TA/Prabhupada 0348 - ஐம்பது வருடங்களுக்கு ஹரே கிருஷ்ண என ஜெபம் செய்தால், உன்னத நிலையை அடைவது நிச்சயம்
Lecture on BG 7.14 -- Hamburg, September 8, 1969
சிறுவன்: இதே ஜென்மத்தில் இலக்கை அடைவது சாத்தியமா? ஒருவன் வீழ்ச்சி அடைவதற்கு சம்பவம் இருக்கிறதா?
பிரபுபாதர்: நீ தீவிரமாக இருந்தால் இது ஒரே நிமிடத்தில் சாத்தியம் ஆகலாம். இது அவ்வளவு கஷ்டமானது அல்ல. கிருஷ்ண-பக்தி...
பஹூனாம் ஜன்மனாம் அந்தே க்ஞானவான் மாம் ப்ரபத்யதே (பகவத்-கீதை 7.19)
"பற்பல பிறவிகளுக்குப் பின் ஞானத்தில் முழுமை பெற்றவன், உண்மையான அறிவுடையவன், என்னிடம் சரணடைகிறான்," என கிருஷ்ணர் கூறுகிறார். நான் புத்திசாலியாக இருந்தால், "பற்பல ஜென்மங்களுக்கு பிறகு கிருஷ்ணரிடம் சரணடைவதுதான் வாழ்வின் இலக்கு என்றால், நானே உடனடியாக சரணடையலாமே." என நான் சிந்திப்பேன். அது தான் புத்திசாலித்தனம். இந்தத் தீர்மானத்திற்கு வருவதை தவிர வேறு வழி இல்லை என்றால், அதுவும் பற்பல ஜென்மங்களுக்கு ஞானத்தை அடைந்த பிறகு தான் என்றால், எதற்காக அதை (அந்த தீர்மானத்தை) உடனடியாக ஏற்க்க கூடாது? இது உண்மை என்றால், நான் எதற்காக பற்பல ஜென்மங்களுக்கு காத்திருக்க வேண்டும்? அதற்கு கொஞ்சம் அறிவு தேவை. இதற்கு பற்பல ஜென்மங்கள் தேவை இல்லை. இதற்கு கொஞ்சம் அறிவு இருந்தால் போதும். இந்த கிருஷ்ண பக்தியை தீவிரமாக ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்கள் பிரச்சாரங்கள் தானாகவே தீர்ந்து விடும். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், விவாதம் செய்ய வாருங்கள், த்துவம் பேச வாருங்கள், தர்க்கம் செய்ய வாருங்கள். தொடர்ந்து விவாதம் செய்யுங்கள். நிறைய புத்தகங்கள் உள்ளன. உறுதியாக இருங்கள். உங்களால் கற்க முடியும். பகவத்-கீதையில் எல்லா விடைகளும் உள்ளன. அவைகளை நீங்கள் தர்க்க அறிவால், விவாதங்களால் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
(இடைவேளை) அர்ஜீனனைப்போல் தான். அர்ஜுனனுக்கு பகவத்-கீதை கற்கப் பட்டிருந்தது. எவ்வளவு நேரம் இருக்கும்? அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள்ளே தான் இருக்கும். ஏனென்றால் அவர் (அர்ஜுனர்) மிகவும் புத்திசாலி. இவ்வுலகின் மக்கள் பகவத்-கீதையை படித்து வருகிறார்கள். பெரிய அறிஞர்கள், அறிவுஜீவிகள் எல்லாம் படிக்கிறார்கள். இதை புரிந்து, வெவ்வேறு விதமாக விளக்கங்களை கூற முயற்சி செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான பதிப்புகள், விளக்கங்கள் உள்ளன. ஆனால் அர்ஜுனரோ புத்திசாலி; அவர் அரை மணி நேரத்தில் அனைத்தையும் புரிந்துகொண்டார். அதற்கு ஒப்பு நோக்கத்தக்க அறிவுத்திறம் தேவை. இந்த உலகில் எல்லாம் ஒப்பு நோக்கத்தக்கது. சார்பியல் கோட்பாடு. அது அறிவியற் பூர்வமானது. பேராசிரியர் ஐன்ஸ்டீனின் கோட்பாடு? சார்பியல் கோட்பாடு? ஆக இது ஒப்பு நோக்கத்தக்கது. ஒருவரால் ஒரே வினாடியில் கிருஷ்ண உணர்வை அடையமுடியும், மற்றும் வேறொருவருக்கு பற்பல ஜென்மங்கள் எடுத்தும் கிருஷ்ண உணர்வை அடைய முடிவதில்லை. ஆக இது ஒப்பு நோக்கத்தக்கது. உன்னிடம் போதுமான அளவில் அறிவுத்திறன் இருந்தால், நீ உடனேயே அதை உள்ளீர்த்துக்கொள்ளலாம். அறிவுத்திறன் குறைவாக இருந்தால் கூடுதலாக அவகாசம் தேவை. "பொதுவாக இவ்வளவு ஆண்டுகள் ஆனால் அதை அடையலாம்." என்று கூறமுடியாது. அப்படி சொல்லமுடியாது. ஒவ்வொருவரின் திறனைப் பொறுத்து. எல்லாம் ஒப்பு நோக்கத்தக்கது. ஒரு மனிதனுக்கு இங்கிருந்து அதுவரை ஒரு அடியாக இருக்கலாம். ஆனால் ஒரு கிருமிக்கு, அதே தூரம், பத்து மைல்களுக்கு சமம் ஆனது. ஆக எல்லாம் ஒப்பு நோக்கத்தக்கது. இந்த உலகத்தில் எல்லாமும் அப்படி தான். "ஒருவர் கிருஷ்ண உணர்வை குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு அடையலாம்." என்று எந்த விதிமுறையும் கிடையாது. அப்படி கிடையாது. அப்படி எந்த விதிமுறையும் கிடையாது. ஒருவர் பல கோடிக்கணக்கான பிறவிகளுக்கு பிறகும் கிருஷ்ண உணர்வை அடையாமல் இருக்கலாம், அதேசமயம் வேறொருவருக்கு ஒரே வினாடியில் கிருஷ்ண உணர்வை அடைய இயலும். ஆனால் மறுபுறம், நாம் தீவிரமாக இருந்தால் இதே வாழ்க்கையில் கிருஷ்ண உணர்வில் பக்குவத்தை அடையமுடியும். குறிப்பாக நீங்கள் இளைஞர்கள். குறைந்தது இன்னும் ஐம்பது வருடங்களுக்கு வாழ்வீர்கள் என்று எதிர்பார்க்கலாம். ஓ, அந்த அவகாசம் போதுமே. எதேஷ்டம். எதேஷ்டம். ஐம்பது வருடங்களுக்கு ஒருவன் வெறும் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண என ஜெபம் செய்தால், அவன் உன்னத நிலையை அடைவது நிச்சயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவன் வெறும் இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்தால் போதும், ஓ, அதில் எந்த சந்தேகமும் இல்லை.