TA/Prabhupada 0338 - இந்த ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு, எல்லாம் மூடர்கள், அயோக்கியர்கள்



Lecture on BG 1.31 -- London, July 24, 1973

சதுர்-விதா பஜந்தே மாம் ஸீக்ருதின. ஸீக்ருதின என்றால் நல்லோர் (அறநெறிகளைப் பின்பற்றுவோர்). க்ருதி என்றால் பௌதீக செயல்களில் வல்லுநராக இருப்பவர்கள். சமயதருமச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள், ஸீக்ருதி என்றழைக்கப்படுகின்றனர். இரண்டு வகையான செயல்கள் இருக்கின்றன: சமயத்திற்கு எதிரான செயல்கள், அதாவது பாவச் செயல்கள்; மற்றும் சமயதருமச் செயல்கள். ஆக சர்ச்சுக்கு அல்லது கோயிலுக்கு சென்று, "கடவுளே, எங்கள் தினசரி ரொட்டி வழங்கு," அல்லது "கடவுளே, எனக்கு செல்வத்தை வழங்கு," அல்லது "கடவுளே, என் துன்பங்களை அகற்று," என வேண்டுபவர்களும் நல்லோர் தான். அவர்கள் சமயதருமத்திற்கு எதிரானோர் அல்ல. சமயதருமத்திற்கு எதிரானோர் ஒருபோதும் கடவுளிடம், கிருஷ்ணரிடம் சரணடைய மாட்டார்கள்.


ந மாம் துஷ்க்ருதினோ மூடா ப்ரபத் யந்தே நராத மா ((பகவத்-கீதை 7.15)


இந்த வகுப்பில் உள்ள மனிதர்கள், பாவ செயல்களில் ஈடுபடுபவர், அயோக்கியர்கள், மனித நேயத்தில் கீழ்மட்ட நிலையில் உள்ளவர்கள், அதாவது மாயையிடம் தன் அறிவை இழந்தவர்கள், மற்றும் அரக்கர்கள் - இத்தகைய வகுப்புகளில் இருக்கும் மனிதர்கள் ஒருபோதும் கடவுளிடம் சரணடைய மாட்டார்கள். ஆகையால் அவர்கள் துஷ்க்ருதின, சமயதருமத்திற்கு எதிரானோர். ஆக கிருஷ்ணர்‌, சமயதருமத்திற்கு பணிந்திருந்தாலும், அவருக்கு குடும்ப நலத்திற்கான ஆசை இருந்தது. இது தான் அவர் குறைப்பாடு. இல்லை, அர்ஜுனர். குடும்ப நலம். அவர் சமுதாயம், நட்பு மற்றும் நேசத்துடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். ஆகையால் அவர் கூறுகிறார், ந காங்க்ஷே விஜயம். இதைதான் 'வைராக்ய' என்பார்கள். ஸ்மசான-வைராக்ய. இதற்கு ஸ்மசான-வைராக்ய எனப்பெயர். ஸ்மசான-வைராக்ய என்றால், இந்தியாவில், இந்துக்கள் பிணத்தை எரிப்பார்கள். குடும்பத்தினர் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். பிணம் எரிந்த பிறகு, அங்கிருக்கும் எல்லோரும் தற்போதைக்கு துறந்தவரைப் போல் மாறிவிடுவார்கள்: "ஓ, இது வெறும் உடல் தான். நாம் வெறும் இந்த உடலுக்காக உழைக்கிறோம். இப்போது இது நிர்மூலம் ஆகிவிட்டது. எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதில் என்ன பலன்?" இத்தகைய 'வைராக்ய', துறத்லல், இருக்கிறது. ஆனால் சுடுகாட்டிலிருந்து திரும்பிய உடனேயே அவன் தன் செயல்களை தொடங்குகிறான். ஸ்மசானத்தில், சுடுகாட்டில் அவன் ஒரு பற்றற்றவனாக ஆகிறான். சிறுது வீட்டிற்கு திரும்பிய உடனேயே மறுபடியும் விறுவிறுப்பாக இருக்கிறான், எப்படி சம்பாதிப்பது, எப்படி பணத்தை சேர்ப்பது, எங்கே பணம், எங்கே பணம். இத்தகைய 'வைராக்ய', ஸ்மசான-வைராக்ய எனப்படுகிறது, தற்காலிகமானது. அவனால் வைராகி ஆக முடியாது. பிறகு அவர் கூறினார்,


ந காங்க்ஷே விஜயம் (பகவத்-கீதை 1.31)


