TA/Prabhupada 0986 - கடவுளை விட புத்திசாலியாக ஒருவரும் இருக்க முடியாது



720905 - Lecture SB 01.02.07 - New Vrindaban, USA

உங்கள் மேலைநாடுகளில் இயேசு கிறிஸ்து தன் வாழ்க்கையை கடவுளுக்காக அர்ப்பணித்தது போல அவர் தவறான ஒன்றை பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் கடவுளின் பக்தர் அவர். அவர் மக்களுக்கு பிரச்சாரம் செய்தார். கடவுளின் நாடு என்று ஒன்று உண்டு நீ கடவுளை நேசித்து கடவுளின் நாட்டிற்குச் செல் என்று. எளிய உண்மை. அதுவே மனித வாழ்வின் வேலை. மனித வாழ்க்கை கடவுளைப் புரிந்து கொள்வதற்காகவே கொடுக்கப்பட்டது. நாம் கடவுளின் அங்கம் ஆனால் அதனை மறந்து விட்டோம். ஒரு தவளையை போல இந்த உதாரணத்தை நான் பலமுறை கூறியிருக்கிறேன். ஒரு மனிதன் செல்வச் செழிப்பு மிக்க தந்தைக்கு பிறந்தவன் ஆனால் எப்படியோ வீட்டை விட்டு வெளியேறி எங்கோ அலைந்து கொண்டிருக்கிறான் உங்கள் நாட்டில் இந்த உதாரணம் நன்றாக பொருந்தும். இங்கு பல இளைஞர்கள் பணக்கார தந்தையையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி வீதியில் வாழ்கின்றனர். அதை நான் பார்த்திருக்கிறேன். ஏன்? என்ன காரணமாகவும் இருக்கலாம் ஆனால் அவன் வீதியில் வாழத் தேவையில்லை. ஏனெனில் அவனுக்கு ஒரு பணக்கார தந்தையும் பணக்கார நாடும் அமெரிக்கா பணக்கார நாடு அமைந்திருக்கிறது. அதுபோலவே அவன் குழப்பமடைந்து கடவுளை விட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பொழுது மிகச் செல்வந்தரான தந்தை - பகவானை விட பெரிய செல்வந்தர் யார் இருக்க முடியும்? கடவுள் என்றால் மிகப்பெரிய செல்வந்தர். அவரை விட பெரிய செல்வந்தர் யாருமில்லை. அதுவே கடவுளுக்கான இன்னொரு விளக்கம்.

ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய
வீர்யஸ்ய யஷஸ: ஷ்ரிய:
ஜ்ஞான-வைராக்யயோஷ் சைவ
ஷண்ணாம் பக இதீங்கனா
(விஷ்ணு புராண 6.5.47)

பாக என்றாள் செல்வம். யார் ஒருவருக்கு ஆறு விதமான செல்வங்களும் உள்ளனவோ இதனை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். பௌதிக உலகில் இருப்பது போல் ஒரு மனிதன் செல்வந்தர் என்றால் அவன் அனைவரையும் ஈர்க்கிறான். அனைவரும் அவனைப் பற்றி பேசுகின்றனர். இவன் முதல்தர முட்டாளாக இருந்தாலும் அவனிடம் பணமிருந்தால் அவனைப் பற்றி அனைவரும் பேசுவர். இந்தக் காலத்தில் அது என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற எதையும் ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. எப்படியாவது ஒருவர் பணக்காரர் ஆனால், அவர் ஒரு பிரபல புள்ளி ஆகிவிடுகிறார். ஆக கடவுள் மிகச் செல்வந்தராக இருக்க வேண்டும். இங்கு இந்த பௌதிக உலகில், "நான் அவரைவிட பணக்காரன்" என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம். ஆனால் நம்மைவிட பணக்காரர் ஒருவர் இருக்கிறார். "என்னை விட பணக்காரர் ஒருவருமில்லை" என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. நம்மை விட செல்வதில் குறைந்தவரை காண முடியும். நம்மை விட அதிக பணக்காரர்களைக் காண முடியும். ஆனால் கடவுளிடம் பார்த்தால் அவரை விட பணக்காரர் ஒருவரை பார்க்க முடியாது. \ ஆகவே கடவுள் உயர்ந்தவர் எனப்படுகிறார். அதுபோல்தான் ஐஸ்வர்யா மட்டுமல்ல ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய சக்தியிலும். ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: புகழிலும் பெயரிலும். அனைவரும் போல நீ ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் நான் வேறொன்றை ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரியும் கடவுள் உயர்ந்தவர் என்று. அதுவே அவருடைய புகழ். ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: ஸ்ரீ ஸ்ரீ என்றால் அழகு. கடவுளே மிக அழகானவர். கிருஷ்ணரைப் பாருங்கள் இந்த விக்ரகத்தை பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று. கடவுள் எப்போதும் இளமையானவர். வயதானவர் அழகாக இருக்க முடியாது. அது பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச (பி.ச 5.33) ஆத்யம் புராண- அவரே மிக முதன்மையான மனிதர் என்பதே அதன் பொருள் மிகப்பழமையான அவர் ஆனால் நவ யௌவ்வனம் 16 அல்லது 20 வயது கொண்ட ஒரு அழகிய சிறுவனைப் போல. அதுவே அழகு மிகச்சிறந்த அழகு. மிகச் சிறந்த ஞானம். கடவுளைவிட சிறந்த ஞானவான் யாருமில்லை. இவையெல்லாம் பராசர முனிவர் வியாச தேவரின் தந்தை அவரால் கூறப்பட்ட விளக்கங்கள். ஐஷ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: ஷ்ரிய: (விஷ்ணு புராண 6.5.47), ஜ்ஞான-வைராக்ய அதேசமயம் அனைத்தையும் துறந்தவர்.