TA/Prabhupada 0868 - நாம் இந்த மோசமான வாழ்க்கை நிலையை கண்டு பயந்து ஓடுகிறோம். அதனால் நாம் சந்தோஷத்தை இழக்கி

Revision as of 07:28, 7 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750629 - Morning Walk - Denver

பிரபுபாதர்: நாம் உருவாக்கப்போவது இல்லை. இது புத்திசாலித்தனமா, அல்லது தப்பித்துக் கொள்ளும் வழியா, "நீங்கள் உழைத்து எங்களிடம் கொடுங்கள், நாங்கள் அதை சந்தோஷமாக அனுபவிப்போம்" அப்படித்தானே? இது அறிவாளித்தனம்; தப்பித்து கொள்வது இல்லை. இதுதான் இன்றைய வாழ்க்கை முறை. இந்த செல்வந்தர்கள், இந்த அயோக்கியர்களை தொழிற் சாலைகளில் வேலைக்கு சேற்கிறார்கள், அவன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறான். அது புத்திசாலிதனம். பதுங்குதல் இல்லை.

உங்களுக்கு கலைமானும் குள்ளநரியும் கதை தெரியுமா? (சிரிப்பு) குள்ளநரி ஒரு கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.அது வெளியே வரமுடியாமல் தவித்தது. அந்த பக்கமாக ஒரு கலைமான் வந்தது. "என்ன ஆச்சு என்றது...?" "ஓ, இங்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது. நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். பாரேன்? சந்தோஷமாக இருக்கிறேன்." என்றது. கலைமான் நம்பி அதுவும் உள்ளே குதித்தது. அது குதித்த உடனேயே, நரியின் தலைமேல் காலை வைத்து வெளியே குதித்து விட்டது. அது அறிவாளித்தனம், "இந்த முட்டாள் வேலை செய்யட்டும் இந்த அழகான பூங்காவை கட்டட்டும், நாம் அதை சந்தோஷமாக அனுபவிப்போம்." என்பது அறிவாளித்தனம். அதைத்தான் நாம் அஜாகர-வ்ருத்தி என்போம். அஜாகர-வ்ருத்தி. அஜாகர என்றால்... மிகப்பெரிய பாம்பு. இந்த சுண்டெலி, ஒரு பொந்தை தோண்டி அதில் இருக்க ஆசைப்படுகிறது. வசதியாக இருந்துக்கொண்டிருக்கும் போது, அஜாகர வருகிறது. அது அந்த சுண்டெலியை விழுங்கிவிட்டு ஆனந்தமாக இருக்கிறது. நாமும் அதுப்போலதான் அஜாகர வ்ருத்தி. வசதியாக ஒரு பொந்துக்குள் வாழ அயராது உழைக்கிறோம், அந்த வீட்டை சொந்தமாக்கிக்கொண்டு அதனுள் வசதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். லாஸ் ஏன்ஜலஸில், இருக்கும் கடைக்காரர்கள், நம்மில் சிலரை பார்த்து "நீங்கள் வேலை எதுவும் செய்வதில்லை. நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள். நாங்கள் இவ்வளவு கடினமாக உழைத்தும் எங்களால் வசதியாக வாழமுடியவில்லை" என்கிறார்கள். இப்படி கேட்டவுடனே, "சரி நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்துவிடுங்கள்," என்றால் மாட்டார்கள்: "நாங்கள் இப்படியே இருக்க தயார் என்கிறார்கள்." நாங்கள் எல்லோரையும் "எங்களிடம் வாருங்கள்," என்கிறோம், ஆனால் அவர்கள் வர மறுக்கிறார்கள். அவர்கள் நம்மை பார்த்து பொறாமை அடைகிறார்கள். அதனால் பதுங்கி வாழ்கிறார்கள், "மற்றவர்களின் உழைப்பில் வசதியாக வாழ்வதற்கு தயங்குவதில்லை." அது அவர்களின் பொறாமைத்தனம். "அவர்களிடம் இவ்வளவு கார்களும், மற்றும் அவர்களது முகம் பளீச் என்று இருக்கிறது, என்று பார்க்கிறார்கள், நன்றாக சாப்பிடுகிறார்கள், எந்த பிரச்சினையும் இல்லை." அதனால் பொறாமை படுகிறார்கள்.

ஹரிகேஷா: அது எப்படி என்று தெரிந்தால் அதை உடனே செய்வார்கள்.

பிரபுபாதர்: ஆம்?