"எனக்கு வெற்றி வேண்டாம். எனக்கு இது வேண்டாம்." இது தற்காலிகமான ஒரு உணர்வு. தற்காலிகமான உணர்வு. இவர்கள் குடும்ப வாழ்க்கையின் மேல் பற்றுடையவர்கள். அவர்கள் அப்படிக் கூறுவார்கள், "எனக்கு இந்த சுகங்கள் எல்லாம் வேண்டாம், இந்த சிறந்த நிலைமை, வெற்றி வேண்டாம். எனக்குத் தேவையில்லை." ஆனால் அவனுக்கு எல்லாதிலேயும் ஆசை இருக்கும். அவனுக்கு எல்லாம் வேண்டியிருக்கும். ஏனென்றால் அவனுக்கு 'ஷ்ரேயஸ்' என்னவென்று தெரியாது. கிருஷ்ணரே 'ஷ்ரேயஸ்' ஆவார். வாஸ்தவத்தில், ஒருவனுக்கு கிருஷ்ணர், அதாவது கிருஷ்ண உணர்வு கிடைத்தால், அப்பொழுதே, "எனக்கு எதன்மேலும் பற்று இல்லை." என அவன் கூறலாம். ஆனால் அவன் அப்படிச் சொல்ல மாட்டான். "எனக்கு எதுவும் வேண்டாம்" என்று எதற்காக சொல்லவேண்டும் ? இங்கு நமக்கு எது சொந்தமானது? நான் ஒரு இராச்சியத்திற்கு அதிபதியாக வைத்துக்கொள்வோம். அந்த இராச்சியம் எனக்கு சொந்தமாகிவிடுமா? அது கிருஷ்ணரின் இராச்சியம். ஏனென்றால் கிருஷ்ணர் கூறுகிறார் போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஸ்வரம் (பகவத்-கீதை 5.29)

அவர்தான் சொந்தக்காரர். நான் அவர் பிரதிநிதியாக இருக்கலாம். எல்லோரும் கிருஷ்ண உணர்வுடையவராக இருக்கவேண்டும் என்பதை கிருஷ்ணரின் விருப்பம். கிருஷ்ணரின் ஒரு பிரதிநிதியாக, ஒவ்வொரு குடிமகனையும், கிருஷ்ண உணர்வை அடைய வைப்பதே, ஒரு அரசனின் கடமையாகும். அப்பொழுதுதான் அவன் தன் கடமையை சிறப்பாக செய்வதாக அர்த்தமாகும். அரசர்கள் அவ்வாறு செய்ய தவறியதால், இன்று அரசு முறை எல்லாவற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆக மறுபடியும் எங்கு அரசு முறை இருக்கிறதோ, குறைந்தது வெளிப்பார்வைக்கு அரசு முறை இருக்கிறதோ, இங்கே இந்த இங்கிலாந்தைப் போல் தான், இந்த அரசர் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வுடையவர் ஆகினால், உண்மயிலேயே கிருஷ்ணரின் பிரதிநிதி ஆகினால், பிறகு இந்த அரசாங்கத்தின் நிலை முற்றிலும் மாறிவிடும். அது தான் தேவை. நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் அது தான். எங்களுக்கு பெயரளவில் இருக்கும் இந்த ஜனநாயக முறையில் அவ்வளவு விருப்பம் இல்லை. இந்த ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு ? எல்லாம் மூடர்கள், அயோக்கியர்கள். இவர்கள் மற்றொரு மூடனுக்கும் அயோக்கியனுக்கும் வாக்களிக்கிறார்கள். பிறகு அவன் பிரதமரோ இதுவோ அதுவோ ஆகிவிடுகிறான். இப்படி... பல சம்பவங்களில். அது மக்களுக்கு நல்லது அல்ல. அவர்கள் பயிற்சி பெறாதவர்கள். அதனால் எங்களுக்கு, பெயரளவில் இருக்கும் இந்த ஜனநாயகத்தில் சம்மதம் இல்லை. அரசன் பயிற்சி பெற்றவனாக இருந்தால்... அது தான் அரச முறையின் அமைப்பாக இருந்தது. யுதிஷ்டிர மகாராஜா ஆகட்டும் அல்லது அர்ஜுனர் அல்லது எந்த அரசரும் சரி. எல்லா அரசர்களும். ராஜரிஷி. அவர்கள் ராஜரிஷி என அழைக்கப்படுவார்கள்.


இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்) (பகவத்-கீதை 4.1)


ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது (பகவத்-கீதை 4.2)


ராஜர்ஷய:. ராஜா, அரசன் என்றால் அவன் அரசன் மட்டும் அல்ல. அவன் பெரிய ரிஷி, அருட்தொண்டனாகவும் இருக்கவேண்டும், யுதிஷ்டிர மகாராஜா அல்லது அர்ஜீனரைப் போல் தான். அவர்கள் துறவிகளைப் போன்றவர்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, இந்த குடியில் மயங்கிய அரசனைப் போல, அதாவது "என்னிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது. நான் மதுவை பருகி, விபச்சாரிகளை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பேன்." அப்படி கிடையாது. அவர்கள் ரிஷியாக இருந்தார்கள். அரசராக இருந்தாலும், ரிஷியைப் போல் இருந்தார்கள். அப்படிப்பட்ட அரசன் தான் தேவை, ராஜரிஷி. பிறகு தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெங்காலி மொழியில் பழமொழி ஒன்று இருக்கிறது, ராஜார பாபே ராஜா நஷ்ட க்ருஹிணி தோஷே க்ருஹஸ்த ப்ரஷ்ட. க்ரிஹஸ்த (இல்லற) வாழ்க்கையில், மனைவி சரியாக இல்லாவிட்டால், அந்த இல்லத்தில், இல்லற வாழ்க்கையில், யாரும் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அதுபோலவே, ஒரு அரசாங்கத்தில், அரசன் என்பவன், தருமத்தை கடைப்பிடிக்காமல் இருந்தால், பிறகு எல்லோரும் துன்பப்படுவார்கள். இது தான் பிரச்சினை.