TA/Prabhupada 0987 - கடவுள் பக்தியில் நீங்கள் பட்டினி கிடப்பீர்கள் என்று நினைக்க வேண்டாம். பட்டினி கிடக்க

Revision as of 07:33, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


720905 - Lecture SB 01.02.07 - New Vrindaban, USA

கடவுள் இந்த அண்டத்தைப் படைத்திருக்கிறார். கடவுளே இந்த அண்டசராசரத்தில் படைத்து கணக்கிடலங்கா பிரபஞ்சத்தையும் படைத்துள்ளார். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. அவர் விரும்பினார் உருவாக்கிவிட்டார். இங்கு வாழ்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் நம்முடன் இங்கு அவர் அனுபவிக்க வரவில்லை. அவருக்கு பிற மற்ற வேலைகள் உள்ளன. இந்த செல்வங்களுக்கு எல்லாம் அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது பகவானுடைய இன்னொரு பண்பு. எனவே இந்த மனித வாழ்க்கை பகவானைப் பற்றி புரிந்து கொள்வதற்கான து விஞ்ஞானபூர்வமாக அறிவுபூர்வமாக. அதுவே ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் நாம் பாகவதம் உபன்யாசம் செய்கிறோம். ஸ்ரீமத் பாகவதத்தின் தொடக்கத்தில் பகவானின் குணம் கூறப்பட்டுள்ளது. ஜன்மாத்யஸ்ய யத: அன்வயாத் இதரதஷ் ச அர்தேஷு அபிஜ்ஞ: ஸ்வராட் (ஸ்ரீ.பா 1.1.1). என்று விளக்கப்பட்டுள்ளது. கடவுள்... கடவுள் எல்லாம் அறிந்தவர் எங்கும் வியாபித்திருப்பவர். அவர் உணர்வுகள் உள்ளவர். உயிரற்ற கல் அல்ல. கடவுள் உணர்வு உள்ளவர் இல்லை என்றால் நபர் இல்லை என்றால் எப்படி பல சக்தி வாய்ந்த மனிதர்களும் உணர்வுள்ள மனிதர்களும் அவரிடம் இருந்து வருகின்றனர்? தந்தை புத்திசாலியாக இல்லையென்றால் அவரது மகன்களும் மகள்களும் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்? ஒரு நாய் புத்திசாலி மனிதனை பெற்றெடுக்க முடியாது புத்திசாலியான மனிதன்தான் புத்திசாலி குழந்தைகளை பெற முடியும். இது நாம் அன்றாடம் காணும் அனுபவம். ஆகவே கடவுளைப் பற்றிய விளக்கம் ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: ஷ்ரிய:. கடவுள் யார் என்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அனைத்திலும் உயர்ந்தவராக ஒரு நபரை நாம் காண முடியுமானால் செல்வத்தில் பலத்தில் அழகில் புகழில் அறிவில் துறவறத்தில், அது கடவுள் தான். ஏதாவது நான்காம் தரமான கடவுளைப் பற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அறிவாளியாக இருந்தால் கடவுளின் அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.... புரிந்து கொள்ள முயலுங்கள்.

