆனால் ப்ரணிபாதேன, வெகு தாழ்மையுடன். சனாதன கோஸ்வாமி தாழ்மையுடன் அணுகும்போலவே தான்.