TA/Prabhupada 0908 - நான் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யலாம், ஆனால் கிருஷ்ணர் அனுமதிக்கவில்லை என்றால்,

Revision as of 07:25, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730419 - Lecture SB 01.08.27 - Los Angeles

எந்த முறையில் இருந்தாலும்.... பிரகலாத மகாராஜாவைப் போல. பிரகலாத மகாராஜா நின்று கொண்டிருக்கும்போதே அவருடைய தந்தை கொல்லப்பட்டார், இது ஒழுக்கமின்மையா? நீங்கள் இருக்கும் போதே, நின்று கொண்டிருக்கும்போதே, உங்களுடைய தந்தை கொல்லப்படுவதை நீங்கள் பார்த்த விரும்புவீர்களா? அதை நீங்கள் தடுக்கவும் இல்லை. இது ஒழுக்கமா? யாரும் இதை ஒழுக்கம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இல்லை ஆனால் உண்மையில் இது நடந்தது, அதாவது இரணியகசிபு கொல்லப்பட்டான்.... இதோ இந்த படத்தில் இருப்பது போல, மேலும் பிரகலாத மகாராஜா, கொன்றவருக்கு மாலை அணிவிக்க முயற்சிக்கிறார்.(சிரிப்பு) "எனதருமை பகவானே, கொலைகாரனே, இதோ உங்களுக்கு மாலை. நீங்கள் என்னுடைய தந்தையை கொல்லுகிறீர்கள். நீங்கள் மிக நல்ல பையன்." (சிரிப்பு) பார்த்தீர்களா. இதுதான் இதுதான் ஆன்மீக புரிதல். யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்...... உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றாலும், இதனை நீங்கள் தடுத்தாக வேண்டும். நீங்கள் அழ வேண்டும் : "என்னுடைய தந்தை கொல்லப்படுகிறார், வாருங்கள், வாருங்கள், வாருங்கள், உதவி....." இல்லை. அவர் மாலையுடன் தயாராக இருக்கிறார். மேலும் அவர் கொல்லப்பட்டவுடன், நரசிம்ம தேவரிடம் அவர் கூறினார் : "எனதருமை பகவானே, இப்போது என்னுடைய தந்தை கொல்லப்பட்டுவிட்டார். எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நீங்கள் இப்போது உங்களுடைய கோபத்தினை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்." யாரும் துன்பத்தில் இல்லை. அவர் இதே வார்த்தையை கூறினார். மோதே3த ஸாது4ர் அபி வ்ரு'ஷ்2சிக-ஸர்ப-ஹத்யா (ஸ்ரிமத்.பா 7.9.14). மோதே3த ஸாது4ர் அபி. ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதை ஒரு சாது, ஒரு சாதுவானவர் எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை. எப்போதுமே இல்லை. ஒரு மிருகத்தைக் கொல்வதைக் கூட. ஒரு சாது ஏற்றுக்கொள்ள மாட்டார் ஏன் ஒரு மிருகம் கொல்லப்பட வேண்டும்? இது தான் சாதுவின் வேலை. ஆனால் பிரகலாத மகாராஜா கூறுகிறார்: மோதே3த ஸாது4ர் அபி. ஒரு சாது, ஒரு சாதுவானவர் கூட மகிழ்கிறார் எப்போது? ஒரு தேளோ அல்லது பாம்போ, கொல்லப்படும்போது. அவையும் உயிர் வாழிகள் தான்.. ஒரு சாது என்றுமே இன்னொரு உயிர்வாழி கொல்லப்படுவதை கண்டு மகிழ்வது இல்லை. ஆனால் பிரகலாத மகாராஜா கூறுகிறார் "ஒரு தேளோ அல்லது பாம்பு கொல்லப்படும்போது ஒரு சாது கூட மகிழ்கிறார். எனவே என்னுடைய தந்தை ஒரு பாம்பு அல்லது தேளைப் போன்றவர். இப்போது அவர் கொல்லப்பட்டார். எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்." அனைவருமே.... பக்தர்களுக்கு தொந்தரவு மட்டுமே அளித்த இத்தகைய அசுரன், இத்தகைய அசுரன் மிக ஆபத்தான அசுரன். எனவே இத்தகைய அசுரன் கொல்லப்பட்ட போது, சாதுக்கள் கூட மகிழ்ந்தனர். அவர்கள் சாதுக்கள் ஆக இருந்தாலும் கூட, யாரும் கொல்லப்படக் கூடாது என்பதைத் தான் விரும்புவார்களாக இருந்தாலும் கூட. எனவே கிருஷ்ணர் அகிஞ்சன-வித்த. பௌதிகமாக எல்லாவற்றையுமே இழந்தவனுக்கு, கிருஷ்ணர் மட்டுமே ஒரே ஆறுதல்.

