TA/Prabhupada 0761 - இங்கே வருபவர்கள் எல்லோரும் புத்தகங்களைப் படிக்கவேண்டும்

Revision as of 07:25, 19 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Honolulu, May 25, 1975

பிரபுபாதா: ஒரு ஸ்லோகம் உள்ளது, சமோ 'ஹம் ஸர்வ- பூதேஷு ந மே துவேஷியோ 'ஸ்தி ந பிரியஹா (ப கீ 9. 29). கிருஷ்ணர் கூறுகிறார் ... கடவுள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கடவுள் ஒன்று, எனவே அவர் அனைவருக்கும் உணவு தருகிறார். பறவைகள், மிருகங்கள், அவைகளுக்கு உணவு கிடைக்கிறது. யானைக்கும் உணவு கிடைக்கிறது. உணவு வழங்குபவர் யார்? கிருஷ்ணா, கடவுள் வழங்குகிறார். எனவே அந்த வகையில் அவர் அனைவருக்கும் சமமானவர், சாதாரண கையாளுதலில். ஆனால் குறிப்பாக பக்தர்களுடன் தனி பரிவோடு தொடர்பு கொள்கிறார். பிரஹ்லாத மகாராஜாவைப் போல. அவர் ஆபத்தில் சிக்கியபோது, ​​அவருக்கு பாதுகாப்பு அளிக்க இறைவன் நரசிம்ம- தேவா தனிப்பட்ட முறையில் வந்தார். அதுவே கடவுளின் சிறப்பு கடமை. அது இயற்கைக்கு மாறானது அல்ல. "கடவுள் பாரபட்சமானவர், அவர் தனது பக்தரை விசேஷமாக கவனித்துக்கொள்கிறார்" என்று யாராவது சொன்னால், இல்லை, அது பாரபட்சம் அல்ல. ஒரு மனிதனைப் போலவே - அக்கம் பக்கத்தில், ஒரு மனிதர் - எல்லா குழந்தைகளையும் நேசிக்கிறார், ஆனால் தனது சொந்த குழந்தை ஆபத்தில் இருக்கும்போது, ​​அவர் சிறப்பு கவனம் செலுத்துகிறார். அது இயற்கைக்கு மாறானது அல்ல. "உங்கள் சொந்த குழந்தையை ஏன் கவனித்துக்கொள்கிறீர்கள்?" என குற்றம் சொல்ல இயலாது. அது இயற்கையானது. யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள். இதேபோல், எல்லோரும் கடவுளின் மகன்கள், ஆனால் அவருடைய பக்தருக்கு தனி சிறப்பு உண்டு. அதுவே கடவுளின் சிறப்பு கவனம். ஏ து பஜந்தி மாம் ப்ரித்யா தேசு தே மயி. ஆகவே, கடவுள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறார், ஆனால் நீங்கள் இறைவனின் பக்தராக, தூய பக்தராக, எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆகிவிட்டால், கடவுள் உங்களைக் கவனித்துக்கொள்வார். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கம், நாம் மாயாவால் துன்புறுத்தப்படுகிறோம், பொருள் ஆற்றல், அப்போது, நாம் கிருஷ்ணரை அடைக்கலம் என்று பற்றினால், நாம் சிறப்பாக பாதுகாக்கப்படுவோம்.

மாம் ஏவ பிரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே
(ப கீ 7.14).

எனவே கிருஷ்ணரின் பக்தராக மாற முயற்சி செய்யுங்கள். நமது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த தத்துவத்தை கற்பிக்கிறது. நம்மிடம் நிறைய புத்தகங்கள் உள்ளன. இங்கு யார் வந்தாலும் புத்தகங்கள் படிக்க வேண்டும், பக்தர், கோயிலில் வசிப்போர், பொது மக்கள், ஆகிய அனைவரும். அப்போது கிருஷ்ண பக்தி என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் அல்லது நீங்கள் ஹரே கிருஷ்ணா என்று நாம சங்கீர்த்தனம் மட்டும் செய்ய வேண்டும் அவசியமற்றதை பேசாதீர்கள், நேரத்தை வீணாக்குறீர்கள். அது சரியில்லை. ஒரு கணம் மிகவும் மதிப்புமிக்கது, அதை நீங்கள் மில்லியன் டாலர்களால் கூட வாங்க முடியாது. இப்போது இன்று மே 25, நான்கு மணி போய்விட்டது. நீங்கள் அதை மீண்டும் கொண்டு வர முடியாது. நான்கு மணி, 25 மே 1975, மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி அதை மீண்டும் பெற விரும்பினால், அது சாத்தியமில்லை. எனவே நாம் நம் நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முறை வீணான நேரம், அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது. இந்த நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். சிறந்த பயன்பாடு ஹரே கிருஷ்ணா என்று நாம சங்கீர்த்தனம் செய்வது அல்லது கிருஷ்ணரைப் பற்றி சிந்திப்பது, கிருஷ்ணரை வணங்குவது. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாத.