TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது

Revision as of 14:08, 5 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0175 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.8.33 -- Los Angeles, April 25, 1972

கடவுளுடன் தொடர்பில்லாத எந்த ஒரு இலக்கியமும், tad, tad vayasam tirtham, காகங்கள் இன்பமாக இருக்கும் இடம் போன்றது. காகங்கள் எங்கு இன்பமாக இருக்கும். இழிவான இடங்களில்... மற்றும் அன்னப்பறவைகள்.. அழகிய வெள்ளை நிற அன்னப்பறவைகள் மிகவும் தெளிவான நீரோடைகளில், மற்றும் தோட்டங்களில், இன்பமாக இருக்கின்றன எனவே பறவை மற்றும் மிருகங்களில் கூட இவ்வாறு வேறுபாடு உள்ளது. அன்னப்பறவைகளின் வர்கம் மற்றும் காகங்களின் வர்கம். இது இயற்கையான பாகுபாடு. காகம் அன்னப்பறவையிடம் செல்லாது .. அன்னப்பறவை காகத்திடம் செல்லாது அதேபோல , இந்த மனித சமுதாயத்தில் காகம் போன்ற மனிதர்களும் உண்டு. அன்னப்பறவை போன்ற மனிதர்களும் உண்டு. இங்கே வரும் மனிதர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். ஏனெனில் , இந்த இடத்தில் எல்லாமே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது. நல்ல தத்துவங்கள், நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல உடை, நல்ல மனம்... எல்லாமே நல்லதாக இருக்கின்றது. காக்கை வர்கத்தை போன்ற மனிதர்கள், விடுதிகளுக்கும், நிர்வாண நடனங்களுக்கும் செல்வர். எனவே, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் , அன்னப்பறவைகளின் வர்கத்தை போன்ற மனிதர்களுக்கானது. காக்கை வர்கத்தை சார்ந்தவர்களுக்கு இல்லை. ஆனால், காகத்தை நம்மால் அன்னப்பறவையாக மாற்ற முடியும். இதுவே எங்களின் தத்துவம். முன்னர் காகம் போல் இருந்தவர்கள், இப்பொழுது அன்னத்தை போல் நீந்துகின்றனர். இது நம்மால் சாத்தியம் தான். இதுவே கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நன்மை. அன்னப்பறவை காகமாக மாறுவது இந்த பொருள்சார்ந்த உலகத்தில் தான். கிருஷ்ணர் கூறுகிறார் : yada yada hi dharmasya glanir bhavati (BG 4.7). இந்த இயந்திர உடலில் உயிர் அடைக்கப்பட்டிருக்கிறது...., மனிதர்கள் புலன் உணர்வுகளை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக ஒரு உடலுக்கு பின் மற்றொரு உடல் . இது தான் நிலை. தர்மா என்றால் காகத்தை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது . இது தான் தர்மம் கல்வியறிவும் பண்பாடும் இல்லாத மனிதனை, கல்வியும் பண்பாடும் கொண்டவனாய் மாற்ற முடியும் என்பது போல் தான் இதுவும். கல்வி மூலமாக, பயிற்சியின் மூலமாக மாற்ற முடியும். அதற்கான வாய்ப்பு மனித வாழ்வில் இருக்கிறது. ஒரு நாயினை என்னால் பக்தனாக மாற்ற முடியாது .. அது கடினம். அது கூட செய்ய முடியும். ஆனால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் இல்லை . சைதன்ய மகாபிரபு செய்தது போல. அவர் ஒரு முறை காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது , புலிகள், பாம்புகள், மற்றும் மான்கள் இருந்தன. அவை அனைத்துமே பக்தர்களாயின. சைதன்ய மகாபிரபு கடவுளின் உருவானவர் . அவரால் இது சாத்தியமாகும் .. நம்மால் இதை செய்ய முடியாது. ஆனால் நாம் இந்த மனித சமூகத்தில் இதனை செய்யமுடியும். ஒருவன் எவ்வளவு மோசமாக சென்றிருந்தாலும் . நம்முடைய வழிமுறைகளை கடைபிடித்தால் . நிச்சயம் அவன் மாற முடியும். இதற்கு பெயர் தான் தர்மம். ஒருவனை அவனின் சுயநிலைக்கு கொண்டு வருவதே தர்மம். அது தான் தர்மம். அதில் வெல்வேறு கோணங்கள் இருக்கலாம். ஆனால் உண்மையான நிலை நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதே ஆகும். மற்றும் நாம் நம் உண்மையான நிலையை, அதாவது நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்பதை உணர்கிறோமோ அதுவே நம் அசலான நிலையாகும். அது தான் ப்ரஹ்ம பூத நிலை .(SB 4.30.20). அவரின் ப்ரஹ்ம நிலையை உணர்ந்து , கண்டுகொள்வது