TA/Prabhupada 0096 - நாம் பாகவத என்னும் மனிதரிடமிருந்து கற்க வேண்டும்

Revision as of 04:30, 7 August 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0096 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 13.4 -- Miami, February 27, 1975

இதை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், "அமெரிக்கர், இந்தியர், இந்து, முஸ்லீம்," இவை அனைத்தும் என மனதில் இருக்கும் அசுத்தம். நீங்கள் உங்கள் மனத்தை தூய்மைப்படுத்துங்கள். ஹிர்தியன்தஹ-ஸ்தாஹ அபத்ராணி. அசுத்தமான பொருள் என் மனத்தினுல் இருக்கிறது, ஆகையால் நம் மனத்தை தூய்மைப்படுத்தினால், பிறகு நாம் இந்த பதவிப்பெயரிலிருந்து விடுபெறுவோம். நஷ்ட-ப்ராயேஷூ அபத்ரேஷூ நித்யம் பாகவத சேவயா (ஸ்ரீ.பா 1.2.18). நஷ்ட-ப்ராயேஷூ. இந்த அசுத்தங்கள், நாம் தவறாமல் ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்-கீதை கேட்டு வந்தால் தூய்மைப்படுத்தப்படும். நித்யம் பாகவத, மேலும் பாகவத என்றால் பாகவத புத்தகமும் பாகவத மனிதரும் ஆகும். பாகவத மனிதர் ஆன்மீக குரு ஆவார். அல்லது யாராவது ஒரு உன்னத பக்தர். அவர் ஒரு பாகவத, மஹா பாகவத, பாகவத. ஆகையால் பாகவத சேவயா என்றால் பகவத்-கீதையையும் பாகவதமும் மட்டும் படிப்பதல்ல, ஆனால் நாம் பாகவத என்னும் மனிதரிடமிருந்து கற்க வேண்டும். அதுதான் தேவைப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார், பாகவத ப்ராசியா பாகவத-ஸ்தானெ: "நீங்கள் பாகவத கற்க வேண்டுமென்றால், மெய்ஞ்ஞானம் பெற்ற பாகவத என்னும் மனிதரிடம் செல்லுங்கள்." தொழில் வல்லுநராக இல்லாவிட்டால். அது உங்களுக்கு உதவாது. அதிகாரப்பூர்வமான வல்லுநர் - நான் கோயிலுக்குச் செல்கிறேன், தேவாலயத்திற்கு, பிறகு மீண்டும் நரக வேதனையை அனுபவிக்கிறேன், இல்லை. நீங்கள் சும்மா பாகவத மனிதரிடம் தோழமை கொள்ளுங்கள், அவர் மெய்ஞ்ஞானம் பெற்றவர் மேலும் அவரிடமிருந்து அதே புத்தகம், அதே அறிவைப் பற்றி கேளுங்கள். கிருஷ்ணரின் பிரதிநிதி. கிருஷ்ணர் கூறியது போல், தத் சமாசெனமெ ஸ்ருனு. மெ ஸ்ருனு: "என்னிடமிருந்தோ அல்லது என் பிரதிநிதியிடமிருந்தொ கேளுங்கள். அப்போது நீங்கள் நற்பயன் பெறுவீர்கள்." ஆகையால் இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ள நோக்கம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு வாய்ப்பளித்து இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த பிறவியிலும். ஏரூபெ ப்ரமாண்டே ப்ரமிதெ கோன்பாக்கியவான் ஜீவ குரு-க்ருஷ்ண-க்ருபாய பாய பக்தி-லதா பீஜ (சி. சை. மத்ய 19.151) ஆகையால் இது நம் கடமை, நாம் இந்த கடமையை கிருஷ்ணர் சார்பில் ஏற்றுக்கொண்டுள்ளோம். கிருஷ்ணர் நேரிலேயே கற்பிக்க வந்தார். எவ்வாறு என்றால் அவருடைய ஸ்ரீமத் பாகவதத்தை விட்டுச் சென்றார். பிறகு அவருடைய பக்தர்களிடம் மக்களுக்கு பொதுவாக விவரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். நாங்கள் அதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எதையும் உருவாக்கவில்லை அல்லது எங்கள் சொந்த கருத்து எதுவும் இல்லை. சொத்தும் நிலபுலனும் அங்கிருக்கிரது. நாங்கள் வெறுமனே சேவகனாக விநியோகிக்கிறோம். அவ்வளவு தான். எங்களுக்கு சிரமமே இல்லை... நாங்கள் வெறுமனே பகவத் கீதையை, கிருஷ்ணரின் அறிவுரைகளை அதில் உள்ளபடி கொடுத்தால், பிறகு எங்கள் கடமை முடிந்தது. நாங்கள் எதையும் உருவாக்க வேண்டியதில்லை, அதுவுமின்றி எங்களுக்கு எதையும் உருவாக்கும் சக்தி கிடையாது. எவ்வாறு என்றால் அங்கே மற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் புதுமையான கருத்துக்களை உருவாக்குவார்கள், புதுமாதிரியான தத்துவம், அனைத்தும் அர்த்தமற்ற சொற்கள். அது பயன் அளிக்காது. உண்மையான அறிவை ஏற்றுக் கொள்ளுங்கள்.