TA/Prabhupada 0094 - நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்

Revision as of 09:47, 30 July 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0094 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 1.20 -- London, July 17, 1973

தெய்வபக்தியற்ற வாழ்க்கையில் பகவானை பற்றி விசாரிக்கவோ அல்லது புரிந்துக் கொள்ளவோ முடியாது. நாம் பலமுறை இந்த செய்யுளை மீண்டும் மீண்டும் கூறியுள்ளோம், யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம் தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ருதா: (ப.கீ. 7.28). பாபீஸ், பாவிகள், இவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு புரிந்தது, நினைவில் அதாவது "கிருஷ்ணர் பகவானாவார்; ஆகையால் நாமும் பகவானே. அவர் ஒரு சாதாரண மனிதர், ஒருவேளை சிறிது திறமைமிக்கவர், சரித்திர புகழ் பெற்றவர். இருப்பினும் அவர் ஒரு மனிதர். நானும் ஒரு மனிதர். ஆகையால் நான் ஏன் பகவானாக இருக்கக் கூடாது?" இதுதான் அபக்தர்கள், பக்தர் அல்லாதவர்கள், பாவிகளின் இறுதி முடிவு. ஆகையால் யாராவது தன்னை பகவான் என்று பிரகடனம் செய்தால், உடனடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர் ஒரு மகாபாவி என்று. மேலும் அவருடைய அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர் முதல்ரக மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இது ஒரு சோதனை. வேறுவிதமாய் ஒருவரும் நான் பகவான் என்று கூறமாட்டார்கள், இது பொய்யான பிரதிநிதித்துவம். ஒருவருமில்லை. தெய்வபக்தியுள்ள எந்த மனிதரும் கூறமாட்டார். அவருக்குத் தெரியும். "நான் யார்? நான் ஒரு சாதாரண மனித பிறவி, நான் எவ்வாறு பகவானின் நிலைப்பாட்டில் உரிமைக் கோர முடியும்?" போக்கிரிகளின் மத்தியில் அவர்கள் சிறந்தவர்களாகிறார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது போல், ஸ்வ-வித்-வராஹோஷ்த்ர-கரை: (ஸ்ரீ.பா. 2.3.19). அந்த செய்யுள் என்ன? உஷ்த்ர-கரை: ஸம்ஸ்துத: புருஷ: பசு:. இந்த உலகில் நாம் பார்க்கிறோம், தரத்தில் மேலான மனிதர்கள் அங்கே அதிகமாக இருக்கிறார்கள், மேலான மனிதர்கள் என பொதுவாக அழைக்கப்படும் அவர்கள் பொது மக்களால் அதிகமாக போற்றப்படுகிறார்கள். ஆகையால் பாகவதத்தில் கூறப்படுகிறது, அதாவது பக்தர்களாக இல்லாதவர்கள் யாராயினும், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபிக்காதவர்கள், அவர் அயோக்கியர்களின் கணிப்பில் மிகவும் மேலானவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு மிருகத்தை தவிர வேறொன்றுமில்லை. மிருகம். ஆகையால் ஸ்வ-வித்-வராஹோஷ்த்ர-கரை:. "ஆகையால் இத்தகையவரை மேலான மனிதர் என்று எவ்வாறு கூறலாம். நீங்கள் அந்த மிருகம் என்று கூறுகிறீர்கள்." எங்களுடைய வேலை பிரதிப்பலன் எதிர்பார்க்காத பணி. பக்தர் அல்லாத எந்த மனிதரானாலும், அவரை அயோக்கியர் என்று கூறுவோம். நாங்கள் பொதுவாக கூறுகிறோம். அது மிகவும் குரூரமான வார்த்தை, ஆனால் நங்கள் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அவர் கிருஷ்ணர் பக்தர் அல்லர் என்று தெரிந்த உடனடியாக, அவர் அயோக்கியர் என்போம். நாம் எவ்வாறு கூறுகிறோம்? அவர் எங்கள் எதிரி அல்ல, ஆனால் நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரால் கூறப்பட்டது. நாம் உண்மையில் கிருஷ்ணர் உணர்வோடு இருந்தால், பிறகு நம் வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மறுபடியும் ஒப்பித்தலேயாகும். அவ்வளவுதான். கிருஷ்ணரின் பிரதிநிதிக்கும் பிரதிநிதியற்றவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? கிருஷ்ணரின் பிரதிநிதி வெறுமனே கிருஷ்ணர் கூறியவற்றையே மறுபடியும் ஒப்பிப்பார். அவ்வளவுதான். அவர் பிரதிநிதியாகிறார். அதற்கு அதிக தகுதிகள் தேவையில்லை. நீங்கள் வெறுமனே உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் ஒப்புவியுங்கள். கிருஷ்ணர் கூறியது போல், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (ப.கீ. 