TA/Prabhupada 0114 - ஒரு பண்புள்ள மனிதர் அவர் பெயர் கிருஷ்ணர்

Revision as of 12:39, 12 January 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0114 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture -- Laguna Beach, September 30, 1972

பகவத்-கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது,

dehino 'smin yathā dehe
kaumāraṁ yauvanaṁ jarā
tathā dehāntaraṁ-prāptir
dhīras tatra na muhyati
(BG 2.13)

நீங்கள், நான் - நாம் ஒவ்வொருவரும் - இந்த உடம்பின்னுள் அடைக்கப்பட்டுள்ளோம். நான் ஆன்மீக ஆத்மா; நீங்கள் ஆன்மீக ஆத்மா. அதுதான் வேத விதி, அஹம் ப்ரமாஸ்மி: "நான் ப்ரமன்." அப்படியென்றால் ஆன்மா, பரப்ரமன் அல்ல, தவறு செய்யாதீர்கள். பரப்ரமன் பகவான் ஆவார். நாம் ப்ரமன், பகவானின் அங்க உறுப்புகள், துண்டுகள். ஆனால் நித்தியமல்ல, நித்தியமானவர் வேறு. எவ்வாறு என்றால் நீங்கள் அமெரிக்கர், ஆனால் உங்கள் அதிபர் திரு நிக்ஸன் நித்திய அமெரிக்கர். ஆனால் நீங்கள் அதை சொல்ல முடியாது, "நான் அமெரிக்கர், ஆகையினால் நான்தான் திரு நிக்ஸன்." அவ்வாறு நீங்கள் சொல்ல முடியாது. அதேபோல், நீங்கள், நான், நாம் ஒவ்வொருவரும், ப்ரமன், ஆனால் அதற்காக நாம் பரப்ரமன் என்று அர்த்தமல்ல. பரப்ரமன் என்பவர் கிருஷ்ணர். ஈஸ்வர: பரமஹ கிருஷ்ணஹ (பிரச. 5.1).ஈஸ்வர: பரமஹ. ஈஸ்வர என்றால் கட்டுப்படுத்துபவர். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் ஓரளவுக்கு கட்டுப்படுத்துபவர். யாரோ ஒருவர் தன் குடும்பத்தை கட்டுப்படுத்துகிறார், தன் அலுவலகம், தொழிலையும் கட்டுப்படுத்துகிறார், சீடர்களை கட்டுப்படுத்துகிறார்கள். கடைசியாக அவர் ஒரு நாயை கட்டுப்படுத்துகிறார். அவருக்கு கட்டுப்படுத்த ஒன்றுமில்லை என்றால், அவர் கட்டுப்படுத்த ஒரு நாயை வளர்க்கிறார், ஒரு செல்ல நாய், ஒரு செல்ல பூனை. ஆகையால் அனைவரும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதுதான் உண்மை. ஆனால் நித்தியமான கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணரே. இங்கு கட்டுப்படுத்துபவர் என்றழைக்கப்படுபவர், மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறார். நான் என் சீடர்களை கட்டுப்படுத்தலாம், ஆனால் நான் மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறன், என்னுடைய ஆன்மீக குருவால். ஆகையால் ஒருவரும் சொல்ல முடியாது அதாவது "நான் முழுமையாக கட்டுப்படுத்துப்பவர்." என்று இல்லை. இங்கு கட்டுப்படுத்துபவர் என்று கூறப்படுபவர், நிச்சயமாக சில பரப்புக்குத்தான் கட்டுப்படுத்துவார், ஆனால் அவரும் கட்டுப்படுத்தப்படுகிறார். ஆனால் நீங்கள் யாரையாவது பார்த்தால் அதாவது அவர் கட்டுப்படுத்துபவர் மட்டுமே, வேறு யாராலும் கட்டுப்படாதவர், அவர்தான் கிருஷ்ணர். கிருஷ்ணரை புரிந்துக் கொள்வது ஒன்றும் மிக கடினமல்ல. அனைவரும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ள முயற்சியுங்கள், நாம் ஒவ்வொருவரும், ஆனால் அதே நேரத்தில் யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறோம். ஆனால் நாம் ஒரு பண்புள்ள மனிதரை கண்டுள்ளோம் அவர் பெயர் கிருஷ்ணர். அவர் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் யாராலும் கட்டுப்படுத்தப்படவில்லை. அவர்தான் பகவான். ஈஸ்வர:

īśvaraḥ paramaḥ kṛṣṇaḥ
sac-cid-ānanda-vigrahaḥ
anādir ādir govindaḥ
sarva-kāraṇa-kāraṇam
(Bs. 5.1)


ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக ஆன்ம ஞானமானது, அதிகாரப்புர்வமானது, நியாயமான மனிதரால் புரிந்துக் கொள்ளக் கூடியது. ஆகையால் நீங்கள் அன்புடன் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஆர்வம் கொண்டால், நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவீர்கள். அதுதான் உண்மை. ஆகையால் நீங்கள் எங்கள் இலக்கியங்களை படிக்க முயற்சி செய்யுங்கள். எங்களிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நீங்கள் வந்து பார்க்கலாம், நடைமுறையில் எங்கள் மாணவர்கள் எவ்வாறு செய்கிறார்கள், கிருஷ்ண பக்தி இயக்கத்தில் முன்னேறுகிறார்கள் என்று. அவர்களுடன் சேர்வதன்மூலம் நீங்களும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயலலாம். எவ்வாறு என்றால் ஒருவர் பொறியியளாறராக விரும்பினால், அவர் ஒரு தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். மேலும் பணியாட்களுடன், பொறியியளாறராகவும் சேர்ந்து, மேலும் படிப்படியாக அவரும் பொறியியளாறராகவும், தொழில்நுட்பளாலராகவும் ஆகலாம். அதேபோல், நாங்கள் இந்த மையங்களை திறந்துக் கொண்டிருப்பது சும்மா அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே, வீடுபேறு அடைவது எப்படி, ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை சென்றடைவது எவ்வாறு என்று கற்றுக் கொள்ள. அதுதான் எங்கள் குறிக்கொள். மேலும் மிக ஆன்ம ஞானமானது, அதிகாரப்பூர்வமான, வேதம். நாம் இந்த அறிவை கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொண்டிருக்கிறோம், அவர்தான் முழுமுதற் கடவுள். அதுதான் பகவத்-கீதை. நாம் பகவத்-கீதையை உண்மையுருவில் அளிக்கின்றோம், அர்த்தமற்ற கருத்துக்கள் இல்லாமல். பகவத்-கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், அவர்தான் முழுமுதற் கடவுள் என்று. நாங்களும் அதையே முன்மொழிகிறோம், அதாவது முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே. நாங்கள் அதை மாற்றவில்லை. கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறுகிறார், "என்னுடைய பக்தராகுங்கள். எப்பொழுதும் என்னையே நினையுங்கள். என்னை வணங்குங்கள். உங்களுடைய வணக்கத்தை எனக்கு அளியுங்கள்." நாங்கள் மக்கள் அனைவருக்கும் இதை கற்பிக்கிறோம் "நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை நினையுங்கள்- ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே." இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதினால், நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை நினைக்கிறீர்கள்.