TA/Prabhupada 0549 - இந்திரியங்களை அடக்குவதே யோகத்தின் உண்மை நோக்கமாகும்

Revision as of 07:23, 28 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

தாமல கிருஷ்ணா: "... புலன்களில், ஒரு நபர் பந்தத்தை வளர்த்துக் கொள்கிறார், அத்தகைய பந்தத்திலிருந்து காமம் உருவாகிறது, காமத்திலிருந்து கோபம் எழுகிறது (BG 2.62)." பொருளுரை: "கிருஷ்ண உணர்வு இல்லாத ஒருவர் பௌதீக ஆசைகளுக்கு உட்படுத்தப்படுகிறார் புலன்களின் விஷயங்களைப் பற்றி சிந்திக்கும்போது. புலன்களுக்கு உண்மையான ஈடுபாடு தேவைப்படுகிறது, மேலும் அவை இறைவனின் ஆழ்நிலை அன்பான சேவையில் ஈடுபடவில்லை என்றால், அவர்கள் நிச்சயமாக பௌதீக சேவையில் ஈடுபடுவார்கள். "

பிரபுபாதர்: ஆம். யோகா அமைப்பின் ரகசியம் இங்கே தான் உள்ளது. யோக இந்திரிய -சம்யமா. யோகாத்தின் உண்மையான நோக்கம் புலன்களைக் கட்டுப்படுத்துவதாகும். நமது பௌதீக நடவடிக்கைகள் என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் அல்லது இன்பத்தில், உணர்வை ஈடுபடுத்துவதாகும். அதுதான் நமது பௌதீக ஈடுபாடு. யோகா அமைப்பு என்றால் நீங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றும் பௌதீக இன்பம், அல்லது பௌதீக சுகம் மற்றும் வலிகள் ஆகியவற்றிலிருந்து புலன்களைப் பிரிக்கவும், உங்களுக்குள்ளேயே இருக்கும் பரமாத்மா - விஷ்ணுவை பார்ப்பதில், கவனம் செலுத்துங்கள். அதுதான் யோகத்தின் உண்மையான நோக்கம். இன்றைய உலகில், யோகத்தைப் பற்றி தவறான புரிதல் நிலவுகிறது ... நிச்சயமாக, ஆரம்பத்தில் வெவ்வேறு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன, உட்காரும் தோரணை, மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக. ஆனால் அவையே யோகத்தின் லட்சியமில்லை. பௌதீக ஈடுபாட்டை நிறுத்தி, ஆன்மீக ஈடுபாட்டில் கவனத்தை செலுத்துவதே அதன் நோக்கம். எனவே இங்கே அது விளக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கவும்.

தாமல கிருஷ்ணா: "பௌதீக உலகில் சிவன், பிரம்மா உட்பட அனைவரும் - பரலோக கிரகங்களில் உள்ள மற்ற தேவதூதர்களைப் பற்றி மட்டும் கூறவில்லை - எல்லோரும் புலன்களின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள். "

பிரபுபாதர்: புலன்கள், ஆம்.

தாமல் கிருஷ்ணா: "புலன்கள். பௌதீக வாழ்வின் இந்த புதிரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி கிருஷ்ண உணர்வுடையவராக மாறுவதுதான். "

பிரபுபாதர்: வேத இலக்கியங்களிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டது ... நிச்சயமாக அவர்கள் நமக்குக் காட்டுகிறார்கள், சிவபெருமான், பிரம்மா. அவர்கள் சில சமயங்களில் புலன்களால் ஈர்க்கப்பட்டனர். பிரம்மாவைப் போலவே, அவரது மகள் சரஸ்வதி... சரஸ்வதி அழகின் மறு உருவம் , மிக சிறந்த நளினதுடன் திகழ்ந்தாள், பெண்மையில் மிகச்சிறந்தவளாக கருத்தப்பட்டாள். எனவே பிரம்மா தனது மகளின் அழகில் மயங்கினார். பிரம்மா போன்ற தேவதைகள் கூட சில சமயங்களில் சலனமடைவார்கள் என்பதற்கான உதாரணத்தை நமக்குக் காண்பிப்பதற்காக. இந்த மாயா மிகவும் வலுவானது. "அவள் என் மகள்" என்பதை கூட அவர் மறந்துவிட்டார். இதை நிவர்த்தி செய்ய தவம் செய்து, பின்னர் பிரம்மா உடலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்த கதைகள் ஸ்ரீமத்- பாகவதத்தில் உள்ளன. இதேபோல், சிவபெருமான், கிருஷ்ணர் அவருக்கு முன் மோகினி- மூர்த்தியாக தோன்றியபோது ... மோகினி-மூர்த்தி...மோகினி என்றால் மிக சிறந்த பேரழகி. சிவபெருமானும் அவளுக்குப் பின்னால் பைத்தியமாக அலைந்தார். எனவே அவள் எங்கு சென்றாலும், சிவ பெருமான் துரத்திக் கொண்டிருந்தார். மேலும் மோகினி-மூர்த்தியைத் துரத்தும்போது, ​​சிவபெருமானுக்கு வெளியேற்றங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது எனவே இந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன. இது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளபடி, தைவீ ஹை ஈஸா குணமயீ மம மாயா துரத்யயா (BG 7.14). இந்த அழகு, பெண் அழகு மூலம் முழு பௌதீக ஆற்றலும் நம் ஒவ்வொருவரையும் மயக்கும். உண்மையில், அழகு என்று ஒன்றுமில்லை. அது மாயை. சங்கராச்சார்யா கூறுகிறார், "நீங்கள் இந்த அழகுக்குப் பின் இருக்கிறீர்கள், ஆனால் இந்த அழகை நீங்கள் ஆராய்ந்தீர்களா? அழகு என்றால் என்ன? " ஏதத் ரக்த-மாம்ச- விகாரம். இது எங்கள் மாணவர்களான - கோவிந்த தாசீ மற்றும் நர-நாராயணா போன்றவர்கள் பாரிஸின் பிளாஸ்டர் கொண்டு சிலை செய்வது போன்றது. அந்த நேரத்தில், எந்த ஈர்ப்பும் இல்லை. ஆனால் இந்த பாரிஸின் பிளாஸ்டர் எப்போது நன்றாக வர்ணம் பூசப்படுமோ, அது மிகவும் கவர்ச்சியாக உருவெடுக்கும். இதேபோல், இந்த உடல் இரத்தம் மற்றும் தசைகள் மற்றும் நரம்புகளின் கலவையாகும். உங்கள் உடலின் மேல் பகுதியை வெட்டி, அதன் உள்ளே பார்த்தால், அது ஒரு வகையான அருவருப்பான பயங்கரமான விஷயமாகும். ஆனால் வெளிப்புறமாக மாயையின் வண்ணத்தால் வரையப்பட்டிருக்கிறது, ஓ, இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்று தோன்றும். அது நம் உணர்வுகளை ஈர்க்கிறது. இதுதான் நமது அடிமைத்தனத்திற்கு காரணம்.