TA/Prabhupada 0172 - உண்மையான மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது தான்

Revision as of 13:45, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0172 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.5.30 -- Vrndavana, August 11, 1974

மதம் எதுவெனில் கிருஷ்ணரை சரணடைவது. இல்லையெனில், ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டது போல் , projjhita-kaitavo 'tra(SB 1.1.2) வகையான போலியான மதங்களும் , ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. விரட்டியடிக்கப்பட்டுவிட்டன , projjhita. கடவுளுடன் ஒன்றாவது..கடவுளாக ஆவது...அவதாரமாக ஆவது.. இந்த வகையான மத அமைப்புகள், மிக கண்டிப்புடன், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஏனெனில் அவை மதங்கள் அல்ல. உண்மையான மதம் என்பது கிருஷ்ணரை சரணடைவது மட்டுமே.

எனவே, இவ்வாறு சொல்லப்படுகிறது.:, yat tat saksad bhagavata uditam. நீங்கள் முழுமுதற் கடவுளை அணுக வேண்டும் என்றால் , நீங்கள் முழுமுதற் கடவுளின் ஆணைக்கு அடிபணிந்து இணங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தெரியாது, யார் முழுமுதற்கடவுள் என்றும் , அவரின் கட்டளை என்ன என்றும், கடவுளுடன் நமது பந்தம் என்னவென்றும்.. இந்த விஷயங்கள் அவர்களால் அறியப்படாதவை. இது பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும், ஏன் இதில் பக்தர்கள் ஏகபோக உரிமை எடுத்துக்கொள்கிறார்கள்? இதை பகவத் கீதையில் : bhaktya mam abhijanati yavan yas casmi tattvatah (BG 18.55). உங்களுக்கு கடவுள் யார் என்றோ, அல்லது கிருஷ்ணர் யார் என்றோ தெரியவேண்டுமென்றால் , நீங்கள், பக்தி மார்க்கத்தின் வழியாக, பக்தியின் வழியாக தான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு வழி இல்லை. கிருஷ்ணர் கூறுகிறார் , ஊக அறிவினாலோ, அறிவை சாகுபடி செய்யவதாலோ அவரை கண்டுகொள்ள இயலாது. பின்னர் அவர் இவ்வாறு கூறியிருக்கலாமே " ஞானத்தின் மூலமாக என்னை ஒருவர் கண்டுகொள்ளலாம் ", அவ்வாறு கூறவில்லை. . கர்மத்தின் மூலமாகவோ அல்லது யோகத்தின் மூலமாகவோ அவரை கண்டுகொள்ள முடியாது. சாஸ்திரத்தில் இதை பல இடங்களில் விவரித்திருக்கின்றனர். பக்தி மட்டுமே....பக்தி மட்டுமே. இந்த பக்தி வழிபாட்டை பரப்புவது, ஆன்மிக பெரியவர்கள், மகாத்மா போன்றவர்களின் கடமை.

இது மிகவும் ரகசியமானது. மற்றும் மனித இனத்திற்கு செய்யும் கருணையுள்ள சேவையாகும் . ஏனெனில் மக்கள் இந்த அறிவை பெறுவதற்காக தான் கஷ்டப்படுகிறார்கள். எனவே கிருஷ்ண உணர்வு இயக்கம் என்ற ஒன்று மட்டுமே - இதை நான் அறிவிக்க பெருமை படுகிறேன் - உண்மையிலேயே மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யும் இயக்கம் இது ஒன்று தான் நன்மையை செய்கிறது . மற்றவை எல்லாமே போலி இயக்கங்கள் தான். நிச்சயமாக கூறுகிறேன். அவர்களே வந்து சாஸ்திரங்களை படித்துவிட்டு, முடிவு செய்துகொள்ளட்டும். அவர்கள் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். இந்த பகவத் பக்தி மட்டுமே உண்மை . ஏனெனில், பக்தி சேவை செய்யாமல் பகவானை புரிந்து கொள்ள முடியாது. Bhaktya mam abhijanati yavan yas casmi tattvatah(BG 18.55). நீங்கள் சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், tattvatah கிருஷ்ணர் கூறுகிறார், முதலில் நீங்கள் அவரை புரிந்து கொள்ளவேண்டும். tattvatah அவரைப் புரிந்து கொள்வதற்காக, எடுத்த உடனே கோபியருடரான அவரது லீலையை எடுத்து மேலோட்டமாக புரிந்துகொள்ள கூடாது. ஏன் கோபியருடரான லீலையை படிக்கிறார்கள்? ஏன் அசுரர்களைக் கொன்ற லீலைகளை படிப்பதில்லை? ஏனெனில் அசுர வதங்களை கேட்க மக்கள் ஆர்வமாக இல்லை... கண்ணனுக்கும் கோபியருக்கும் உள்ள லீலா ஒரு ஆண் பெண் இடையில் நடக்கும் பரிவர்த்தனை போல் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணரின் மற்ற அற்புதங்களும் இருக்கின்றன. Paritranaya sadhunam vinasaya ca duskrtam (BG 4.8). இதுவும் கிருஷ்ணரின் லீலை தான் . அது கிருஷ்ண லீலா. ராமர் ராவணை கொன்றது போல். அதுவும் கிருஷ்ணரின் லீலை தான். . ராமர் லீலை, மற்றும் கிருஷ்ண லீலை.

நாம் கிருஷ்ணரின் அனைத்து லீலைகளையும் உயர்வானதாகவே எடுத்துக்கொள்ளவேண்டு... மற்ற லீலைகளை ஒதுக்கிவிட்டு, மிகவும் ரகசியமான விஷயங்கள் அடங்கியுள்ள பிருந்தாவன லீலைகளில் மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது மிகவும் ரகசியமானது. நாம் பந்தப்படாத நிலையை அடையும் வரை, இந்த உயர்வான ரகசிய லீலைகளை படிக்கக்கூடாது. அது மிகவும் கடினமான ஒரு தலைப்பு. ஏனினில் கிருஷ்ணரின் உண்மையான லீலையைப் புரிந்து கொள்ளாமல் , அதை அப்படியே செய்ய முயற்சி செய்து தவறி விழுகிறார்கள். நாம் விவாதிக்க விரும்பாத விஷயம் நிறைய இருக்கிறது. உண்மையாகவே நாம் கிருஷ்ண லீலா பற்றி தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருந்தால்.. எனில் முதலில் நாம் கிருஷ்ணர் யார் என்று புரிந்துகொள்ள வேண்டும், அவர் என்ன விரும்புகிறார், மற்றும் நாம் என செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டும் பின்னர் தான் நாம் கிருஷ்ணரின் ரகசிய லீலை பகுதிக்குள் செல்லமுடியும் . இல்லையென்றால் நாம் தவறாக புரிந்து கொண்டு தவறி விழுவோம்.