TA/Prabhupada 0756 - நவீன கல்வியில் உண்மையான ஞானம் இல்லை
Lecture on SB 6.1.10 -- Honolulu, May 11, 1976
எனவே, ஆம், குரு, சுகதேவ கோஸ்வாமி, பரிக்ஷித் மகாராஜாவைப் பரிசோதித்துள்ளார், மேலும், பிராயச்சித்தத்தை நிராகரிப்பதன் மூலம், மன்னர் ஒரு கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிகிறது. இது தான் புத்திசாலிதனம். உடனே, "குருவே , இது என்ன?" அவர் நிராகரித்துள்ளார். பரிகாரம் செய்யும் செயல்முறையை நிராகரிப்பது, ஏனெனில் இது விளைவு சார்ந்த செயல்களை உள்ளடக்கியது, கர்மா எனப்படும். கர்மா, நான் சில பாவச் செயல்களைச் செய்திருக்கிறேன், மற்றொன்று, என்னைத் தண்டிக்க மற்றொரு கர்மா. எனவே இங்கே இது கூறப்படுகிறது ... ஒரு கர்மாவை மற்றொரு கர்மாவால் அழிக்க முடியாது. கர்மா என்றால் செயல்பாடு. அவை நடந்து கொண்டிருக்கின்றன, தீர்மானத்திற்குப் பிறகு தீர்மானத்தையும் சட்டங்களுக்குப் பிறகு சட்டங்களையும் நிறைவேற்றுகின்றனர், ஆனால் விஷயங்கள் ஒரே நிலையில் உள்ளன. அவை மாறவில்லை. எனவே அதை அவ்வாறு சரிபார்க்க முடியாது. கர்மனா கர்ம-நிர்ஹார (ஸ்ரீ பா 6.1.11). இப்போது சுகதேவ கோஸ்வாமி ஊக அறிவின் தளத்தை பரிந்துரைக்கிறார். ஒரு திருடன், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களைச் செய்கிறான், மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுகிறான், ஆனால் அவன் சீர்திருத்த படவில்லை, அது என்ன தீர்வு? அது விமர்ஷனம், ஊக அறிவு. கர்மா-காண்டாவிலிருந்து ஞான-காண்டா வரை முன்னேறி, அவர் பிராயச்சித்தம் விம்ர்ஷனத்தை (ஸ்ரீ பா 6.1.11) முன்மொழிகிறார்: உண்மையான பிராயச்சித்தம் முழு அறிவு. ஒருவருக்கு ஞானம் கொடுக்கப்பட வேண்டும்.
ஒருவர் ஞானத்துக்கு வராவிட்டால் ... எனவே நவீன கல்வியில் உண்மையான ஞானம் இல்லை. உண்மையான ஞானம் பகவத்-கீதையில் தொடங்குகிறது. பகவத்-கீதையைப் படித்தவர்களுக்கு, முதல் புரிதல், அர்ஜுனனுக்கு பாடம் வழங்கப்பட்டது. அவர் குழப்பமடைந்து, கிருஷ்ணரின் சீடரானபோது, ஷிஷ்யஸ் தே 'ஹம் ஷாதி மாம் ப்ரபன்னம் (ப கீ 2 7): "கிருஷ்ணா, இந்த நட்பான பேச்சை நிறுத்துவோம். இந்த நட்பான பேச்சை நிறுத்துவோம். இப்போது நான் உங்கள் சீடராவதற்கு ஒப்புக்கொள்கிறேன். இப்போது நீங்கள் எனக்கு கற்பியுங்கள்." எனவே முதல் போதனை திருத்தும் நோக்கத்தோடு தண்டனை. அஷோச்யான் அந்வஷோசஸ் த்வம் பிரஜ்ஜநா வாதாம்ஸ் ச பாஷசே (ப கீ 2.11): " உனக்கு எந்த அறிவும் இல்லை." காதாஸுன் அகதாஸூம்ஸ் ச நானுஷோச்சந்தி பண்டிதாஹ்: "நீ ஒரு பண்டிதனைப் போல பேசுகிறாய், ஆனால் நீ பண்டிதன் அல்ல." அவர் மறைமுகமாக, "நீ ஒரு முட்டாள்" என்று சொன்னார், ஏனென்றால் நானுசோசந்தி, "இந்த வகையான சிந்தனையை கற்ற அறிஞர்கள் கொண்டிருப்பதில்லை." அதாவது "நீங்கள் ஒரு கற்றவர் அல்ல." அது தற்போதைய தருணத்தில் நடக்கிறது. எல்லோரும் அவர் மிகவும் உயர்ந்தவர், கற்றவர் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர் ஒரு முதல் ரக முட்டாள். அது நடக்கிறது, ஏனென்றால் நிலையான அறிவு இல்லை. சனாதன கோஸ்வாமியும், சைதன்ய மகாபிரபுவை அணுகியபோது, அவரும் அதையே சொன்னார். அவர் பொறுப்புள்ள பதவியில் இருந்தார். அவர் பிரதமராக இருந்தார். அவர் சமஸ்கிருதத்திலும் உருது மொழியிலும் மிகவும் கற்ற அறிஞராக இருந்தார் - அந்த நாட்களில் உருது, ஏனெனில் அது முகலாய அரசு. ஆனால் "அவர்கள் என்னை கற்றறிந்த அறிஞர் என்று அழைக்கிறார்கள், ஆனால் நான் என்ன வகையான அறிஞர்?" அவர் இந்த கேள்வியை சைதன்யா முன் வைத்தார். கிராம்ய வ்யவஹாரே கஹயே பண்டித சத்யா கரி மானி,, ஆப்பனார ஹிதாஹித கிச்சுய் நாஹீ ஜானி : என் அன்பான இறைவன் சைதன்யா மகாபிரபு, இந்த சாமானியர்கள், நான் M.A., Ph.D, D.A.C. மற்றும் பல, அதனால். நான் மிகவும் கற்ற அறிஞர். ஆனால் நான் யார், என் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாத மிகவும் பெரிய அறிஞன், "சற்றுப் பாருங்கள்." வாழ்க்கையின் நோக்கம் என்ன? "என்று எந்தவொரு அறிஞரையும் கேளுங்கள் என்ன என்று அவர் சொல்ல முடியாது. வாழ்க்கையின் நோக்கம். நாயைப் போலவே இருக்கிறது: சாப்பிடு, குடி, மகிழ்ச்சியாக இரு, மகிழு, பின்னர் இறப்பதையே எல்லோரும் அறிவர். அவ்வளவுதான். ஆகவே வாழ்க்கை கல்வி எங்கே? வாழ்க்கை கல்வி இல்லை. உண்மையான கல்வி வேறு: ஒருவர் தனது சொந்த நிலையை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.