TA/Prabhupada 0107 - மறுபடியும் எம்மாதிரியான பௌதிக உடலையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்

Revision as of 19:49, 4 December 2015 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0107 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 4.17 -- Bombay, April 6, 1974

அது செல்வந்தர் உடலோ அல்லது ஏழையின் உடலோ, அது ஒரு பொருட்டல்ல. எல்லோரும் இந்த மூன்று விதமான துயரம் மிகுந்த நிலையை வாழ்க்கையில் அனுபவிக்க நேரும். (தைவைட்) தொற்று நச்சுக் காய்ச்சல் இருக்கும் போது அது வேறுபடுத்துவதில்லை அதாவது "இங்கு ஒரு செல்வந்தர் உடல் இருக்கிறது. நான் அவருக்கு குறைவான வலியை கொடுப்பேன்." இல்லை. தொற்று நச்சுக் காய்ச்சல் வரும் போது உங்கள் உடல் செல்வந்தர் உடலாகவோ அல்லது ஏழையின் உடலாகவோ இருந்தாலும் நீங்கள் ஒரே மாதிரியான வேதனையையே அனுபவிப்பீர்கள். நீங்கள் உங்கள் தாயின் கருப்பையில் இருக்கும் போதும், நீங்கள் ஒரே மாதிரியான துன்பத்தை அனுபவிப்பீர்கள், நீங்கள் மஹாராணியின் கருப்பையில் அல்லது ஒரு சக்கிலியர் மனைவியின் கருப்பையில் இருந்தாலும் ஒன்றே. அந்த இறுக்கமான சூழ்நிலை. ஆனால் அவர்களுக்கு தெரியாது. ஜன்ம-ம்ருத்யு-ஜரா. பிறப்பின் காலக்கட்டத்தில், அங்கு பலவிதமான துன்பங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு மேலும் முதுமையின் நடைமுறையில் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. ஒரு செல்வந்தரோ அல்லது ஏழையோ, நாம் முதுமையடையும் போது, நாம் பல நோயினால் பலவிதத்தில் துன்பமடைவோம்.

அதேபோல் ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (BG 13.9) ஜராவும் வ்யாதியும் இன்னும் ம்ருத்யு. ஆகையால் இந்த பௌதிக உடலின் துன்பமான நிலையை நாம் உணரவில்லை. சாஸ்திரம் கூறுகிறது, "எந்த பௌதிக உடலையும் மீண்டும் ஏற்றுக் கொள்ளாதிர்கள்." ந சாது மன்யே: "நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த பௌதிக உடலை பெறுவது, இது நல்லதல்ல." ந சாது மன்யே யதா ஆத்மன:. ஆத்மன, ஆத்மா இந்த பௌதிக உடலின் கூண்டில் அடைபட்டுள்ளது. யதா ஆத்மனொயம் அஸன்ன அபி. தற்காலிகமானதானாலும், நான் இந்த உடலை பெற்றிருக்கிறேன். லெஸதாஸ தெஹ. ஆகையால் மறுபடியும் மற்றொரு ஜட உடலைப் பெறும் சோகமான நிலையை நாம் நிறுத்த வேண்டுமானால், கர்மா என்றால் என்ன, விகர்மா என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதுதான் கிருஷ்ணரின் ஆலோசனை. கர்மனோ ஹ்யபி போதவ்யம் போதவ்யம் ச விகர்மண: அகர்மணஸ்ச போதவ்யம். அகர்மண என்றால் அங்கே எதிர்ச்செயல் இல்லை. எதிர்ச்செயல். கர்மா, நீங்கள் நல்ல காரியங்கள் செய்தால், அதற்கு எதிர்செயல் உண்டு. அதற்கு நல்ல உடல் இருக்கிறது, நல்ல கல்வி, நல்ல குடும்பம், நல்ல சொத்துக்கள். இதுவும் நன்றாக உள்ளது. நாம் அதை நல்லதாக எடுத்துக் கொள்வோம். நாம் இறைவனின் விண்ணுலகத்திற்கு செல்ல விரும்புகிறோம். ஆனால் அவர்களுக்கு தெரியாது அதாவது விண்ணுலகத்திலும் ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி இருக்கிறது என்று. ஆகையினால் கிருஷ்ணர் நீங்கள் விண்ணுலகத்திற்கு போக பரிந்துரைக்கவில்லை. அவர் கூறுகிறார், ஆப்ரஹ்ம புவனால்லோகா: புன்ராவர்தினோ'ர்ஜுன (BG 8.16). நீங்கள் ப்ரமலோகத்திற்கே சென்றாலும், இருப்பினும் மீண்டும் மறுபிறவி தொடரும். யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (BG 15.6). யத் கத்வா ந நிவர்தந்தே. ஆனால் அங்கே ஒரு தாம இருக்கிறது என்று நமக்கு தெரியாது. எவ்வாறெணினும், நம்மை நாம் அந்த தாமுக்கு மேம்படுத்திக் கொண்டால், பிறகு ந நிவர்தந்தே, யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம. மற்றொரு இடத்தில் கூறப்படுகிறது, த்யக்த்வா தெஹம் புனர்ஜன்ம நைதிமாமேதி (BG 4.9).

