TA/Prabhupada 0956 - நாயின் தந்தை தன்னுடைய குட்டியை பள்ளிக்குச் செல்ல என்று சொல்லமாட்டார் ஏனென்றால் அவை ந
750623 - Conversation - Los Angeles
டாக்டர் மைஸ்: மனதிற்கு எப்படி தெரியும் ஒரு ஆன்மா இருக்கிறது என்று?
பிரபுபாதர்: மனம் தெளிவாக உள்ள பேராசிரியர்களிடம் பாடம் கேட்ட பின்பு. மாணவர்கள் ஏன் உங்களிடம் வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் மனம் தெளிவாக இல்லை. நீங்கள் அவனுக்கு மனோ தத்துவத்தை போதித்து அவன் மனதை தெளிவடையச் செய்யவேண்டும்... உணர்ந்து, யோசித்து, ஆசைப்பட்டு. மனதைப் புரிந்து கொள்வதற்கும் மனதின் உடைய செயல்களைப் புரிந்து கொள்வதற்கும், அதனை எப்படிக் கையாள்வது என்று அறிந்து கொள்வதற்கும், அவர்கள் ஒரு படித்தவர் இடம் வரவேண்டியுள்ளது. அதற்கு கல்வி அவசியம். ஒரு நாயினால் இந்தக் கல்வியை பெற முடியாது, ஆனால் மனிதனால் பெற முடியும். எனவே மனத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்று மனிதன் அறிவது அவசியம். நாய்களும் பூனைகளும் போல பழகுதல் கூடாது. அவன்தான் மனிதன். அவனுக்கு அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும், "ஏன் இது இப்படி நடக்கிறது? இது ஏன் இப்படி நடக்கிறது?" என்று கேட்டு பயில வேண்டும். அதுவே மனித வாழ்க்கை. அவன் அவ்வாறு கேட்கவில்லை என்றால், அந்த கல்வியினை கற்க வில்லை என்றால், அவருக்கும் நாய்க்கும் என்ன வேறுபாடு? அவன் நாயாகவே இருந்து விடுவான். மனித வாழ்க்கை என்னும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி எது என்ன என்று புரிந்து கொண்டு, நாய் நிலைமையில் மட்டும் தன்னை வைத்துக் கொண்டுவிடாமல், வெறுமனே உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம், தற்காப்பு என்று இருந்துவிடக்கூடாது. அதுவே நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு. மனதை எப்படி கட்டுப்படுத்துவது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை என்றால், அவன் ஒரு மனிதனே இல்லை. நாய் எப்போதும் கேட்பதே இல்லை. நாய்க்கு தெரிந்ததெல்லாம், "நான் குறைத்தால் மக்கள் கலங்குவார்கள்." என்பதுதான். "இந்த குறைக்கும் பழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது?" என்று அவன் ஒருபோதும் கேட்பதில்லை. ஏனெனில் அவன் ஒரு நாய், அது அவனால் முடியாது. மனிதனுக்கு தெரியும் "மக்கள் என்னை வெறுக்குகிறார்கள். நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். என் மனது எப்படி கட்டுப்படுத்துவது?" அதுவே மனிதன். அதுவே நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு. வேதக் கோட்பாடு என்னவெனில், "சென்று கேள். உனக்கு மனித வாழ்க்கை கிடைத்திருக்கிறது." "ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இதுவே தருணம்" தத் விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (மு.உ. 1.2.12). நீ இந்த விஞ்ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பினால், சரியான குருவிடம் சென்று பாடங்கள் கற்றுக் கொள். நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைப் போல. "வாழ்க்கையில் நல்ல கல்வி கற்று உயர வேண்டுமானால் பள்ளிகள், கல்லூரிகள் பாடம் படி" அதுவே மனித சமுதாயம். நாயின் தந்தை ஒருபோதும் நாயை "பள்ளிக்கு செல்" என்று சொல்லமாட்டார். ஏனெனில் அவை நாய்கள்.
ஜெயதீர்த்தா: ஆன்மாவின் தன்மையைப் பற்றி எந்த பல்கலைக்கழகமும் தற்போதைய காலகட்டத்தில் கல்வி போதிப்பதாக தெரியவில்லை.
பிரபுபாதர்: எனவே அவன் சொல்கிறான், "நான் நாய் ஆவதால் என்ன தவறு?" என்று. ஏனெனில் கல்வி இல்லை. நாய்க்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு என்று அவன் அறியவில்லை. அதனால் அவன் கேட்கிறான் "நான் நாய் ஆனால் என்ன தவறு? சட்டரீதியாக பாதிக்கப்படாமல் நான் வேண்டியபடி பாலியல் இன்பத்தை பெற முடியும்." இதுவே கல்வியின் உயர்ந்த நிலை.
டாக்டர் மைஸ்: பின்பு மனம் எப்படி அறிகிறது அங்கு ஒரு ஆத்மா இருக்கிறது என்று?
பிரபுபாதர்: அதைத்தான் சொல்கிறேன், நீங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று. இந்த மக்கள் எவ்வாறு ஆன்மாவின் இருப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் கற்பிக்கப்பட்டுள்ளார்கள். பழக்கம் மற்றும் அறிவு. அனைத்தையும் கல்வியின் மூலமாக கற்க வேண்டும். அதனால் தான் வேதம் சொல்கிறது. அந்த அறிவியலை அறிவதற்கு, குரும் ஏவ அபிகச்சேத் நீ ஒரு குருவிடம் ஆசிரியரிடம் செல்ல வேண்டும். எனவே இதற்கு பதில் அங்கு ஆன்மா எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, அதனை அறிந்த ஆசிரியரிடம் நீ செல்ல வேண்டும்.