TA/Prabhupada 0377 - பஜஹு ரே மன பாடலின் பொருள்

Revision as of 19:32, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Bhajahu Re Mana -- Los Angeles, May 27, 1972

இந்த பாடல் கோவிந்த தாசரால் பாடப்பட்டது. கோவிந்த-தாச-அபிலாஷ ரே. அவர் விருப்பம் என்ன? அபிலாஷ என்றால் விருப்பம். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன: "என் அன்புக்குரிய மனமே..." ஏனென்றால் மனம் என்பது நமக்கு நண்பனாகவும் இருக்கலாம் அதே சமயம் எதிரியாகவும் இருக்கலாம். நீ மனதை பழக்கப்படுத்தினால், மனம் உனக்கு சிறந்த நண்பனாக இருக்கும். ஆனால் மனதிற்கு பயிற்சி அளிக்காமல் விட்டால், பிறகு அதுவே உன் கடுமையான எதிரியாக இருக்கும்.


ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ (ஸ்ரீமத் பாகவதம் 9.4.18)


ஆகையால் மனதை எப்பொழுதும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்த வேண்டும். பிறகு மனம் தானாகவே கட்டுக்கடங்கி நமக்கு நண்பனாக ஆகிவிடும். ஆக கோவிந்த தாசர் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார்: "என் அன்பு மனமே, நீ வெறும் நந்த-நந்தனரின் பக்தித் தொண்டில் ஈடுபடு." அவர் கிருஷ்ண என்று அழைக்கவில்லை. அவர் நந்த-நந்தன எனக் கூறுகிறார். பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. நாம் கிருஷ்ணரை நேரடியாக அழைத்தால் அது அவ்வளவு மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆனால் நாம் கிருஷ்ணரை: நந்த-நந்தன, யஷோதா-நந்தன, தேவகீ-நந்தன, பார்த-ஸாரதி - என அவர் தனது பக்தருடன் கொண்ட உறவால் அழைத்தால் - அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஆக பஜஹு ரே மன ஸ்ரீ-நந்த-நந்தன. எதற்காக ஸ்ரீ-நந்த-நந்தன? அடுத்து, அபய-சரணாரவிந்த ரே. நீ கிருஷ்ணரின், நந்த-நந்தனரின் தாமரை பாதங்களில் அடைக்கலம் புகுந்தால், அதன் பிறகு உனக்கு எந்த கவலையும், பயமும் இருக்காது.

ஸமாஷ்ரீதா யே பத-பல்லவ-ப்ளவம் மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே: பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம் பதம் யத் விபதம் ந தேஷாம் (ஸ்ரீமத் பாகவதம் 10.14.58)


இதுதான் பகவத்-தரிசனம் பதம் பதம் யத் விபதம். இந்த ஜடவுலகில், பதம் பதம் அதாவது ஒவ்வொரு அடியிலும் ஆபத்து இருக்கிறது ஆக யாரொருவன் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் பாதுகாப்பை நாடி இருக்கிறானோ, மஹத் பதம் புண்ய-யஷோ முராரே: ஸமாஷ்ரிதா. அதன் பிறகு அவனுக்கு எந்த ஆபத்தும் இருப்பதில்லை. அபய-சரணாரவிந்த ரே. எப்படி கிருஷ்ணரின் பாதுகாப்பபை முழுமையாக நாடி இருப்பது? அது எந்த கவலையும் பயமும் இல்லாதது, வைகுண்ட. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. நீ பக்தர்களுடன் தொடர்பு கொண்டால் அது சாத்தியம். நீ இப்படி நினைத்தால், "நான் இப்போது பெரிய பக்தன் ஆகிவிட்டேன். இனிமேல் நான் தனியாக வாழ்ந்து, ஹரிதாச தாக்குரைப் போல் ஹரே கிருஷ்ண ஜெபிப்பேன்," என்றால் அது அபத்தமானது. ஹரிதாச தாக்குரைப் போல் நடிக்க முடியாது. பக்தர்களின் சகவாசத்தில் இருந்தாக வேண்டும்.


துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. ஸத்-ஸங்கே. ஸதாம் பாரஸங்காம் மம வீர்ய-ஸம்விதோ (ஸ்ரீமத் பாகவதம் 3.25.25)


பக்தர்களின் சகவாசத்தில் இருந்தால், அவர்கள் உறவால், அவர்களுடன் பேசுவதால், கடவுள் உணர்வின் உண்மையான புரிதலை அடையலாம். இதை நடைமுறையில் எளிதாக புரிந்துகொள்ளலாம். பௌதீக உலகில் பல சங்கங்கள், இயக்கங்கள் இருக்கின்றன. வணிகர்களுக்கு பங்குச் சந்தை என்கிற சங்கம் இருக்கிறது, பொதுநிதியைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக. அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. அவர்கள் அங்கு சென்றால் அந்த தொழிலை செய்வதற்காற உகந்த சூழ்நிலை கிடைக்கும். அதுபோலவே பல க்ளப்புகள் உள்ளன. மது அருந்தி புலனுகர்ச்சி செய்ய ஆசை இருந்தால், பல க்ளப்புகள் உள்ளன. அங்கு சென்று அவர்களுடன் உறவாடினால், மது அருந்துவது எப்படி, உடலுறவு கொள்வது எப்படி, எல்லாம் சிறப்பாக கற்கலாம். ஆக சங்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஆகையால் நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலமாக, நாம் மக்களுக்கு நம்முடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கின்றோம், அதனால் அவனால், கிருஷ்ண என்றால் என்ன, உணர்வு என்றால் என்ன, என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் கோவிந்த தாசர் பரிந்துரைக்கிறார், துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே. மானவ. இந்த மனிதப் பிறவி என்பது துர்லப, அதாவது அரிதானது. நாய்களின் சகவாசமோ காகங்களின் சகவாசமோ கூடாது, ஆனால் அன்னப்பறவைகளின் சகவாசம் தேவை. வெவ்வெறு சுபாவங்களுக்கு ஏத்தது போல் வெவ்வேறு சங்கங்கள் இருக்கின்றன. "இனம் இனத்தைச் சேரும்." காகங்கள் காகங்களோடு தான் உறவாடும் மற்றும் அன்னப்பறவைகள் அன்னப்பறவைகளோடு தான் செரும். வெண் நிறம் கொண்ட அன்னப்பறவைகள், சுத்தமான தண்ணீர், நல்ல தோட்டம், இதையெல்லாம் விரும்பும். ஆனால் காகங்கள் அப்படி கிடையாது. குப்பை குமிந்து கடக்கும் இடங்கள் என்றால் காகங்களுக்கு ரொம்ப விருப்பம். அவைகள் இன்பம் காணும் இடம் அது தான். அதுபோலவே, சுபாவத்தின் தரத்தை ஏத்த மாதிரி, மனித சமுதாயத்தில் வெவ்வேறு வகையான சங்கங்கள் உள்ளன. ஆனால் பரிந்துரைக்கப்பட்டது என்னவென்றால் துர்லப மானவ ஸத்-ஸங்கே: காகங்களோடு அல்ல அன்னப்பறவைகளோடு. அன்னப்பறவைக்கு பாலும் தண்ணீரும் கொடுத்தால், அது பால் பாகத்தை மட்டும் ஏற்று தண்ணீரை விட்டுவிடும். அதுபோலவே ஒரு அன்னப்பறவை, ஒரு ஹம்ஸ, பரமஹம்ஸ, அதாவது இந்த மனிதப் பிறவியில், யாரொருவன் வாழ்க்கையில் ஆன்மீகம் என்ற பாகத்தை மட்டும் ஏற்று, பௌதீகம் என்ற பாகத்தை கைவிடுகிறானோ, அவனுக்கு தான் ஹம்ஸ, பரமஹம்ஸ எனப் பெயர். நாம் எல்லாம் ஒரு கலவை. நமது உடல் பௌதீகத்தைச் சார்ந்தது, ஆனால் நாம் உண்மையில் ஒரு ஆன்மா. ஆக இந்த பௌதீக ஆசாபாசங்களிலிருந்து வெளியேறும் நுட்பங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது இந்த ஜட உடலிலிருந்து வெளியேறும், ஆனால் அது வெளியேறும் பொழுது இந்த ஜடவுடலை நிர்மூலம் ஆக்கிவிடும். மிகச் சிறந்த உதாரணம் ஒன்று இருக்கிறது. இந்த நெருப்பு, விறகில் நெருப்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை காய வைத்து, நெருப்பு மூட்டினால், வெகு வேகமாக பற்றி எறியும். மேலும் கொழுந்து விட்டு எறியும் பொழுது, விறகு நிர்மூலம் ஆகிவிடுகிறது. விறகு இல்லாமல் போகிறது. அதுபோலவே, நாம் நமது ஆன்மீக உணர்வில், கிருஷ்ண உணர்வில் முழுமையாகச் செயலாற்றினால், அந்த நிலையின் உச்சியில் இருக்கும்போது, நம் பௌதீக வாழ்வு நிர்மூலம் ஆகிவிடும். இது தான் செய்முறை. துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே தாரஹ எ பவ-ஸிந்து ரே. இவ்வாறு, அறியாமை கடலை கடந்து எதிர்கறைக்கு செல். அதற்கு ஒருவன் இப்படி கூறலாம், "நான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் சகவாசம் செய்தால், என் குடும்ப விவகாரம் எல்லாம் எப்படி நடக்கும்? என் மனைவி, பிள்ளைகள், சமூகம், நட்பு, நேசம் இவையெல்லாம் யார் கவனிப்பது ? எனக்கு எவ்வளவு ஈடுபாடுகள் இருக்கின்றன." அதற்கு தான் அவர் கூறுகிறார், ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே. "என் அன்பு மனமே, நீ இவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாயே." ஷீத ஆதப. "கடுமையான குளிரிலும் நீ வேலைக்கு செல்கிறாய். கடும் வெப்பத்திலும் நீ வேலைக்கு செல்கிறாய். கொட்டும் மழையிலும் உன்னால் உழைக்காமல் இருக்கமுடியவில்லை. ஷீத ஆதப பாத பரிசன. "இரவுப் பணி, இரவு முழுவதும் உழைக்க வேண்டியது." மக்கள் அப்படி செய்துவருகிறார்கள்.


ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே


நாள் முழுவதும் உழைப்பு, மறுபடியும் கொஞ்சம் அதிகமாக பணம் சம்பாதிப்பதற்காக, நீ கூடுதலாக இரவிலும் வேலை செய். இப்படி நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்காக இவ்வளவு உழைக்கிறாய்? எதற்காக உழைக்கிறாய்? ஷீத ஆதப பாத பரிசன எ தின ஜாமினி ஜாகி ரே, பிபஃலே ஸேவினு க்ருபண துரஜன சபல ஸுக-லப லாகீ ரே. "இப்படி நான் என் நேரத்தை வீணாக்கிவிட்டேன்," பிபஃலே ஸேவினு, "க்ருபண துரஜன போன்றவர்களுக்கு, சமூகம், நட்பு மற்றும் நேசம் என்றழைக்கப்படுவோர்களுக்கு தொண்டு செய்வதற்காக. க்ருபண, இவர்கள் ஒருபோதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபடமாட்டார்கள், ஆனால் நான் இவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கிறேன்." இது பொதுவாக இப்படி தான், ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் 99.9 சதவீதம் இப்படி தான். ஆக பிபஃலே ஸேவினு, "இப்படி நான் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன். மேலும் அதில் என்ன இன்பம் கிடைக்கிறது?" சபல ஸுக-லப லாகீ ரே. " சில நிமிடங்களுக்கு நீடிக்கும் உடல் இன்பம், அவ்வளவு தான்." அந்த உடலுறவுக்காக பின்னணியில் எத்தனை உழைப்பு.


ஆகையால் கோவிந்த தாசர் கூறுகிறார், "நீ செல்வத்தை அனுபவிக்க ஆசைப் படுகிறாய்," எய்-தன, யவ்வன, புத்ர, பரிஜன. பௌதீக சுகம் என்றால் பணம் சம்பாதிப்பது, தன; மற்றும் ஜன, பல பின்பற்றுபவர்கள் அல்லது சார்ந்தோர்கள் - மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், சமுதாயம், எத்தனை விஷயங்கள், நாடு எல்லாம். ஆக புத்ர, பரிஜன, இதே கி ஆசே பரதீதி ரே. "இதில் உன்னால் எந்த விதமான தைவீக சுகத்தையும் காணமுடியாது." கமல-தல-ஜல, ஜீவன தலமல. வாழ்க்கை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை எப்போது முடிந்து போகும் என்பதை நம்மால் சொல்லமுடியாது. இந்த உதாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது, கமல-தல-ஜல. ஒரு தாமரை இலையைப் போல் தான். அந்த இலையின் மேல் தண்ணீரை ஊற்றினால், அது ஓரிடத்தில் தங்காது; சிரித்துக் கொண்டே இருக்கும். எந்த வினாடியிலும் அது சறுக்கி விழலாம். அதுபோலவே தான் நம் வாழ்க்கையும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எந்த வினாடியிலும் - முடிந்துவிடும். கமல-தல-ஜல, ஜீவன... பஜஹு ஹரி-பத நீதி ரே. ஆக தம்மை கிருஷ்ண பக்தியில் முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள். மரணம் நெருங்குவதற்கு முன்பே செய்யவேண்டியதை முடித்துவிடு. அது தான் உன் இலட்சியம். மேலும் கிருஷ்ண உணர்வு என்றால் என்ன? ஷ்ரவண, கீர்த்த