TA/Prabhupada 0136 - சீடர் பரம்பரை வழியாக இந்த ஞானம் தொடர்ந்து வந்தது

Revision as of 08:44, 18 March 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0136 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:Ta-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture with Translator -- Sanand, December 25, 1975

ஆகையால் பகவான் என்றால் முழுமுதற் கடவுள். பூரண உண்மை மூன்று பிரிவுகளாக உணரப்படுகிறது: ப்ரஹ்மேதி பரமாத்மேத பகவான் இதி சப்த்யதே (SB 1.2.11). பூரண உண்மை முதலில் தனித்தன்மை வாய்ந்த ப்ரமனாக உணரப்படலாம், என்றாலும் அது ஞானிகளின் குறிக்கொள், மற்றும் அடுத்து, பரமாத்மா, அது யோகிகளின் குறிக்கொள், மேலும் இறுதியாக, பூரணத்துவத்தை புரிந்துக் கொள்ளும் கடைசி வார்த்தை உருவம், அதுவே முழுமுதற் கடவுள். இறுதியான அறிக்கை முழுமுதற் கடவுள், எவ்வாறு என்றால் நாம் புரிந்துக் கொண்டது போல் சூரிய பூகோளத்தில் அங்கே நித்தியமான ஒருவர் அல்லது சூரிய-நாராயண, அல்லது பிரதானமான ஒருவர் சூரிய கோளத்தினுள் இருக்கிறார். அவர் பெயரும் பகவத்-கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது - விவஸ்வான். பகவான் நான்காம் அத்தியாயத்தில் கூறுகிறார், இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம்: (BG 4.1). " நான் முதன் முதலாக இந்த ஆன்ம விஞ்ஞானத்தை, இந்த பகவத்-கீதையின் யோக முறையை, விவஸ்வான், சூரியதேவனுக்கு உபதேசித்தேன்." விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே' ப்ரவீத். மேலும் விவஸ்வான், சூரியத்தேவன், அவர் மனுவிற்கு உபதேசித்தார், மேலும் மனு அவர் மகனுக்கு உபதேசித்தார். இவ்வாறாக சீடர் பரம்பரை வழியாக இந்த ஞானம் தொடர்ந்து வந்தது. ஆகையால் நாம் ஞானத்தைப் பற்றி பேசும் போது, ஞானம், ஒரு தனி மனிதரிடமிருந்து தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆகையால் பூரண உண்மையை புரிந்துக் கொள்ளும் கடைசி வார்த்தை, பகவான், அவர் இந்த பகவத்-கீதையில் கூறுகிறார்.

ஆகையால் வியாசதேவ் திட்டவட்டமாக இங்கே குறிப்பிடுவது, பகவான் உவாச. அவர் கிருஷ்ணர் உவாச என்று கூறவில்லை, ஏனென்றால், சில நேரங்களில் கிருஷ்ணர், முட்டாள்களால் தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறார். ஆகையால் பகவான் உவாச, இந்த வார்த்தை என்றால், அவர் கூறும் எதிலும் தவறோ அல்லது குறைகளோ இல்லை. நம்மைப் போன்ற இயல்பானவர்களுக்கு நான்கு குறைபாடுகள் உள்ளன: ப்ரம ப்ரமாத விப்ரலிப்ஷா கரணாபாத்வ. ஆகையால் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரிடமோ அல்லது தன்னையறிந்தவரிடமோ, கிருஷ்ணரின் சேவகர்கள், கிருஷ்ணரை புரிந்துக் கொண்டவர்கள், அவர்களுக்கு அங்கே குறைபாடுகள் இல்லை. அவர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள். இந்த காரணத்திற்காக கிருஷ்ணர் இந்த அறிவுரை அளிக்கிறார்,

tad viddhi praṇipātena
paripraśnena sevayā
upadekṣyanti tad jñānaṁ
jñāninas tattva-darśinaḥ
(BG 4.34)

ஒருவர் உண்மையிலேயே பார்த்தோ அல்லது உண்மையாக உண்மையை உணர்ந்தால், நீங்கள் அறிவை அங்கிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் நாம் அத்தகைய நபரை அணுக வேண்டும். மற்றபடி, நாம் சில யூகம் செய்பவர்களை அணுகினால், நாம் உண்மையான அறிவை பெற முடியாது, ஆகையால் யூகம் செய்பவர்களாக இருப்பவர்களுக்கு, கடவுள் என்றால் என்னவென்று புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையினால், அவர்கள் தவறு செய்கிறார்கள் அதாவது, "கடவுள் இப்படி இருப்பார்," "கடவுள் அப்படி இருப்பார்," "அங்கே கடவுள் இல்லை," "அங்கு உருவம் இல்லை." அனைத்து முட்டாள்தனமான காரியங்களும் முன்மொழிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் பக்குவமற்றவர்கள். ஆகையினால் பகவான் கூறினார், அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதா: (BG 9.11). அவர் நம்முடைய நலனுக்காக மனித வடிவில் ஆவதரித்ததால், முட்டாள்களும் அயோக்கியர்களும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைக்கிறார்கள். பகவான் கூறினால், அஹம் பீஜ-ப்ரத: பிதா (BG 14.4), "நான் தான் தந்தையாக வித்திட்டவர்," ஆகையால் நாம், நம் தந்தை ஒரு மனிதர் என்று நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும், அவர் தந்தை ஒரு மனிதர், அவர் தந்தை ஒரு மனிதர், மேலும் ஏன் ஆதி சிறந்த மனிதர், அல்லது பரம பூரண தந்தை மட்டும் ஏன் மனிதரல்ல? ஏன்? ஆகையினால் நாம் பகவானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், பரம பூரணமானவர், ஞானம் நிறைந்தவர். ஆகையினால் இந்த பகவத்-கீதை, முழுமையான அறிவை, நிறைந்த ஞானமுள்ள முழுமுதற் கடவுளிடமிருந்து வந்தது. பகவத்-கீதையில் நாம் ஒரு வார்த்தையைக் கூட மாற்றக் கூடாது. அது மடமையாகும். ஆகையினால் எங்களுடைய இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த நெறிமுறையை பின்பற்றுகிறது. நாங்கள் எதையும் தான்தோன்றித்தனமாக உருவாக்கமாட்டோம். நாங்கள் வெறுமனே முழுமுதற் கடவுளால் கொடுக்கப்பட்ட தகவலை பரப்புகிறோம். மேலும் இது நடைமுறையில் சக்தி நிறைந்ததாக வந்துக்கொண்டு இருக்கிறது.