TA/Prabhupada 0999 - ஆத்மவித் என்றால் ஆத்மாவை அறிந்தவர் என்று பொருள்



730406 - Lecture SB 02.01.01-2 - New York

இப்போது இந்த கிருஷ்ண-சம்பிரஷ்ணா, கிருஷ்ணா பற்றிய இந்த கேள்விகள் மற்றும் பதில்கள், நாம் சாதாரணமாகக் கேட்டால் போதும், அது சைதன்யா மகாபிரபுவின் பரிந்துரை. ஸ்தானே ஸ்திதா ஸ்ருதி-கதாம் தனு-வான்-மனோபீர். நீங்கள் உங்கள் நிலைப்பாட்டிலேயே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்க முயற்சிக்கிறீர்கள். அது பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இந்த கோவிலில் வந்து கிருஷ்ணா பற்றி கேட்க முயற்சி மட்டும் செய்யுங்கள். ஸ்தானே ஸ்திதா ஸ்ருதி-கதாம் தனு-வான் . அது சுத்திகரிக்கும். கிருஷ்ண-கீர்த்தனா, கிருஷ்ணரின் பெயர் மிகவும் சக்தி வாய்ந்தது, "கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று கேட்டால் நீங்கள் சுத்திகரிக்கப்படுவீர்கள். நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். ஆகையால், வரியான் ஈஷ தே பிரஷ்னா கிருதோ லோக-ஹிதம் நிருப, ஆத்மவித்-சம்மதா (ஸ்ரீ பா 2.1.1) என்று கூறப்படுகிறது. ஆத்மவித். நான் புகழ்ந்து பேசுகிறேன் என்று அல்ல. ஆத்மவித்-சம்மதா. தன்னை உணர்ந்த எல்லா மகான்களும், ஆத்மவித். ஆத்மவித் என்றால் ஆத்மாவை அறிந்தவர் என்று பொருள். பொது மக்களுக்கு ஆத்மா தெரியாது. ஆனால் ஆத்மவித் என்றால் ஆத்மாவை அறிந்தவர், அஹம் பிரம்மாஸ்மி, "நான் ஆத்மா, நான் இந்த உடல் அல்ல", இந்த ஆத்மா-தத்வாவைப் பற்றி நன்கு அறிந்தவர். ஆகவே, இந்த ஆத்மா-தத்வாவை ஒருவர் அறிந்து கொள்ளாவிட்டால், அவர் என்ன செய்கிறாரோ, அவர் தோற்கடிக்கப்படுகிறார். அவர்கள் பார்க்கிறார்கள் ... பொதுவான மக்கள், "நான் இந்த பெரிய வானளாவிய கட்டிடத்தை கட்டிக்கொண்டிருக்கிகிறேன். நான் வெற்றி பெற்றவன். நான் ரோத்ஸ்சைல்ட் ஆகிவிட்டேன், ஃபோர்டாக மாறிவிட்டேன்" என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது ஆத்மா-வித் அல்ல. ஆத்மா-வித் ... அவர் பொருள் ரீதியாக செழிப்பானவர் என்பதால், அது ஆத்மா-வித் என்று அர்த்தமல்ல. அது அடுத்த வசனமான அபஷ்யதாம் ஆத்ம-தத்வம் (ஸ்ரீ பா 2.1.2) இல் விவாதிக்கப்படும் ஒரு பொருள். அவரது ஆத்மாவைப் பார்க்க முடியாத ஒருவர்: க்ருஹேசு க்ருஹ-மெதினாம். இந்த பொருள்முதல்வாத வாழ்க்கை முறையில் க்ருஹேசு க்ருஹ-மெதினாம் என்பதில் அவை கச்சிதமானவை. அவர்களின் நிலை மிகவும் ... உண்மையில் இது முழு உலகத்தின் நிலை. அவர்கள் ஆத்மா-வித் அல்ல. அவர்கள் ஆத்ம-தத்வத்தை விசாரிப்பதில்லை; எனவே அவர்கள் புத்திசாலித்தனம் குறைவாக உள்ளனர். விமான நிலையத்தில் நான் சொன்னேன் , நாங்கள், எங்கள் பிரச்சாரம் மக்களை இன்னும் புத்திசாலித்தனமாக்குவது என்று. அவர்கள் அதை மிக நேர்த்தியாக எடுத்திருக்க மாட்டார்கள். "இந்த ஏழை சுவாமி எங்களை புத்திசாலி செய்ய வந்துவிட்டார்" என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அதுதான் உண்மை. அதுதான் உண்மை. இது புத்திசாலித்தனம் அல்ல, அதாவது, வாழ்க்கை பற்றிய உடல் சார்ந்த கருத்து, "நான் உடல் சுகங்களுக்காக என் வாழ்நாள் முழுவதையும் கெடுக்கிறேன், பின்னர் இந்த உடலைக் விட்ட பிறகு, நான் ஒரு பூனையாகவும் நாயாகவும் மாறுகிறேன்." அப்படியானால் அது என்ன புத்திசாலித்தனமா? அது மிகவும் நல்ல புத்திசாலித்தனமா?

உண்மையில் அது நடந்தது. நான் விவாதிக்க விரும்பவில்லை. எங்கள் ஆன்மீக சகோதரர், ஸ்ரீதரா மகாராஜா கூறுகிறார் ... அவர் தனது கட்டுரையிலிருந்து பேசிக் கொண்டிருந்தார், எங்கள் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர், இந்தியாவில், அவர் இப்போது ஸ்வீடனில் ஒரு நாயாக பிறவி அடைந்துள்ளார் . இது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சில முக்கிய மனிதர்களைப் பற்றி விசாரணைகள் இருந்தன, அவர் பதிலளித்துள்ளார், அதற்கு ஒரு பதில், "அத்தகைய குறிப்பிட்ட அரசியல்வாதி, அவர் இப்போது ஸ்வீடனில் ஒரு மனிதனின் இரண்டு நாய்களில் ஒருவராக இருக்கிறார்," என்று. நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே இந்த நேரத்தில், இந்த வாழ்க்கையில் நான் மிகப் பெரிய மனிதனாகவோ, அல்லது பெரிய அரசியல்வாதியாகவோ, பெரிய இராஜதந்திரியாகவோ, பெருவணிகராகவோ மாறலாம், ஆனால் , உங்கள் மரணத்திற்குப் பிறகு அடுத்த வாழ்க்கை, அது ... உங்கள் பெரிய, பௌதிக மகத்துவம் உங்களுக்கு உதவாது. அது நீங்கள் செய்த வேலையைப் பொருத்தது. மேலும் இயற்கை உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை உடலை வழங்கும், நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக, நீங்கள் மறந்து விடுவீர்கள். அதுவே இயற்கையால் வழங்கப்படும் சலுகை. நம்முடைய கடந்த பிறவியில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை நினைவில் கொள்ளாதது போல. எனது கடந்தகால வாழ்க்கையில் நான் ஒரு ராஜாவாக இருந்தேன் என்று நினைவில் வைத்துக் கொண்டால், இப்போது நான் ஒரு நாயாகிவிட்டேன் என்றால், அது எவ்வளவு துன்பமாக இருக்கும். எனவே இயற்கையின் சட்டப்படி ஒருவர் மறந்து விடுகிறார். மரணம் என்றால் இந்த மறதி என்று பொருள். மரணம் என்றால் இந்த மறதி.