TA/Prabhupada 0115 - என்னுடைய வேலை கிருஷ்ணரின் தகவலை எடுத்துச் சொல்வது மட்டுமே

Revision as of 05:23, 12 July 2019 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Los Angeles, July 11, 1971

ஆகையால், நான் மிகவும் திருப்தியடைகிறேன் அதாவது இந்த சிறுவர்கள் எனக்கு அன்புடன் உதவி செய்கிறார்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதில், கிருஷ்ணர் இவர்களை ஆசீர்வதிப்பார். நான் சிறப்பற்று இருக்கிறேன். எனக்கு திறனில்லை. என்னுடைய வேலை கிருஷ்ணரின் தகவலை எடுத்துச் சொல்வது மட்டுமே. எவ்வாறு என்றால் தபால் சேவகன் போல்: அவருடைய வேலை தபால்களை எடுத்து செல்வது மட்டுமே. தபாலில் இருக்கும் தகவலுக்கு அவர் பொறுப்பல்ல. அதன் எதிர் நடவடிக்கை.., ஒரு கடிதத்தை படித்தபின் அதை பெற்றவர் ஏதாவது உணரலாம், ஆனால் அந்த பொறுப்பு அந்த சேவகனுடையதல்ல. அதேபோல், என் பொறுப்பு என்னவென்றால், சீடர்கள் பரம்பரைப்படி, என் ஆன்மீக குருவிடமிருந்து நான் பெற்றேன். நான் அதே பொருளைத்தான் அளிக்கிறேன், ஆனால் எந்த கலப்படமும் இல்லாமல். அதுதான் என்னுடைய வேலை. அதுதான் என் கடமை. கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது போல் பொருளை நுண்மையாக அதேபோல் நானும் அளிக்க வேண்டும், அர்ஜுனரால் அளிக்கப்பட்டது போல், நம்முடைய ஆச்சார்யர்களால் அளிக்கப்பட்டது போல், பகவான் சைதன்யா, மேலும் கடைசியாக என் ஆன்மீக கூறு, பக்தி ஸித்தான்த சரஸ்வதீ கோஸ்வாமி மஹாராஜ். அதேபோல், நீங்களும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை அதே சக்தியோடு ஏற்றுக் கொண்டால், மேலும் மற்ற மக்களுக்கு பரப்பினால், உங்கள் மற்ற நாட்டவர்களுக்கும், நிச்சயமாக அது சக்தி நிறைந்ததாகும், ஏனென்றால் அதில் எந்த கலப்படமும் இல்லை. அங்கே பொய் இல்லை. அங்கே ஏமாற்றுதலும் இல்லை. அது தூய்மையான ஆன்மீக உணர்வு. சும்மா பயிற்சி செய்து அதை பரப்புங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாகும்.