ஆகையால் மக்களுக்கு கிருஷ்ணர், அல்லது முழுமுதற் கடவுள் பற்றி தகவல் இல்லை, அவருக்கு அவருடைய இடம் உள்ளது மேலும் எவரும் செல்லலாம். ஒருவர் எவ்வாறு செல்ல முடியும்?

yānti deva-vratā devān
pitṟn yānti pitṛ-vratāḥ
bhūtāni yānti bhūtejyā
yānti mad-yājino 'pi mām
(BG 9.25)

"ஒருவர் என்னை வழிபடும் ஒரு பக்தராக, என் வேலை, பக்தி யோகா, அவர் என்னை வந்தடைவார்." மற்றொரு இடத்தில் அவர் கூறுகிறார், பக்த்யா மாமபிஜானாதி யாவான்யஷ்ச்சாஸ்மி (BG 18.55).

ஆகையால் நம்முடைய ஒரே வேலை கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதாகும். யக்ஜ்னார்தெ கர்மா. இதுதான் அகர்மணா: இங்கு சொல்லப்படுவதாவது, அகர்மண, அகர்மண: ஹ்யபி போதவ்யம், அகர்மணஸ்ச போதவ்யம். அகர்ம என்றால் எதிர் நடவடிக்கையின்றி. இங்கு, நாம் புலன்களின் திருப்திக்காக செயல்பட்டால், அதன் எதிர் நடவடிக்கை யாதெனில், எவ்வாறு என்றால் ஒரு போர் வீரன் கொல்லுகிறார். அவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கிறது. அதே போர் வீரன், வீட்டிற்கு வந்தபின், அவர் மனிதனை கொன்றால், அவர் தூக்கிலிடப்படுகிறார். ஏன்? அவர் நீதிமன்றத்தில் கூறலாம், "ஐயா, நான் போர்க்களத்தில் சண்டையிட்ட போது, நான் பலரைக் கொன்றேன். எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்போது ஏன் என்னை தூக்கிலிடுகிறிர்கள்?" "ஏனென்றால் உன் சொந்த புலன் திருப்திக்காக இதைச் செய்தாய். மேலும் அதை நீ அரசாங்க ஒப்புறுதியால் செய்தாய்."

ஆகையினால் எந்த கர்மாவாயினும், கிருஷ்ணரின் திருப்திக்காக செய்தால், அது அகர்ம, அதற்கு எதிர் நடவடிக்கை இல்லை. ஆனால் எதையும் உங்கள் சொந்த புலன் திருப்திக்காக செய்தால், அதன் பதில் விளைவின் நடவடிக்கையை, நல்லதோ கெட்டதொ நீங்கள் துன்புறுவீர்கள். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார்,

karmaṇo hy api boddhavyaṁ
boddhavyaṁ ca vikarmaṇaḥ
akarmaṇaś ca boddhavyaṁ
gahanā karmaṇo gatiḥ
(BG 4.17)

எம்மாதிரியான செயல் நீங்கள் செய்ய வேண்டும் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் கடினம்.ஆகையினால் நாம் கிருஷ்ணரிடமிருந்து, சாஸ்திரத்திலிருந்து, குருவிடமிருந்து வழிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா.