TA/Prabhupada 0907 - ஆன்மீக உலகத்தில், ஒழுக்கமின்மை கூட நல்லதே



730419 - Lecture SB 01.08.27 - Los Angeles

பக்தர் : வறுமையில் வாடுவோரின் பெரு நிதியாக இருக்கும் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்கள் உரித்தாகட்டும். ஜட இயற்கை குணங்களின் செயல்களும் எதிர் செயல்களும் உம்மை ஒன்றும் செய்வதில்லை. நீர் சுய திருப்தி உடையவர். ஆதலினால் ஒரு சாந்த ஸ்வரூபி யும் மாயாவாதிகள் தலைவரும் ஆவீர்..

பிரபுபாதா  : நம: அகிஞ்சன-வித்தாய. வறுமையில் இருப்பவர். இது பக்தருக்குறிய முதல் தகுதியாகும். இந்த ஜட உலகத்தின் எந்த செல்வத்தையும் அடையாதவர். அவரிடம் கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார். இதுதான் அகிஞ்சன-வித்தாய . அகிஞ்சன - என்றால் பௌதிக செல்வங்கள் அனைத்தையும் இழந்தவர். "இந்த வகையில் நான் பௌதிக இன்பத்தை அடைய விரும்புகிறேன்."என்னும் கருத்தின் சிறு தாக்கம் இருந்தால் கூட நீங்கள் ஒரு உடலை பெற வேண்டி இருக்கும்.

நீங்கள் எந்த வகையில் இந்த ஜட உலகத்தில் இன்பம் அனுபவிக்க விரும்புகிறீர்களோ பகவானுடைய வழிகாட்டுதலில் அதற்குத் தகுந்தாற்போல ஒரு உடலை தரும் கருணை ஜட இயற்கை அன்னைக்கு உண்டு. பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். எனவே அவருக்கு, இன்னும் நீங்கள் பௌதிகமான சிலவற்றை விரும்புகிறீர்கள் என்பது அனைத்தும் அவருக்கு தெரியும். அவர் உங்களுக்கு அளிப்பார் . "சரி, எடுத்துக்கொள்" ஜட உலகின் லாபங்களால் நீங்கள் என்றும் மகிழ்ச்சி அடைய முடியாது என்பதன் முழு அனுபவத்தையும் நீங்கள் பெறவேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகிறார். இதுதான் கிருஷ்ணருடைய வேலை. இது முழுமையான சுதந்திரம். நம்மிடம் சிறிய அளவு சுதந்திரம் இருந்தாலும் அதற்கு காரணம் நாம் கிருஷ்ணருடைய அங்கத் துணுக்கு. கிருஷ்ணருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு, ஆனால் நாம் கிருஷ்ணருடைய அங்கத் துணுக்கு என்பதால் நம்மிடமும் சுதந்திரத்தின் தரம் இருக்கிறது. வேதியல் கலவை. கடல் நீரின் ஒரு துளியும் கடல் நீரைப் போலவே உப்புக் கரிக்கும். கடலில் இருக்கும் உப்பின் அளவுக்கு ஒப்பிட முடியாவிட்டாலும், உப்பு இருக்கவே செய்யும். இதுதான் நம்முடைய புரிதல். ஜன்மாத்3யஸ்ய யத: (ஸ்ரீமத்.பா 1.1.1). நம்மிடம் சிறிய அளவுக்கு என்னவெல்லாம் இருக்கிறதோ, அதே விஷயம் கிருஷ்ணரிடம் முழுமையாக இருக்கும். முழுமையாக. கிருஷ்ணா கூறுவதைப் போல: ம்ரு'த்யு: ஸர்வ-ஹரஷ்2 ச அஹம்.

