TA/Prabhupada 0864 - இந்த மனித சமூகம் சந்தோஷமாக இருக்க, கடவுள் பக்தி இயக்கம் பரவ வேண்டும்



750521 - Conversation - Melbourne

இயக்குனர்: நம் மந்திரி தன்னை மக்களின் சேவகனாக கருதுவார், எப்போ வேண்டுமானாலும் வெளியே தள்ளப்படுவார்...

பிரபுபாதர்: அதுதான் குற்றம். மக்களே பாவிகள், அவர்களே இன்னொரு பாவியை தேர்ந்தெடுக்கிறார்கள். (சிரிப்பு) அதுதான் குற்றமே.

இயக்குனர்: அது அப்படித்தான்.

ப்ரபுபாத:அதுனால என்ன செய்யலாம்?அது ப்ரயோஜனமே இல்லை.

இயக்குனர்: சரி, அதில் வேலை செய்யலாம்...

பிரபுபாதர்: நாங்கள் இந்த பாவிகளை நம்பாமல் முன்னே போகிறோம். நாங்கள் போய் கொண்டே இருக்கிறோம், புத்தகம் வெளியிடுகிறோம், எங்கள் இயக்கத்தை பலமாக்குகிறோம், உண்மையாகவே முயற்சிக்கிறோம். அவ்வளவு தான். இதையே உலகம் முழுவதும் செய்கிறோம்.

இயக்குனர்: மக்கள் தொகையை வேறு விதமாக நம்பவைக்க நாங்கள் உங்களை அனுமதிக்கலாம்.

பிரபுபாதர்: ஆம், நாங்கள் செய்கிறோம்.

இயக்குனர்: அப்படி செய்யும் போது, சமூக நலன் துறைக்கும் சில விதிகள் இருக்கின்றன ...

பிரபுபாதர்: உதாரணத்திற்கு நாங்கள் ஒருவரிடம் சொல்கிறோம், "தயவு செய்து தகாத உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம்." உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?

இயக்குனர்: என்ன சொல்கிறீர்கள்?

பிரபுபாதர்: நான் யாருக்காவது "தகாத உடலுறவு கொள்ளாதீர்கள்", என்று அறிவுரை கூறினால் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா? இயக்குனர்: ஆம், இருக்கிறது...

பிரபுபாதர்: தகாத உடலுறவு... நான் சொல்வது....—

இயக்குனர்: எனக்கு உடலுறவு பிடிக்கும், என் மனைவிக்கும் பிடிக்கும். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். இது இல்லாமல் எங்களால் வாழ முடியாது. எங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பிரபுபாதர்: பாருங்கள். (பலத்த சிரிப்பு) இதுதான் நிலைமை.

இயக்குனர்: ஆம் அதுதான் நிலைமை. நாங்கள்இருவரும் ஒத்துழைக்கிறோம்...

பிரபுபாதர்: சரி அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? (பக்தர்களை பார்த்து)

இயக்குனர்: எனக்கு தெரியாது. எனக்கு தெரியாது. ஆனால் என்னால் முடியாது. (தெளிவில்லாத) உடலுறவு அனுபவிப்பதுதான் வாழ்க்கையே, எங்கள் கல்யாணம் உடலுறவால் தான் சந்தோஷமாக இருக்கிறது.

பிரபுபாதர்: இல்லை, நாங்கள் உடலுறவு கூடாது என்று சொல்ல வில்லை. ஆனால்...

இயக்குனர்:... இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம் ...

பிரபுபாதர்: தகாத உடலுறவு வேண்டாம்.

இயக்குனர்: சரி, நாங்கள் மாத்திரை, அல்லது கர்பதடை வழிகளை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அது எங்கள்....

பிரபுபாதர்: ஏன் கர்பதடை முறை?

இயக்குனர்: ஏனென்றால் எங்களுக்கு மேற்கொண்டு குழந்தைகள் வேண்டாம்.

பிரபுபாதர்: ஏன், உடலுறவு கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்களேன்?

இயக்குனர்: ஏனென்றால் எங்களுக்கு உடலுறவு பிடிக்கும்.

பிரபுபாதர்: பாருங்கள்.

இயக்குனர்: ஏனென்றால் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

பிரபுபாதர்: அவ்வாறென்றால் நீங்கள் ஒரு மருத்துவரிடம் போங்கள், "நான் விரும்பியதை எல்லாம் செய்ய வேண்டும்; என்னை குணப்படுத்துங்கள்." என்று. இதுதான் நிலை. உங்களுக்கு வேண்டுமா...

இயக்குனர்: நான் சிகிச்சை பெற வரவில்லை (சிரிப்பு) நீங்கள் என்னை பற்றி கேட்டீர்கள்...

பிரபுபாதர்: இல்லை, இல்லை, நீங்கள் சிகிச்சை பெற தானே இங்கே வந்தீர்கள், ஏனென்றால் உங்களால் சமுதாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை, உங்கள் செயல்களால், ஆகையினால் சிகிச்சை பெற இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு மருந்தை பரிந்துறைத்தால், நீங்கள் அதை ஏற்க மாட்டீர்கள்.

இயக்குனர்: நான் வைத்தியத்திற்காக வரவில்லை.

பிரபுபாதர்: இல்லை... பின்னே எதற்காக வந்தீர்கள்?

இயக்குனர்: நான் அழைக்கப்பட்டேன்.

பிரபுபாதர்: உங்களுக்கு உதவுவதற்காக, உங்கள் சமூக நல தொண்டிற்காக, சமுதாய சேவைக்காக. எங்களிடம் அறிவுரை கேட்பதற்காக, ஆனால் நாங்கள் சொல்லும் அறிவுரையை கேட்க மறுக்கிறீர்கள். இது தான் உங்கள் நிலைமை. நீங்கள் இங்கு உங்கள் நடவடிக்கைகளை சீர் செய்ய அறிவுரை கேட்க வந்தீர்கள், ஆனால் அறிவுரை கொடுத்தால் ஏற்க மறுக்கிறீர்கள்.

இயக்குனர்: எனக்கு இரு முகம்-நான், மற்றும் ஒரு சமூக சேவகன்.

பிரபுபாதர்: யாராக இருந்தாலும் அது தான் நிலைமை. வைத்தியத்திற்கு வைத்தியரிடம் போவீர்கள், ஆனால் வைத்தியம் சொன்னால், அதை ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் எப்படி குணமாவீர்கள்?அதுதான் நிலைமை. மருந்து பரிந்துரைத்தால், அதை உங்கள் நோயாளிகளின் மேல் உபயோகிக்கிறீர்கள். நோயாளிகளுக்கு மருந்தைப் பற்றி என்ன தெரியும்? அவர்கள் நோயாளிகள் தானே. இங்கு அது கேள்வி இல்லை...

இயக்குனர்: நான் இங்கே வந்து உங்கள் இயக்கத்தில் சேர்ந்தால், நான் அதை ஒத்துக்கொள்ளலாம்.

பிரபுபாதர்: இல்லை, நீங்கள் சேர்வீர்களோ இல்லையோ, இங்கே வந்தீர்கள் எங்களிடம் அறிவுரை கேட்க. ஆனால் அறிவுரை கூறினால், ஏற்க மறுக்கிறீர்கள், அதுதான் உங்கள் நிலை.

பக்தன்(1): அவர் போக வேண்டும், ஶ்ரீல பிரபுபாதா.

பிரபுபாதர்: அவருக்கு பிரசாதம் கொடு. கொஞ்சம் பொருங்கள். ஆதாலால்...இந்த உலக மக்களின் ஒட்டு மொத்த சந்தோஷத்திற்காக, இந்த கடவுள் நம்பிக்கை இயக்கம் பரவ வேண்டும்.

இயக்குனர்: நான் கண்டிப்பாக உங்களை மறுபடியும் சந்திப்பேன், என்னை சந்தித்ததற்கு மிகவும் நன்றி.

பிரபுபாதர்: கொஞ்சம் பொருங்கள். பக்தன்(2) எங்களிடம் சாப்பிட நல்ல உணவுப் பொருள்கள் இருக்கு உங்களுக்கு கொடுக்க (தெளிவில்லாத).

பக்தன்(3): உங்களுக்கு ஏதோ கொண்டு வருகிறார், ஒரு நிமிடம்.

இயக்குனர்:இது எங்கள் கடமையின் ஒரு பகுதி..

பக்தன் (3):ஆம்,ஆம் இதுதான் வழிமுறை. பக்தன்(1) ஶ்ரீல பிரபுபாதா எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்க சொல்லி இருக்கிறார்.

பிரபுபாதர்: எங்களை தேடியாராவது வந்தால் இதுதான் எங்களது வழிமுறை, அவரை நல்ல ஆசனத்தில் உட்காரவைத்து, அவரை வாய்க்கு ருசியா ஏதாவது கொடுப்பது. ஆமாம்.