TA/Prabhupada 0865 - நீ நாட்டை கணக்கில் கொள்கிறாய், ஆனால் சாஸ்திரங்களோ கோள்களை வைத்துத்தான் அமைகிறது, நாட்
750520 - Morning Walk - Melbourne
பரமஹம்ஸா: பூக்கும் ரகங்கள் நிறைய இல்லை.
பிரபுபாதர்: இல்லை, பூக்கும் ரகங்கள் மட்டும் இல்லை. செடிகளும், கொடிகளும் எத்தனையோ வகைகள், இரண்டு மில்லியன். லக்ஷா-விம்ஷதி. பத்து லட்சம் ஒரு மில்லியன், விம்ஷதி என்றால், இருபது லட்சம்.
ஹரி-ஷௌரி: நான் படித்து கொண்டிருந்த நாளிதழில் ஒரு கட்டுரை கண்டேன். மனிதனின் பரிணாம வளர்ச்சியை பற்றிய ஒரு புத்தகத்தை விளம்பரப்படுத்தி கொண்டிருந்தார்கள். அதில் அவர்கள் கூறிப்பிடுகிறார்கள், இந்த பிரபஞ்சத்தில் சுமார் ரெண்டு மில்லியன் உயிர்வகைகள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று. இதுதான் விஞ்ஞானிகளின் கணக்கு.
பிரபுபாதர்: இண்டு மில்லியன்? இல்லை 8,400,000.
ஸ்ருதகீர்த்தி: இவ்வினங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் பத்ம-புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது, என்று நீங்கள் சில நாட்களுக்கு முன் சொன்னீர்கள்.
பிரபுபாதர்: ஆமாம்.
ஸ்ருதகீர்த்தி: இவைகளை பற்றிய தகவல்கள் எல்லாமே இருக்கிறது.
பிரபுபாதர்: தனிப்பட்ட முறையில் அளவீடுகள் இருக்கிறதா, இல்லை மொத்தமாக இருக்கிறதா?
ஹரி-ஷௌரி: சுமாராக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்ருத-கீர்த்தி: ஒரு மதிப்பீடு தான்.
ஹரி-ஷௌரி: இந்த குரங்கு இனத்திலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற நூலிழையில் காணாமல் போயிருந்த இணைப்பு வரைபடம். அதில் மனித உருவம் அதாவது கூண்போட்ட மனித குரங்கை போல ஒரு வரைபடம் இருக்கிறது. அவர்கள் அதை...
பிரபுபாதர்: அவர்களுக்கு அது எங்கே கிடைத்தது?
ஹரி-ஷௌரி: ...இந்த மாதிரியான இனம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டது என்கிறார்கள்.
அமோஹா: மனித உயிரிணங்களில் உள்ள 400,000 இணங்களில், எந்த ஒன்று வித்தியாசமாக உள்ளது? அதை நாம் எப்படி கண்டுபிடிப்பது? நம்மால் முடியுமா?
பிரபுபாதர்: ஏன் நீ மனித வகைகளை பார்ததில்லையா?
அமோஹா: பார்த்திருக்கிறேன்.
பிரபுபாதர்: அப்போ, என்ன...
அமோஹா: அது ஒரு நாட்டிற்குள் பிரிக்கப்பட்டதா? இல்லை ஒரே நாட்டில் இவ்வளவு இனங்கள் உள்ளதா?
பிரபுபாதர்: நீ நாட்டை கணக்கில் கொள்கிறாய், ஆனால் சாஸ்திரங்களோ கோள்களை வைத்துதான் அமைகிறது, நாட்டை வைத்து இல்லை. உன் யோசனையே
ஊனமுற்றது: "நாடு". ஆனால் சாஸ்திரம் அப்படி இல்லை... நாடு என்று ஒன்றுமே இல்லை. அவர்கள் இந்த முழு பிரபஞ்சத்தையே கணக்கில் வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த பார்வையோடுதான் பார்க்கிறார்கள். இந்த மூடத்தனமான யோசனைகள், "நாடு", "தேசம்," இதெல்லாம் அப்புறம் தான் வந்தது. முற்காலத்தில் இதெல்லாம் இல்லை. ஒரு கோளா, பிரபஞ்சமா, அவ்வாறு. நேற்று இரவு ஒரு பெண் ஆச்சர்யம் அடைந்த மாதிரி "எப்படி ஒரு முழு பிரபஞ்சத்தயே ஒரு ராஜாவால் ஆளமுடியும் என்று?" உண்மையில் அதுதான் நடந்தது. இந்த உலகத்தையே ஒரு பிரம்மா தான் ஆண்டுக் கொண்டிருக்கிறார், ஒருவர்தான். ஒருவர் எப்படி ஆள்வது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
பக்தர்(1): எங்களால் பார்க்க முடிகிறது, ஶ்ரீல பிரபுபாதா, ஒவ்வொரு ஸ்லோகமும் செல்வமும் செழிப்பும் கொண்டுள்ளதை, ஒவ்வொரு கோள்களிலும், அவைகளை ஆள்வதற்கு ஒருவர் தேவை. ஒரு இடத்தில் தங்கம் கிடைக்கிறது, மற்றொரு இடத்தில் தானியங்கள் விளைகிறது, இது உண்மையா?
பிரபுபாதர்: இல்லை. எல்லா இடத்திலும் எல்லாம் இருக்கிறது, ஆனால் கொள்ளளவு மாறுப்பட்டு இருக்கிறது.
ஹரி-ஷௌரி: அதைத்தான் பிரமதேவன் கவனிக்கிறாரா, இந்த பிரபஞ்சத்தில், இதையேதான் மற்ற தேவர்களையும் செய்ய சொல்கிறாரா? துறைக்கு தலைவர்கள் இருப்பது போலவா? அவர் எந்த ஒரு விஷயமும் அவரே கையாளவில்லை.
பிரபுபாதர்: ஆம், அவரது வேலையை பகிர்ந்து கொடுத்திருக்கிறார். நமது ஜிபிஸி எப்படி ஒவ்வொரு இடத்திலும் பணி செய்கிறதோ அவ்வாறு பணி செய்யும். அதைப்போல, அவரவர் வேலையை அவர்கள் நன்றாகவே செய்கிறார்கள். இந்த ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தேவர்கள் வாழ்விடம். அவர்கள் இந்த பிரபஞ்சத்தையே முழுமையாக கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது, மனிதன் எம்மாத்திரம். நாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம், நாம் கட்டுப்படுத்துவதில்லை. அதை அவர்கள் உணருவதில்லை. இந்த நவீன நாகரீகம், புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கட்டுப் படுத்தபட்டிருப்பதை புரிந்து கொள்ளவில்லை. அதுதான் குறையே.