எனவே கிருஷ்ணர் மிகக் கருணையானவர் அதாவது, யாராவது பௌதிகம் முன்னேற்றத்தையும், அதே சமயத்தில் பக்தராக இருக்க வேண்டும் என்றும் விரும்பினால் சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளபடி : "சிலர் என்னை விரும்பும் அதேசமயம், பௌதிக முன்னேற்றத்தையும் விரும்புகிறான். அவன் ஒரு முட்டாள். அவன் ஒரு முட்டாள்." எனவேதான், மக்கள் கிருஷ்ண உணர்விற்கு வருவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள். "ஓ, என்னுடைய பௌதிக முன்னேற்றம் முடிந்துவிடும்." ஏனெனில், அவர்கள் அதனை விரும்புவதில்லை. அதன் கூடவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்... பொதுவாக அவர்கள் சர்ச்சுக்கு அல்லது கோயிலுக்கு, பௌதிக முன்னேற்றத்தை வேண்டித்தான் செல்கிறார்கள். "கடவுளே எங்கள் தினசரி ரொட்டியை தாரும்." இதுதான் பௌதிக முன்னேற்றம். அல்லது "இதைத் தாருங்கள், அதை தாருங்கள்." ஆனால் அவர்கள் கூட புண்ணிய மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் கடவுளை நோக்கி செல்கிறார்கள்.

நாத்திகவாதிகள், கடவுளை நோக்கி செல்வதில்லை. அவர்கள் கூறுகிறார்கள் : "நான் ஏன் கடவுளை நோக்கி செல்ல வேண்டும்? நான் என்னுடைய செல்வத்தை நானே உருவாக்குவேன், விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்." அவர்கள் து3ஷ்க்ரு'தின, அதாவது, மிகவும் பாவிகள். யாரொருவர், "என்னுடைய முன்னேற்றத்திற்காக, நான் என் சொந்த வலிமையையும், என் சொந்த அறிவையும் நம்பி இருப்பேன்" என்று கூறுகிறார்களோ, அவர்கள் துஷ்க்ருதினர்கள். ஆனால் யார் ஒருவர், "என் முன்னேற்றம் கடவுளின் கருணையை நம்பி உள்ளது." என்று நினைக்கிறாரோ அவர்கள் புண்ணியவான்கள். புண்ணியவான்கள். காரணம், கடைசியில் கடவுளுடைய அனுமதி இல்லாமல் எதையும் அடைய முடியாது. இதுதான் உண்மை. இது தாவத்3 தனுர் இத3ம்' தனூபேக்ஷிதானாம் (?). நம்முடைய துன்பகரமான நிலையை குறைப்பதற்கான பல்வேறு மாற்று வழிகளை நாம் கண்டுபிடித்து இருக்கிறோம். ஆயினும் கடவுளால் அனுமதிக்கப்பட வில்லை என்றால், இந்த மாற்று வழிகள் தோற்றுவிடும்.

உதாரணமாக.... நீங்கள் ஒரு நல்ல மருந்தை கண்டுபிடித்து இருக்கிறீர்கள், மிகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர். அதெல்லாம் சரி. ஆனால் ஒரு மனிதன் நோய்வாய் பட்டிருக்கும் போது அந்த மருத்துவரிடம் கேளுங்கள் : "இந்த நோயாளியின் வாழ்க்கைக்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா?" அவர் "என்னால் முடியும்" என்று கூறவே மாட்டார். "என்னால் அப்படி கூற முடியாது. என்னால் ஆனவரை முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான்" இதன் பொருள் அனுமதி அளிப்பது கடவுளின் கைகளில் தான் உள்ளது. "நான் வெறும் கடவுளின் கருவி. நீங்கள் வாழ வேண்டும் என்பது கடவுளுக்கு பிடிக்கவில்லை என்றால், பிறகு என்னுடைய எல்லா மருந்துகள், என்னுடைய விஞ்ஞான அறிவு, மருத்துவ அறிவு தோற்றுவிடும்" கடைசியில் அனுமதி அவருடையதுதான். இதனை முட்டாள் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள், அவர்கள்..... எனவேதான் அவர்கள் மூட4, அயோக்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், அது நல்லதுதான். ஆனால் இறுதியில் கிருஷ்ணரால், கடவுளால் அனுமதிக்கப்படவில்லை என்றால் இது தோல்வியாகி விடும். அது அவர்களுக்கு தெரியாது. எனவேதான் அவர்கள் மூடர்கள். மேலும் ஒரு பக்தனுக்கு தெரியும், "என்னிடம் என்ன புத்திசாலித்தனம் இருந்தாலும், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்தாலும், கிருஷ்ணர் அனுமதிக்கவில்லை என்றால், நான் என்றும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன்." இதுதான் பக்தனுக்கும் பக்தர் அல்லாதவருக்குமான வித்தியாசம்.