TA/Prabhupada 0176 - கிருஷ்ணரை நீங்கள் நேசித்தால் அவர் எப்பொழுதுமே உங்களுடனேநிலைத்திருப்பார்

Revision as of 15:05, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0176 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.8.45 -- Los Angeles, May 7, 1973

நம்மிடம் இந்த பலமான சக்தி உள்ளது. ஆனால் நமக்கு தெரியாது. உதாரணமாக இதை எடுக்கலாம். கஸ்தூரி மான் அதனுடைய தொப்புளில், கஸ்தூரி மணத்தை கொண்டுள்ளது. அந்த மணம் மிக நன்றாக இருக்கிறது. அதனால், அது இங்கும் அங்கும், இங்கும் அங்கும் தாவி கொண்டிருக்கிறது இந்த மணம் எங்கிருந்து வருகிறது? அந்த மானிற்கு தெரியாது, அந்த வாசனை அதனுடைய தொப்புளில் இருக்கிறது என்று. அதனுள்ளேயே நறுமணத்தை வைத்துக்கொண்டு அது வெளியே தேடுகிறது.. எங்கே இந்த மணம் வருகிறதென்று. இதேபோல , நமக்குள், பல உபயோகப்படுத்தப்படாத ஆற்றல் மிகுந்த சக்திகள் உள்ளன. நாம் அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் யோகத்தை பயிற்சி செய்து வந்தால் , நீங்கள் அவற்றில் சிலவற்றை நன்றாக கண்டுபிடிக்க முடியும். பறவைகள் பறப்பதை போல் நம்மால் பறக்க இயலாது. சில நேரங்களில், நாம் ஆசை படுகிறோம்.. " எனக்கு புறாவின் இறக்கை வேண்டும் "... சில கவிதைகள் உள்ளன " நான் உடனே பறந்து விடுவேன்..". ஆனால் அந்த சக்தி உங்களிடம் கூட உள்ளது நீங்கள் யோகத்தை சரியான முறையில் பயிற்சி செய்தால் , நீங்களும் காற்றில் பறக்கலாம்.. அது சாத்தியம். சித்தலோகா என்று ஒரு கிரகம் உள்ளது. சித்தர்களின் உலகத்தில் உள்ள சித்தர்கள், இத்தகு ஆற்றல்களை பெற்றுள்ளனர். நாம் நிலவிற்கு செல்ல பல உபகரணங்களுடன் கஷ்டப்படுகிறோம். .

ஆனால் சித்தர்களோ மிக எளிதாக, அவர்கள் நினைத்த மாத்திரத்தில், பறக்கும் சக்தி வாய்ந்தவர்கள். அப்பேற்பட்ட அரிய சக்தி நம் அனைவரிடமும் உள்ளது. அதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். Parasya saktir vividhaiva sruyate (CC Madhya 13.65, purport). நமக்குள் உபயோகப்படுத்தப்படாத சக்திகள் உள்ளன. அவைகளை வெளிக்கொணர வேண்டும் . இப்போது நாம் கிருஷ்ண உணர்வை வெளிக்கொணர்வது போல .. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் யார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் திடமான பயிற்சியின் மூலம் கிருஷ்ணர் யார் என்பதையும், அவருக்கும் நமக்கும் உள்ள உறவையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மனித வாழ்க்கை என்பது நல்லவற்றை விதைப்பதற்காக இருப்பது. உணவு, உடை, இருப்பிடம், உறவு போன்றவற்றை தேடி அலைவது அல்ல. இவைகள் எல்லாம் ஏற்கனவே உள்ளன. .. Tasyaiva hetoh prayateta kovido na labhyate... (SB 1.5.18). எனவே இவைகளை பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை. ஏனெனில் இவை எல்லாம் ஏற்கனவே நமக்கு உள்ளன. பறவைகள் மற்றும் விலங்குகளுக்கே இவை எல்லாம் எளிதாக கிடைக்கும் போது மனிதரைப் பற்றி கூற என்ன இருக்கிறது. ? ஆனால் மனிதர்கள் மூடர்களாகிவிட்டனர். அவர்கள் உணவு ,உடை, உறவு பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதிலேயே மூழ்கியுள்ளனர். இந்த சமூகம் தவறாக வழிநடத்தப்படுகிறது. இது போன்ற விஷயங்களுக்கு நமக்கு எந்த குறையும் இல்லை. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எந்த குறையும் இன்றி இவையெல்லாம் கிடைப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. எனவே மனிதர்களுக்கு மட்டும் எவ்வாறு பிரச்சினைகள் வரும்.? எனவே இப்படி ஒரு பிரச்சினையே நமக்கு இல்லை... நமக்கு இருக்கும் உண்மையான பிரச்சினை பிறப்பு இறப்பு முதுமை நோய் போன்றவையாகும். இவைகளைத் தடுப்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும். கிருஷ்ண உணர்வு இயக்கம் இந்த பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது. கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால், tyaktva deham punar janma naiti (BG 4.9), மறுபிறவி என்பதே கிடையாது.

உன்னதமான இந்த இயக்கத்தின் கொள்கைகள் மூலம், கிருஷ்ணரிடம் நட்பு வைத்துக்கொண்டால் , கிருஷ்ணரிடம் பேசலாம். " கிருஷ்ணா என்னுடன் இன்னும் சிறிது நாட்கள் இருப்பாயா ?" என்று யுதிஷ்டிர மஹாராஜா கேட்டது போல... எனவே, சில நாட்களுக்காக மட்டுமல்ல, கிருஷ்ணரை நாம் நேசித்தால் , எப்பொழுதுமே நம்முடன் இருப்பான் ..

மிக்க நன்றி