இங்கே ஸ்ரீமத் பாகவதத்தில் முதல்தர சமயத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது அது என்ன? கடவுளின் பால் எப்படி அன்பு செலுத்துவது என்று தன்னை கடை பிடிப்போருக்கு கற்றுத் தருவதே அது. நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது? கடவுள் பெரியவர் என்றால், நம் தந்தை அவ்வளவு பெரியவர் என்றால் அவரை நாம் ஏன் நேசிக்கக் கூடாது? ஒருவரை நாம் இங்கு முகஸ்துதி செய்கிறோம் அவருக்கு பணம் இருப்பதால் ஆனால் மிகப்பெரிய பணக்காரர் யார் அவரை நாம் நேசிக்க வேண்டாமா? ஏன்? அதற்கு காரணம் என்ன? ஏகோ பஹூனாம் விததாதி காமான். உண்மையில் அவர் தான் நமக்கு அனைத்தையும் தருகிறார். அனைத்து உயிர்களுக்கும் தேவையான அனைத்தையும் அவரே தருகிறார். எறும்பு தொடங்கி யானை வரை. அப்படி இருக்க நமக்கு ஏன் தரமாட்டார்? நம்முடைய வாழ்க்கையில் கடவுளின் சேவைக்காக நாம் அர்ப்பணிக்கும் பொழுது எறும்புக்கும் யானைக்கும் உணவளிக்கும் கடவுள் நமக்கு ஏன் அளிக்க மாட்டார்? எனவே கடவுள் பக்தி கொண்டால் பட்டினி கிடந்து விடுவோம் என்று நினைக்க வேண்டாம். நீ நிச்சயமாக பட்டினி கிடக்க மாட்டாய். உன் கடமையைச் செய்து கொண்டிரு. கடவுளை நேசித்துக் கொண்டு கடவுளின் செய்தியை பிரச்சாரம் செய்துகொண்டு. மிகவும் சௌக்கியமாக இருப்பாய் நம்பலாம். ஒரு சாதாரண மனிதனிடம் நீ வேலை செய்தால் அவன் உனக்கு சம்பளம் கொடுப்பான் நல்ல சம்பளம். கடவுளுக்கு வேலை செய்தால் நமக்கு சம்பளம் கிடைக்காதா? அது எப்படி? நமக்கு கிடைக்க வேண்டும். நீ உண்மையாக கடவுளை நேசிப்பவராகவும், கடவுளுக்கு சேவை செய்பவராகவும் இருந்தால், உன் பொருளாதார நிலையை பற்றி யோசிக்காதே. அது தன்னால் அமையும். யோக-க்ஷேமம் வஹாம்யஹம் (BG 9.22). என்று பகவத்கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அவர் என்ன எல்லாம் தேவை இருக்கிறதோ அத்தனையும் தானே கொடுக்கிறார் ஒரு தந்தையை போல. தன் பெற்றோரிடம் முழுவதுமாக சார்ந்திருக்கும் குழந்தைக்கு அவர்கள் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்கின்றனர். குழந்தை கேட்க வேண்டியதில்லை ஏனென்றால் அவனால் பேசக்கூட முடியாது. அவன் வெறுமனே கடவுளை சார்ந்து இருக்கிறான் பெற்றோரைச் சார்ந்திருக்கிறான். நீ வெறுமனே கடவுளை சார்ந்து இருந்தால் பொருளாதாரப் பிரச்சனை என்ற கேள்விக்கே இடமில்லை. நம்பு. இது தான் பொது அறிவு.

ஆக இப்போது கடவுளின் பக்தர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடவுளை மக்கள் ஒதுக்குகின்றனர். சிலர் கடவுள் இறந்துவிட்டார் என்கின்றனர் சிலர் அயோக்கியர்களை கடவுளாக ஏற்றுக் கொள்கின்றனர். சிலர் தங்களை கடவுளாக பிரகடனம் செய்கின்றனர் இல்லை. கடவுளை விஞ்ஞானரீதியாக புரிந்துகொண்டு பக்தனாகுங்கள். பகவானை நேசிப்பவராகுங்கள் உங்கள் வாழ்க்கை வெற்றி அடையும். அதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். "என் கடவுள்", "உன் கடவுள்", "என் சமயம்", "உன் சமயம்" என்றெல்லாம் இல்லை. கடவுள் ஒன்றுதான் சமயமும் ஒன்றுதான். அது என்ன சமயம்? கடவுளை நேசித்தல். அவ்வளவுதான். அதைத் தவிர வேறு சமயம் இல்லை. இதுதான் சமயம். ஆகவே கடவுள் வந்து சொல்கிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (ப.கீ 18.66). இதுவே சமயம்.