ஹரிகேஷா: அவர்களுக்கு தெரிந்தால் அதை உடனே செய்வார்கள்.

பிரபுபாதர்: இல்லை, நாங்கள் அவர்களை கூப்பிடுகிறோம், "இங்கே வாருங்கள் என்கிறோம்." ஏன் வர மறுக்கிறார்கள்? அது அவர்களுக்கு கஷ்டமானது. ஹரே க்ருஷ்ணா ஜபிப்பதற்கும், ஆடுவதற்கும், ஓ அது ரொம்ப பெரிய வேலை, கடினமானதும் கூட. அவர்கள் வர மாட்டார்கள். எது மிகவும் கடினம் தெரியுமா இங்கு வந்தவுடன்தான் தெரியும் இங்கு தேனீர் கிடைக்காது என்று, சாராயம் இல்லை, மாமிசம் இல்லை, சிகரேட் இல்லை, "ஓ, இவ்வளவு இல்லைகளா? ஓ." அந்த வரைவாளர் சொன்னார்? அன்றைக்கு ஒரு வரைவாளர் சில பசங்களை பற்றி விசாரிக்க வந்திருந்தார், அந்த வரைவாளர் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக தான், இந்த ஹரே க்ருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து. "சரி அதில் என்ன சுகம் இருக்கு? அவர்கள் வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கே வந்துள்ளார்கள்...." இங்கு வந்த பின் இங்கே மாமிசம் இல்லை, சாராயம் இல்லை, புகைப்பிடித்தல் இல்லை, மற்றும் சூதாட்டம் இல்லாமல் இருப்பது பற்றி புரிகிறது, அவர் அப்பொழுது சொல்கிறார், "இது மிகவும் கடினம., ஆனால் அப்படி இருந்தும், இங்கே வருகிறார்கள்." வெளியே போய் சண்டை போடுவதை விட கடினமானது. அதனால் எவ்வாறு நன்றாக இருக்கும். சொல்லப் போனால், கர்மிகளுக்கு இது மிகவும் கடினமான ஒன்று. ஏன் லார்ட் ஜெட்லாண்ட் சொன்னது போல, "இது செய்வது மிகவும் கஷ்டமானது" இன்னும் சொல்லப்போனால், இதைக் கடைப்பிடிக்கவே முடியாது. இது தான் டாக்டர் மெய்மறக்கிறார்...ப்ரஃபஸர் ஜூடா, எப்படி "இந்த போதை மருந்துக்கு ஆட்பட்டவர்கள் எல்லோரும், கிருஷ்ண பக்தியில் வந்தார்கள் என்று?" அது ஒரு ஆச்சரியமான விஷயம். "நாங்கள் மாமிசம் சாப்பிடாமல், சாராயம் குடிக்காமல், போதை பொருளுக்கு ஆளாகாமல் இந்த மோசமான வாழ்க்கை நிலையிலிருந்து பயந்து ஓடுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம்". நாங்கள் இவ்வனைத்தையும் விட்டு விலகி ஓடுகிறோம், ஆனால் சந்தோஷத்தை அனுபவிப்பதிலிருந்து பயந்து ஒடவில்லை. நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்காமல் ஓடுகிறீர்கள். ஹரே ராம ஹரே ராம....

ஸத்ஸ்வரூபா: ஆனால் மனநோய் மருத்துவர் சொல்கிறார் செக்ஸ் வைத்து கொள்வதுதான் நமது கடமை என்று...

பிரபுபாதர்: ஏன் பன்றி கூடதான் சந்தோஷமாக இருக்கிறது. அப்பொழுது உனக்கும் பன்றிக்கும் என்ன வித்தியாசம்? பன்றி அளவில்லாமல் சந்தோஷத்தை அனுபவிக்கிறது, ஏன் பூனை நாய்களும் கூட தடையின்றி இருக்கிறது. நாம் மனித உடல் பெற்றமைக்கு என்ன உபயோகம், கற்றதுக்கு என்ன உபயோகம்? பன்றி என்னைவிட நன்றாக வாழ்க்கை வாழ்கிறது. ஆனால் உனக்கு சில வரையறை இருக்கிறது, "இது என் தங்கை, இது என் அம்மா, இது என் பெண்," என்று. அவைகளுக்கு இதெல்லாம் தெரியாது.நீ உன் வாழ்க்கை வரையறை இல்லாமல் வாழ்ந்தால் பன்றி போல் ஆக வேண்டியதுதான். அடுத்த ஜென்மத்தில் அது உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது.