TA/Prabhupada 1000 - மாயை எப்பொழுதும் உன்னை தன் வசப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறா
730406 - Lecture SB 02.01.01-2 - New York
பிரபுபாதர்: இது ஒரு மகத்தான விஞ்ஞானம். மக்கள் இதை அறிவதில்லை. எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் விஞ்ஞானபூர்வமானது, அங்கிகாரம் பெற்றது. ஆக மக்களுக்கு இதை விளக்குவதே எங்கள் வேலை, அதே சமயம் நாமும் தெளிவாக இருக்கவேண்டும். மாயையின் இருளில் மீண்டும் கவரப்படாமல் இருக்கவேண்டும். அதில் நாம்... மாயை கவரப்படாமல் இருக்க, உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்ளவேண்டும். மாம் ஏவ யே ப்பத்யந்தே மாயாம் ஏதாம் தறந்தி தே (பகவத்-கீதை 7.14). கிருஷ்ண பக்தியின் கொள்கைகளை நீங்கள் மிக கவனமாக பின்பற்றினால், மாயையால் உங்களை நெருங்க முடியாது. அது தான் இதுக்கு ஒரே தீர்வு. இல்லாவிட்டால் மாயை எப்பொழுதும் உன்னை தன் வசப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறாள். ஆனால் நீ கிருஷ்ண உணர்வில் கவனமாக இருந்தால் மாயையால் ஒன்றும் செய்யமுடியாது. மாம் ஏவ யே ப்பத்யந்தே. தைவீ ஹி ஏஷா குண-மயீ மம மாயா துரத்யயா (பகவத்-கீதை 7.14). மாயையின் பிடியிலிருந்து விடுபடுவது மிக கடினமானது. மிகவும் கடினமானது. ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், மாம் ஏவ யே ப்பத்யந்தே மாயாம் ஏதாம் தறந்தி தே (பகவத்-கீதை 7.14) ஒருவன் எப்பொழுதும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களை கவனம் சிதறாமல் பின்பற்றினால்... ஆகையால் இருபத்தி நான்கு மணி நேரமும் கிருஷ்ணரைப் பற்றி நினைப்பதே நம் இயக்கத்தின் திட்டம். 'ஸததம். ஸததம் சின்தயோ க்ருஷ்ண.' கீர்த்தனீய: ஸதா ஹரிஹி (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.31). இவை தான் பரிந்துரைகள். ஆக நாம் கிருஷ்ணரைப் பற்றி நினைத்திருந்தாலே... ஒருவேளை உன்னால் வேறு எதுவும் செய்ய முடியாவிட்டால், அவரை நினைத்துக் கொள். அதுவே தியானத்தின் மிகச்சிறந்த பக்குவமான நிலையாகும். ஆகையால் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபியுங்கள், கிருஷ்ணருடன் பரிந்துரைத்த பல வழிகளில் தொடர்பு கொள், பிறகு நீ பாதுகாப்பாக இருக்கலாம். மாயையால் உன்னை நெருங்க முடியாது. இவ்வாறு நாம் நமது காலத்தை எப்படியாவது நிகழ்த்தினால் மற்றும் மரண சமயத்தில் கிருஷ்ணரை நினைத்திருந்தால், நம் முழூ வாழ்க்கையும் வெற்றியார்ந்ததாகும். மிக நன்றி. பக்தர்கள்: நன்றி, பிரபுபாதருக்கு எல்லா புகழும் சேரட்டும்!