18.66). ஆகையால் இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட ஒருவர், அதாவது, "நான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் என் அனைத்து தொழிலும் வெற்றி பெறும்," அவர்தான் கிருஷ்ணர் பிரதிநிதி. அவ்வளவுதான். நீங்கள் அதிகம் கல்வி கற்றோ அல்லது மிக உயர்ந்தவராகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே கிருஷ்ணர் கூறுவதை ஏற்றுக் கொண்டால், எவ்வாறு என்றால் அர்ஜுனர் கூறுவது போல், ஸர்வமேதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேசவ (ப.கீ. 10.14). "என் அன்புக்குரிய கிருஷ்ணா, கேசவா, தாங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் எதுவானாலும், எந்த மாற்றமும் இல்லாமல், நான் அதை ஏற்றுக் கொள்வேன்." அதுதான் பக்தா. ஆகையினால் அர்ஜுனர் பக்தொஸி என்று நியமிக்கப்படுகிறார். இதுதான் பக்தாவின் வேலை. நான் ஏன் கிருஷ்ணரை என்னைப் போல், ஒரு சாதாரண மனிதராக நினைக்க வேண்டும்? இதுதான் பக்தருக்கும், பக்தியற்றவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஒரு பக்தருக்கு தெரியும், "நான் முக்கியதுவமற்றவன், கிருஷ்ணரின் ஒரு சிறு பகுதி. கிருஷ்ணர் ஒரு தனி நபர். நானும் ஒரு தனி நபர். ஆனால் அவருடைய சக்தியையும் என்னுடைய சக்தியையும் பற்றி சிந்திக்கும் போது, நான் மிகவும் முக்கியத்துவமற்றவனே." இதுதான் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளுதல். இதில் கஷ்டமே இல்லை. ஒருவர் வெறுமனே விசுவாசமாக இருக்க வேண்டும், பாவியாக அல்ல. ஆனால் ஒரு பாவியால் அவரை புரிந்துக் கொள்ள முடியாது. பாவி மனிதன், அவர் சொல்வார், "ஓ, கிருஷ்ணரும் மனிதரே. நானும் மனிதன்தான். நான் ஏன் கடவுளாக இருக்க கூடாது? அவர் வெறுமனே கடவுளா? இல்லை, நானும் தான். நான் கடவுள். நீங்கள் கடவுள் அனைவரும் கடவுள்." எவ்வாறு என்றால் விவேகானந்தர் கூறியது போல், "நீங்கள் ஏன் பகவானை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? பல பகவான்கள் தெருவில் நோக்கமின்றித் திரிந்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" நீங்கள் பாருங்கள். இதுதான் அவருடைய மெய்ஞ்ஞானம். மேலும் அவர் பெரிய மனிதராகிறார்: "ஓ, அவர் அனைவரையும் கடவுளாக பார்த்துக் கொண்டிருக்கிறார்." இந்த முட்டாள்தனம், இந்த அயோக்கியத்தனம், உலகமெங்கிலும் நடந்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றால் என்ன, அவருடைய சக்தி என்ன, கடவுள் என்பதன் பொருள் என்ன, என்பதை ஒருவருக்கும் தெரியவில்லை. அவர்கள் சில போக்கிரிகளை பகவானாக ஏற்றுக் கொள்கிறார்கள். இக்காலத்தில், அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு அயோக்கியர் வந்திருக்கிறார். அவரும் தன்னைத் தானே பகவானாக பிரகடனம் செய்கிறார். ஆகையால் இது ஒரு கீழ்தரமான காரியமாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு சிந்திக்க மூளை இல்லை அதாவது "நான் பகவானாக பிரகடனம் செய்கிறேன்; எனக்கு என்ன தெய்வசக்தி இருக்கிறது?" ஆக இதுதான் அந்த பரம இரகசியம். இதுதான் அந்த மர்மம். ஒரு பக்தர் ஆகாமல், பகவானைப் பற்றிய பரம இரகசியத்தை புரிந்துக் கொள்வது சாத்தியமல்ல. மேலும் கிருஷ்ணர் பகவத்-கீதையில், ஒருவர் எவ்வாறு தனனை அறிந்துக் கொள்ள முடியும் என்பதை கூறியிருக்கிறார். பக்த்யா மாமபிஜானாதி யாவான்யஷ்ச்சாஸ்மி தத்வத: (ப.கீ 18.55). வெறுமனே, பக்தியால் மட்டுமே. அவர் கூறியிருக்கலாம், "உயர்வான, உயர்தர அறிவு" அல்லது "யோகா செயல்முறை" அல்லது "நடிப்பதன் மூலம், மிகச் சிறந்த கர்மியாக, தொழிலாளியாக ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்." இல்லை, அவர் சொன்னதில்லை, சொன்னதில்லை. ஆகையால், கர்மீகள், ஞானிகள், யோகிகள், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். அவர்களால் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முடியாது. அனைவரும் அயோக்கியர்கள். கர்மீகள் மூன்றாம்-தர அயோக்கியர்கள், ஞானிகள் இரண்டாம்-தர அயோக்கியர்கள், மேலும் யோகிகள் முதல்-தர அயோக்கியர்கள். அவ்வளவுதான்.