TA/Prabhupada 0923 - இந்த நான்கு தூண்களையும் உடைத்து விடுங்கள். பாவ வாழ்க்கையின் மேற்கூரை சரிந்து விடும்
730422 - Lecture SB 01.08.30 - Los Angeles
கிருஷ்ணரை ஒரு சாதாரண சிறுவனாக, மனிதனாக எடுத்துக்கொண்டால், கிருஷ்ணரும் ஒரு சாதாரண மனிதன் போல நடந்துகொள்வார். கிருஷ்ணரை பரமபுருஷ பகவானாக ஏற்றுக்கொண்டால், பக்தர், பரமபுருஷ பகவானின் சகவாசத்தை அனுபவிப்பார். மேலும் அருவவாதிகள் பிரம்ம ஜோதியின் மீது மிகுந்த விருப்பம் கொண்டால், அவரே அதன் தோற்றுவாய் ஆவார். எனவே அவர்தான் எல்லாம். ப்ரஹ்மேதி, பரமாத்மேதி, பகவான் இதி ஷப்த்யதே (ஸ்ரீ. பா. 1.2.11).
எனவே இப்படிப்பட்ட உன்னத பரமபுருஷ பகவானுடன், இந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி, ஏன் இவர்கள், பரம புருஷ பகவானுடன் விளையாடக் கூடியஅளவுக்கு, அதிர்ஷ்டசாலிகள் ஆனார்கள்?
- இத்தம்' ஸதாம்' ப்ரஹ்ம-ஸுகானுபூத்யா
- தாஸ்யம்' கதானாம்' பர-தைவதேன
- மாயாஷ்ரிதானாம்' நர-தாரகேண
- ஸாகம்' விஜஹ்ரு: க்ரு'த-புண்ய-புஞ்ஜா:
இந்த சிறுவர்கள், இடைச் சிறுவர்கள், இப்போது கிருஷ்ணருடன் விளையாடிக் கொண்டிருப்பவர்கள், அவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இப்போது மிக உயர்ந்த பக்குவ நிலை கிடைத்துள்ளது, அதாவது அவர்களால் பரம புருஷ பகவானுடன் விளையாட முடிகிறது. இந்த நிலையை அவர்கள் எப்படி அடைந்தனர்? க்ரு'த-புண்ய-புஞ்ஜா:. பலப்பல பிறவிகளில் புண்ணிய செயல்கள். இந்த சிறுவர்கள், பலப்பல வாழ்க்கையில் தவங்களையும், விரதங்களையும் கடைப்பிடித்து, அதன் காரணத்தால் வாழ்க்கையின் மிக உயர்ந்த பக்குவ நிலையை அடைந்துள்ளனர். இப்போது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிருஷ்ணருடன், அவருக்கு சமமாக விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கிருஷ்ணரே பரமபுருஷ பகவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இதுதான் விருந்தாவன லீலை. இந்த இடைச் சிறுவர்கள், அவர்கள் கிருஷ்ணர் மீது அன்பு மட்டும் செலுத்துவார்கள். அவர்களுடைய அன்பு முடிவற்றது. விருந்தாவனத்தில் உள்ள அனைவருமே. அன்னை யசோதா அல்லது நந்த மகாராஜாவை போல. அவர்கள் கிருஷ்ணரிடம் பெற்றோரின் அன்புடன் இருந்தனர். ஆக, தந்தையும் தாயும் கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தனர், நண்பர்களும் கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தனர், கோபியர்களும் கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தனர், மரங்களும் கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தது, நீரும் கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தது, பசுக்கள், கன்றுகள், என அனைவருமே கிருஷ்ணர் மீது அன்பு வைத்திருந்தனர். இதுதான் விருந்தாவனம். எனவே நாமும் கிருஷ்ணர் மீது அன்பு வைக்க மட்டும் கற்றுக் கொண்டால், பிறகு உடனடியாக இந்த உலகத்திலும் நாம் விருந்தாவனத்தை உருவாக்கலாம், உடனடியாக. இதுவே மையப்புள்ளி. எப்படி கிருஷ்ணர் மீது அன்பு வைப்பது. ப்ரேமா பும்-அர்தோ மஹான்.
எனவேதான் சைதன்ய மகாபிரபு கூறியிருக்கிறார். தர்ம-அர்த-காம-மோக்ஷ ([[Vanisource:SB 4.8.41|ஸ்ரீ. பா. 4.8.41, சை .சரி ஆதி 1.09). மக்கள் இந்த நான்கு விஷயங்களுக்கு பின் அலைகின்றனர். தர்ம-அர்த-காம-மோக்ஷ. சைதன்ய மகாபிரபு இதனை நிராகரித்தார் "வாழ்வின் சாதனை இதுவல்ல." மனிதப்பிறவி உண்மையில்..... சமயத்தின், தர்மத்தின் கொள்கை இல்லாத வரைக்கும் மனிதப்பிறவி தொடங்குவதே இல்லை. ஆனால் தற்போதைய நொடியில் இந்தக் கலியுகத்தில் தர்மம் என்பது நடைமுறையில் இல்லை. எனவே வேத கணக்கின்படி, தற்போதைய மனித நாகரீகம், அவர்கள் மனிதர்களே அல்ல. ஏனெனில் எந்த தர்மமும் இல்லை, எந்த சமயமும் இல்லை. எந்த ஒழுக்கமும் இல்லை. எந்த புண்ணிய செயல்களும் இல்லை. அதைப்பற்றிய கவலையே இல்லை. யாரும் எதையும் கவலைப்படாமல், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். முன்பு ஒழுக்கம், ஒழுக்கமின்மை, தர்மம், அதர்மம் என்பதெல்லாம் இருந்தது. ஆனால் கலியுகத்தில் நாட்கள் செல்லச் செல்ல அனைத்துமே அழிந்து விடுகிறது. கலியுகத்தில் கிட்டத்தட்ட 80% மக்கள் பாவிகளாக, பாவப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாம் இதை நடைமுறையில் பார்க்கிறோம். நாம் பாவச் செயல்களின் பட்டியலை கொடுத்துள்ளோம், நான்கு கொள்கைகள், தகாத பாலுறவு, போதைப்பொருட்கள், மாமிசம் உண்ணுதல், மற்றும் சூதாட்டம். இவை நான்கும் பாவ வாழ்க்கையின் நான்கு தூண்கள் ஆகும்.
எனவேதான் நாம் நமது மாணவர்களை முதலில் இந்த நான்கு தூண்களையும் உடைக்குமாறு வேண்டுகிறோம். பிறகு உங்கள் பாவ வாழ்க்கையின் மேற்கூரை சரிந்து விடும். பிறகு ஹரே கிருஷ்ணா ஜெபம் செய்யுங்கள், நீங்கள் உன்னத தளத்தில் நினைத்திருப்பீர்கள். எளிமையான வழிமுறை. ஏனெனில், ஒருவனுடைய வாழ்க்கை பாவகரமானதாக இருந்தால் அவனால் கடவுளை உணர முடியாது. அது சாத்தியமல்ல. எனவேதான் கிருஷ்ணர் கூறுகிறார்: யேஷாம் அந்த-கதம்' பாபம் (ப.கீ. 7.28). அந்த-கதம் என்றால் முடிந்தது என்று பொருள்.