நம்மிடம் மற்றவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. நீங்கள் இதனை திருட்டு என்று கூறலாம். நம்மிடம் அந்தத் தன்மை இருக்கிறது. ஏன்? கிருஷ்ணரிடம் அது இருக்கிறது. கிருஷ்ணர் வெண்ணை திருடன் என்று அறியப்படுகிறார். திருடுதல், திருடுதலின் தொடக்கம். ஆக இந்த திருடுதலின் தன்மை இல்லாமல், என்னிடம் எப்படி வந்தது? ஆனால் கிருஷ்ணருடைய திருட்டும் என்னுடைய திருட்டும் வேறுபடும். காரணம் நான் பௌதிக களங்கப் பட்டுள்ளேன், எனவே என்னுடைய திருட்டு கண்டனத்திற்கு உட்பட்டது. ஆனால் ஆன்மீகத்தின் பூரண தளத்தில் அதே திருட்டு நல்லதாகவும், இன்பத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. கிருஷ்ணருடைய திருட்டுச் செயல்களை தாய் யசோதா அனுபவித்து மகிழ்கிறார். இதுதான் வித்தியாசம். பௌதிகம் மற்றும் ஆன்மீகம். ஆன்மீகத்தில் எந்த செயலாக இருந்தாலும் அது நல்லது, மேலும் பௌதிகத்தில் எந்த செயலாக இருந்தாலும் அது கெட்டது. இதுதான் வித்தியாசம். இங்கு பெயரளவிலான ஒழுக்கம், நன்மை இவை எல்லாமே கெட்டது தான். மேலும் ஆன்மீக உலகில் பெயரளவிலான ஒழுக்கமின்மையும் நன்மையே. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அடுத்தவருடைய மனைவியுடன் நள்ளிரவில் நடனம் ஆடுவது என்பது ஒழுக்கமின்மை. இதை அனைவரும் அறிவர். குறைந்தபட்சம் வேத நாகரிகத்தில், இதனை அனுமதிப்பதில்லை. ஒரு இளம்பெண், நள்ளிரவில் ஒரு இளம் பையனுடன் நடனமாட செல்கிறாள். இது இந்தியாவில் என்றுமே அனுமதிக்கப்படாது. இப்போது கூட இது தடை செய்யப்பட்டது தான். ஆனால், எல்லா கோபியர்களும், புல்லாங்குழலின் ஓசையைக் கேட்ட உடனேயே அவர்கள் வந்தனர். எனவே பௌதீக கண்ணோட்டத்தின் படி இது ஒழுக்கமின்மை, ஆனால் ஆன்மீக கண்ணோட்டத்தின் படி, இதுதான் மிக உயர்ந்த ஒழுக்கம். சைதன்ய மஹாபிரபு கூறுவதைப் போல : ரம்யா காசித்3 உபாஸனா வ்ரஜ-வதூ4-வர்கே3ணா யா கல்பிதா. "ஓ, இந்த விருந்தாவனத்தின் இளம்பெண்களாகிய வ்ரஜ வதூக்களால் அளிக்கப்பட்டதை விட மிகச் சிறந்த வழிபாடு இல்லை." சைதன்ய மகாபிரபு பெண்களைப் பற்றி மிகவும் கண்டிப்புடன் இருந்தவர். தன்னுடைய இல் வாழ்க்கையில் கூட, அவர் பெண்களுடன் எந்த வேடிக்கைப் பேச்சும் சொன்னதில்லை. அவர் நகைச்சுவை மிக்கவர், ஆனால் அதெல்லாம் ஆண்களுடன் மட்டும்தான். அவர் பெண்களுடன் எந்த வேடிக்கைப் பேச்சும் வைத்துக் கொண்டதில்லை. இல்லை. அவர் தன் மனைவி, விஷ்ணு பிரியாவிடம் வேண்டுமானால் நகைச்சுவையுடன் பேசி இருந்திருக்கலாம். ஒருமுறை சச்சி மாதா எதையோ தேடிக் கொண்டிருந்தபோது, அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார் "உன் மருமகள் அதனை எடுத்திருக்கலாம்" அவருடைய மொத்த வாழ்க்கையிலும், நாம் காணும் ஒரே வேடிக்கைப் பேச்சு அதுதான். மற்றபடி அவர் மிகவும் கண்டிப்பானவர். அவர் சன்னியாசியாக இருந்தபோது, அவருக்கு வணக்கங்களை தெரிவிப்பதற்காக கூட எந்தப் பெண்ணும் வர முடியாது. அவர்கள் தூரத்திலிருந்தே வணங்குவார்கள். ஆனால் அவர் கூறுகிறார் : ரம்யா காசித்3 உபாஸனா வ்ரஜ-வதூ4-வர்கே3ணா யா கல்பிதா. அவர் கூறுகிறார், வ்ரஜ வதூக்கள் கொண்டிருந்த மனநிலையை விட எந்த வித வழிபாடும் உயர்ந்த தில்லை. மேலும் வ்ரஜ வதூக்களின் மனநிலை என்ன? அவர்கள் எந்த ஆபத்தை எதிர் கொண்டாலும், கிருஷ்ணரை காதலிக்க ஆசைப்பட்டார்கள். இது ஒழுக்கமின்மை அல்ல. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.